எமது தொடர்பாடல் நிலையத்துடன் 1979 அல்லது + 94 777 77 1979 ஆகிய இலக்கங்களில் அல்லது எமது பயணச்சீட்டு அலுவலகங்களுடன் அழைப்பினை ஏற்படுத்துங்கள். முற்பதிவுகளுக்கு ஒருசில ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கக் கூடியதாக இருப்பதால், வெளியேறும் வரிசையின் பாதுகாப்புக் கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு முதல் வருபவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும். விமான நிலையத்திலும் கிடைக்கக் கூடியதைப் பொறுத்து கால் இடவசதி கொண்ட ஆசனங்களை உங்களால் முற்பதிவு செய்ய முடியும்.
இங்கு வழங்கப்பட்டுள்ள கட்டணங்கள் ஒவ்வொன்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்லுபடியானவை
கொழும்பு / ஐரோப்பா அல்லது விவி – 50 அமெரி. டொலர்
கொழும்பு / ஜப்பான் மற்றும் சீனா அல்லது விவி – 50 அமெரி. டொலர்
கொழும்பு / ம.கிழக்கு அல்லது விவி – 30 அமெரிக்க டொலர்
கொழும்பு / தென்கிழக்காசியா – 30 அமெரிக்க டொலர்
கொழும்பு / இந்தியா மற்றும் மாலே அல்லது விவி – 20 அமெரிக்க டொலர்
*விவி - அதே திசையில் மீளப் பயணிப்பதைக் குறிக்கும்.
வெளியேறும் வரிசையில் அமைந்துள்ள கால் இடவசதி இருக்கையை தேர்ந்தெடுக்கும் பயணிகள் பின்வரும் தேவைப்பாடுகளை சந்திப்பது அவசியமாகும்.
ஸ்ரீலங்கனினால் சந்தைப்படுத்தப்படும் குறியீட்டுப்பங்குகளைக் கொண்ட விமானங்களில் இது செல்லுபடியாகாது. யு.எல். இன் கீழ் செயற்படுத்தப்படும் விமானங்களிலும் ஸ்ரீலங்கன் விமான சேவையினால் விநியோகிக்கப்படும் பயணச்சீட்டுக்களுக்கும் மாத்திரமே இது செல்லுபடியாகும்.
விமான சேவையின் பாதுகாப்புக் கொள்கை அடிப்படையில் விமான நிலையத்தில் எமது பயணிகளை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் , சுயேச்சையாக தீர்மானம் மேற்கொள்ளும் சுதந்திரம் நிறுவனத்துக்கு உண்டு. பாதுகாப்பு அல்லது செயற்பாட்டுக் காரணங்களுக்காக விமான நிலையத்தில் பயணிகள் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில், கால் இடவசதி ஆசனத்திற்காக அறவிடப்பட்ட கட்டணம் திருப்பி வழங்கப்படும். உ+ம்: சக்கரவண்டி, பாதுகாவலர் உடனில்லாத வயது குறைந்தோர், சிறுவர்கள், மூத்தோர், மருத்துவ ரீதியாக உடல் தகுதி இல்லாத பயணிகள் உள்ளிட்டோர் இந்த வசதியினைப் பெற தகுதி அற்றவர்கள் ஆவர்.
கால் இடவசதி இருக்கைக்கான கட்டணம் இடத்திற்கு ஏற்ற வகையில் வித்தியாசப்படும். இவை ஒரு தடவை கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் பணத்தை திரும்பப் பெறவோ இன்னுமொருவருக்கு மாற்றீடு செய்யப்படவோ முடியாது.
விமானத்தின் வகையை மாற்றம் செய்வதாலோ பாதுகாப்பு அல்லது செயற்பாட்டு காரணங்களுக்காகவோ ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்ட கால் இடவசதி இருக்கையொன்றை விமான சேவை நிறுவனத்தால் வழங்க முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அறவிடப்பட்ட கட்டணம் திரும்ப வழங்கப்படும்.
விமானங்களின் வகையைப் பொறுத்து 50 எ,சி,எச், கே ஆகிய ஆசன வரிசைகள் மாத்திரமே முற்பதிவுகளுக்காகக் கிடைக்கும்.
புறப்படுவதற்கு 03 மணித்தியாலங்களுக்கு முன்னதாக எமது தொடர்பாடல் நிலையத்தை அல்லது பயணச்சீட்டு அலுவலகங்களை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்வதன் மூலம் கால் இடவசதி இருக்கையினை முற்பதிவு செய்யலாம். அவ்வாறு முற்பதிவு செய்ய முடியாமல் போனால் அல்லது கிடைக்கும் வசதிகள் இல்லாத பட்சத்தில் தயவு செய்து உள்நுழையும் கருமபீடத்தில் மீண்டும் அதனைக் கேட்டறிந்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
கால்களுக்கு கூடுதல் இடவசதி கொண்ட ஆசனமொன்றிற்காக செலுத்தப்பட்ட கட்டணம் மீளச்செலுத்தப்படவோ அல்லது மாற்றீடு செய்யப்படவோ மாட்டாது.
கால்களுக்கு கூடுதல் இடவசதி கொண்ட ஆசனங்களுக்காக செய்யும் முற்பதிவானது குறித்த விமானமொன்றிற்கு மாத்திரம் மட்டுபடுத்தப்பட்டது ஆகையினால் இதற்காக செலுத்தப்பட்ட கட்டணம், திகதி அல்லது பாதை மாற்றத்துடன் தொடர்ந்தும் செல்லுபடியாகாது.
Last updated date - 01st July 2024