பயண அனுமதிக்கான நிபந்தனைகள்

பயண அனுமதிக்கான நிபந்தனைகள்

கட்டுரை 1 இந்த நிபந்தனைகளில் குறிப்பிட்ட சில சொற்களின் அர்த்தம்

1.1   இந்த நிபந்தனைகளை நீங்கள் படிக்கும்போது இவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:

"நாங்கள்", "எங்கள்" "எங்களை" முதலிய சொற்கள் எல்லாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தைக் குறிக்கும்.

"நீங்கள்", "உங்களுடைய" "நீங்களே" முதலிய சொற்கள் எல்லாம், ஒரு டிக்கெட்டைக் கொண்டு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகின்ற ஏதேனும் நபரைக் குறிக்கும் (விமானிக் குழு உறுப்பினர்களைத் தவிர). "பயணி"என்பதற்கான வரையறையையும் பார்க்கவும்).

ஒப்புக்கொள்ளப்பட்ட நிறுத்த இடங்கள் என்பவை, புறப்படும் இடம், சென்று சேரும் இடம் ஆகியவை தவிர்த்து, டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது உங்கள் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ள நிறுத்த இடங்களாக எங்கள் கால அட்டவணைகளில் காண்பிக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகும்.

விமான நிறுவனத்தின் ஒதுக்கப்பட்ட குறியீடு என்பது குறிப்பிட்ட விமான நிறுவனத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு அல்லது மூன்று எழுத்துக்களைக் கொண்ட சுருக்கப் பெயர் ஆகும்.

அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட் என்பது, எங்கள் விமானப் பயணத்திற்கான விற்பனைக்காக எங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக எங்கள் சேவைகளில் நாங்கள் நியமித்துள்ள பயணிகளுக்கான விற்பனை ஏஜெண்ட்டைக் குறிக்கும்.

பேகேஜ் என்பது உங்கள் பயணத்தின் தொடர்பாக நீங்கள் உங்களுடன் கொண்டு வருகின்ற தனிப்பட்ட பொருட்களைக் குறிக்கும். வேறு வழியில் குறிப்பிடப்பட்டால், செக் செய்த மற்றும் செக் செய்யாத உங்கள் இரண்டு வகை பேகேஜ்களும் இதில் அடங்கும்.

பேகேஜ் செக் என்பது, செக் செய்த உங்கள் பேகேஜை பயணத்தில் கொண்டு செல்வது தொடர்பாக டிக்கெட்டில் உள்ள பகுதிகளைக் குறிக்கிறது.

பேகேஜ் அடையாளச் சீட்டு என்பது செக் செய்த பேகேஜை அடையாளம் காண்பதற்காக மட்டுமே வழங்கப்படுகின்ற ஓர் ஆவணத்தைக் குறிக்கிறது.

விமான நிறுவனம் (கேரியர்) என்பது எங்களைத் தவிர்த்து பிற விமான நிறுவனங்களைக் குறிக்கிறது, அந்த நிறுவனங்களுக்கான ஒதுக்கப்பட்ட குறியீடு உங்கள் டிக்கெட் அல்லது இணைப்பு டிக்கெட்டில் இருக்கும்.

செக் செய்த பேகேஜ் என்பது, நாங்கள் எங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு உங்களுக்கு ஒரு பேகேஜ் செக்கை வழங்குகின்ற பேகேஜைக் குறிக்கும்.

செக்-இன் கால வரம்பு என்பது விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ள நேர வரம்பாகும். இந்த நேர வரம்பிற்குள் உங்கள் செக்-இன் செயல்முறைகள் அனைத்தையும் நீங்கள் முடித்து, போர்டிங் பாஸ் பெற்றிருக்க வேண்டும்.

ஒப்பந்த நிபந்தனைகள் என்பது உங்கள் டிக்கெட்டில் அல்லது பயணத்திட்டம்/ரசீதில் வழங்கப்பட்டுள்ள அல்லது அவற்றுடன் சேர்த்து உங்களுக்கு வழங்கப்படுகின்ற அறிக்கைகளைக் குறிக்கும். இவை ஒப்பந்த விதிமுறைகள் என்று அடையாளம் காணப்படும், மேலும் இந்த பயண அனுமதிக்கான நிபந்தனைகள் மற்றும் அறிவிப்புகளைக் கொண்டிருக்கும்.

இணைப்பு டிக்கெட் என்பது மற்றொரு டிக்கெட் தொடர்பாக வழங்கப்படும் ஒரு டிக்கெட் ஆகும். இவை இரண்டும் சேர்ந்து பயணத்திற்கான ஒரே ஒப்பந்தமாகக் கருதப்படும்.

சாசனம் என்பது பின்வரும் ஆவணங்களில் எதையேனும் குறிக்கும்:

  • 12 அக்டோபர் 1929 அன்று வார்சாவில் சர்வதேச விமானப் பயணம் தொடர்பாக குறிப்பிட்ட சில விதிகளின் ஒருங்கிணைப்புக்கான சாசனம் (இனி வார்சா சாசனம் என்று குறிப்பிடப்படும்);
  • 28 செப்டம்பர் 1955 அன்று தி ஹேக்யூவில் திருத்தப்பட்ட வார்சா சாசனம்.
  • மாண்ட்ரீல் எண் 1 கூடுதல் நெறிமுறை சேர்த்து திருத்தப்பட்ட வார்சா சாசனம் (1975);
  • தி ஹேக்யூவில் திருத்தப்பட்டு, மாண்ட்ரீல் எண் 2 கூடுதல் நெறிமுறையும் சேர்த்து திருத்தப்பட்ட வார்சா சாசனம் (1975);
  • தி ஹேக்யூவில் திருத்தப்பட்டு, மாண்ட்ரீல் எண் 4 கூடுதல் நெறிமுறையும் சேர்த்து திருத்தப்பட்ட வார்சா சாசனம் (1975);
  • குவாடலஜரா கூடுதல் சாசனம் (1961);
  • மாண்ட்ரீல் சாசனம் (1999)

கூப்பன் என்பது பேப்பர் வடிவ விமானக் கூப்பன், எலக்ட்ரானிக் கூப்பன் இரண்டையும் குறிக்கும். பெயர் குறிப்பிட்ட பயணி பயணம் செய்யத் தகுதி அடைவார்.

சேதம் என்பது, விமானப் பயணம் அல்லது நாங்கள் வழங்கும் பிற சேவைகளின் தொடர்பாக அல்லது அவற்றால் பயணிக்கு நேரும் மரணம், காயம், உடல் பாதிப்பு, பேகேஜ் இழப்பு, பகுதியளவு இழப்பு, திருடு போதல் அல்லது பேகேஜிற்கு ஏற்படும் பிற சேதத்தைக் குறிக்கும்.

நாட்கள் என்பது வாரத்தின் ஏழு நாட்கள் உட்பட காலண்டர் நாட்களைக் குறிக்கும். இருப்பினும் அறிவிப்பு நோக்கத்திற்காக, அறிவிப்பு அனுப்பப்பட்ட அந்த நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது; மேலும் ஒரு டிக்கெட்டின் செல்லுபடிக் காலத்தின் அளவைத் தீர்மானிக்கும் நோக்கங்களுக்கு, டிக்கெட் வழங்கப்பட்ட அல்லது விமானப் பயணம் நடைபெற்ற நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

எலக்ட்ரானிக் கூப்பன் என்பது எங்கள் தரவுத்தளத்தில் வைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் விமானக் கூப்பன் அல்லது பிற மதிப்பு ஆவணத்தைக் குறிக்கும்..

எலக்ட்ரானிக் டிக்கெட் என்பது எங்களால் அல்லது எங்கள் சார்பாக வழங்கப்படுகின்ற பயணத்திட்டம்/ரசீது, எலக்ட்ரானிக் கூப்பன்கள், மற்றும் பொருந்தினால் போர்டிங் ஆவணத்தைக் குறிக்கும்.

விமானக் கூப்பன் என்பது டிக்கெட்டில், "பயணத்திற்கு நன்று" என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியைக் குறிக்கும் அல்லது எலக்ட்ரானிக் டிக்கெட்டில் எலக்ட்ரானிக் கூப்பனைக் குறிக்கும், நீங்கள் பயணம் செய்யக்கூடிய குறிப்பிட்ட இடங்கள் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்.

தடுக்க முடியாத இக்கட்டு என்பது, உங்கள் கட்டுப்பாட்டிற்கும் அப்பால் உள்ள வழக்கத்திற்கு மாறான மற்றும் முன்பே கணிக்க முடியாத சூழ்நிலைகள், முற்றிலும் மிகுந்த கவனத்துடன் இருந்தாலும் தவிர்க்க முடியாத விளைவுகளைக் குறிக்கும்.

பயணத்திட்டம்/ரசீது என்பது, எலக்ட்ரானிக் டிக்கெட்டுகள் கொண்டு பயணம் செய்கின்ற பயணிகளுக்கு எங்களால் அல்லது எங்கள் சார்பாக வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆவணங்களைக் குறிக்கும். பயணியின் பெயர் விமானத் தகவல் மற்றும் அறிவிப்புகள் இருக்கும்.

பயணி என்பது, உறுப்பினர்கள் தவிர, ஒரு டிக்கெட் மூலம் விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகின்ற அல்லது அழைத்துச் செல்லப்பட இருக்கின்ற நபரைக் குறிக்கும். ("நீங்கள்", "உங்களை" "நீங்களே" ஆகிய சொற்களுக்கான வரையறையையும் பார்க்கவும்).

பயணிக் கூப்பன் அல்லது பயணி ரசீது என்பது எங்களால் அல்லது எங்கள் சார்பாக வழங்கப்பட்ட டிக்கெட்டில் உள்ள ஒரு பகுதியைக் குறிக்கும், அதில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும், அதை நீங்களே வைத்திருக்க வேண்டும்.

ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸ் என்பது, பல முன்னணி நாணயங்களின் மதிப்பின், சர்வதேச பண நிதி அமைப்பு வரையறுக்கின்ற, சர்வதேச கணக்கு அலகாகும். ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸின் நாணய மதிப்புகள் வங்கி தினம் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும், மீண்டும் கணக்கிடப்படும். இந்த மதிப்புகள் பெரும்பாலான வணிக ரீதியான வங்கிச் சேவை நிறுவனங்களுக்குப் பரிச்சயமானதாகும், மேலும் முன்னணி நிதிப் பத்திரிகைகளில் இவை குறித்து அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்படும்.

ஸ்டாப் ஓவர் என்பது உங்கள் பயணத்தில் நீங்கள் புறப்பட்ட இடத்திற்கும் சென்று சேர வேண்டிய இடத்திற்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள நிறுத்தத்தைக் குறிக்கும்.

கட்டண விவரம் என்பது, ஒரு விமான நிறுவனம் தேவைப்படும்பட்சத்தில் தகுந்த அதிகாரிகளிடம் தாக்கல் செய்கின்ற, வெளியிடப்பட்ட கட்டணங்கள் மற்றும்/அல்லது தொடர்புடைய பயண அனுமதிக்கான நிபந்தனைகளைக் குறிக்கும்.

டிக்கெட் என்பது, "“பயணிக்கான டிக்கெட் மற்றும் பேகேஜ் செக்" என்று பெயரிடப்பட்ட ஆவணம் அல்லது எலக்ட்ரானிக் டிக்கெட்டைக் குறிக்கும். இவை எங்களால் அல்லது எங்கள் சார்பாக வழங்கப்படும், ஒப்பந்த நிபந்தனைகள், அறிவிப்புகள், கூப்பன்கள் ஆகியவை இதில் இருக்கும்.

செக் செய்யப்படாத பேகேஜ் என்பது செக் செய்த பேகேஜ் தவிர உங்களிடம் உள்ள மற்ற பேகேஜைக் குறிக்கும்.


கட்டுரை 2 பொருந்தும் தன்மை

2.1   பொது

2.2 மற்றும் 2.4 ஆகிய கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டால் தவிர, உங்களுக்கு நாங்கள் சட்டப்பூர்வப் பொறுப்பேற்கின்ற விமானங்கள் அல்லது விமான செக்மென்ட்களுக்கு மட்டுமே எங்கள் பயண அனுமதிக்கான நிபந்தனைகள் பொருந்தும்.

2.2   சார்ட்டர் செயல்பாடுகள்

சார்ட்டர் ஒப்பந்தத்திற்கு இணங்க பயணம் அனுமதிக்கப்பட்டால், குறிப்பின் மூலம் அல்லது பிற வழிகளில் சார்ட்டர் ஒப்பந்தம் அல்லது டிக்கெட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவிற்கு மட்டுமே பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகள் பொருந்தும்.

2.3   குறியீட்டுப் பகிர்வுகள்

சில சேவைகளில் பிற விமான நிறுவனங்களுடன் நாங்கள் சேர்ந்து சில ஏற்பாடுகளைச் செய்யலாம், இதை "குறியீட்டுப் பகிர்வுகள்" என்கிறோம். அதாவது, எங்களிடம் நீங்கள் முன்பதிவு செய்து எங்கள் பெயர் அல்லது எங்கள் ஒதுக்கப்பட்ட குறியீட்டைக் கொண்டிருக்கும் டிக்கெட்டை நீங்கள் வைத்திருந்தாலும் கூட, விமானத்தை வேறொரு நிறுவனம் இயக்கலாம். அத்தகைய ஏற்பாடுகள் பொருந்தும் என்றால் நீங்கள் முன்பதிவு செய்யும் நேரத்திலேயே விமானத்தை இயக்கப் போகின்ற நிறுவனம் பற்றி உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம்.

அமெரிக்க விமான நிலையத்திலிருந்து செல்லும் அல்லது வந்து சேர்க்கின்ற குறியீட்டுப் பகிர்வு விமானங்களுக்கு, பகிர்வு விமானங்களை இயக்குகின்ற ஆபரேட்டர்களின் நீண்ட நேர டார்மாக் தாமதங்களுக்கான வருநிகழ்வுத் திட்டமே, அமெரிக்க விமான நிலையத்தில் ஏதேனும் நீண்ட நேரம் டார்மாக் தாமதங்கள் ஏற்பட்டால் அவற்றை நிர்வகிக்கும். நேரக்கூடிய ஏதேனும் நீண்ட நேர டார்மாக் தாமதங்களுக்காக எங்கள் குறியீட்டுப் பகிர்வுக் கூட்டாளர்கள் வைத்திருக்கும் வருநிகழ்வுத் திட்டங்கள் தொடர்பான தகவலுக்கு, நேரடியாக அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது அவர்களின் வலைத்தளத்தைப் பாருங்கள்.

2.4   மேலோங்கிச் செயல்படும் சட்டம்

பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகள் எங்களுடைய கட்டண விவரங்கள் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்காமல் இருந்தால் தவிர, பொருந்தும். அப்படி இருக்கும்பட்சத்தில் அத்தகைய கட்டண விவரங்கள் அல்லது சட்டங்களே மேலோங்கிச் செல்லுபடியாகும்.

பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகளின் ஏதேனும் கூற்று பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டத்தின்படி செல்லுபடியாகாததாக இருந்தால், அப்போதும் பிற கூற்றுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்.

2.5   ஒழுங்குமுறைகளைக் காட்டிலும் நிபந்தனைகளே மேலோங்கி செல்லுபடியாகும்

பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகளில் வழங்கப்பட்டுள்ளபடி தவிர, பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகளுக்கும் நாங்கள் கொண்டுள்ள பிற ஒழுங்குமுறைகளுக்கும் இடையே முரண்பாடு இருந்தால், சம்பந்தப்பட்ட விஷயத்தைக் கையாள்வதற்கு, பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகளே மேலோங்கி செல்லுபடியாகும்.


கட்டுரை 3 டிக்கெட்டுகள்

3.1   பொதுவான விதிமுறைகள்

3.1.1   டிக்கெட்டில் பெயர் கொண்டுள்ள பயணிக்கு மட்டுமே நாங்கள் பயணச் சேவை வழங்குவோம், தகுந்த அடையாளச் சான்றை நீங்கள் வழங்க வேண்டி இருக்கலாம்.

3.1.2   பொருந்தக்கூடிய உள்ளூர் சட்டங்களுக்கு அவசியமென்றால் தவிர, டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியாது.

3.1.3   சில டிக்கெட்டுகள் தள்ளுபடிக் கட்டணத்திற்கு விற்கப்படுகின்றன, அவை பகுதியளவு அல்லது முழுமையாக பணம் திரும்ப வழங்க முடியாதவையாக இருக்கலாம். உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான கட்டணத்தை நீங்கள் தேர்வுசெய்து கொள்ள வேண்டும். டிக்கெட்டை நீங்கள் ரத்துசெய்ய நேரும்பட்சத்தில் அத்தகைய சூழ்நிலைகளைக் கவர் செய்கின்ற தகுந்த காப்பீடுகளை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் நீங்கள் விரும்பலாம்.

3.1.4   நீங்கள் மேலே உள்ள 3.1.3 விதிமுறைகள் விவரிக்கப்பட்டபடி ஒரு டிக்கெட்டை வைத்திருந்தால், அது முற்றிலும் பயன்படுத்தப்படாமல் இருந்தால், தடுக்க முடியாத நிகழ்வு காரணமாக பயணம் செய்ய முடியாமல் போயிருந்தால், அத்தகைய தடுக்க முடியாத நிகழ்வு பற்றி எங்களுக்கு உரிய நேரத்தில் நீங்கள் தெரிவித்து தகுந்த ஆதாரத்தையும் வழங்கி இருந்தால், எதிர்காலத்தில் எங்கள் விமானத்தில் பயணம் செய்வதற்காக, கட்டணத் தொகைக்குச் சமமான கிரெடிட்டை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். அதற்கு நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியாது, மேலும் அதற்கு நியாயமான ஒரு நிர்வாகக் கட்டணம் பிடித்துக் கொள்ளப்படும்.

3.1.5   டிக்கெட்டானது, அதை வழங்கும் விமான நிறுவனத்திற்கே சொந்தம், எப்போதும் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக இருக்கும்.

3.1.6   எலக்ட்ரானிக் டிக்கெட்டாக இருந்தால் தவிர, விமானத்திற்கான விமானக் கூப்பனைக் கொண்டுள்ள செல்லுபடியான ஒரு டிக்கெட்டையும், பயன்படுத்தாத விமானக் கூப்பன்களையும், பயணிக் கூப்பனையும் நீங்கள் வழங்காதவரை, நீங்கள் விமானத்தில் பயணம் செய்யத் தகுதி பெற மாட்டீர்கள். அதுமட்டுமின்றி, நீங்கள் வழங்கிய டிக்கெட் மோசடியாக திருத்தம் செய்யப்பட்டிருந்தால் அல்லது பிற வழிகளில் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் (நாங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட் செய்யும் மாற்றங்கள் தவிர) பயணம் செய்வதற்கு நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள். எலக்ட்ரானிக் டிக்கெட்டாக இருந்தால், நேர்மறையான அடையாளச் சான்று மற்றும் செல்லுபடியான எலக்ட்ரானிக் டிக்கெட் உங்கள் பெயரில் வழங்கப்பட்டிருந்தால் தவிர, விமானத்தில் பயணம் செய்ய நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள்.

3.1.7   டிக்கெட் தொலைந்து போனால் அல்லது அதில் (பகுதியளவு) உங்களால் மோசடியாக ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால், பயணிக் கூப்பன் மற்றும் பயன்படுத்தப்படாத அனைத்து விமான கூப்பன்கள் ஆகியவற்றைக் கொண்ட டிக்கெட்டை வழங்காமல் இருந்தால், சம்பந்தப்பட்ட அந்த விமானத்திற்கான (விமானங்களுக்கான) செல்லுபடியான டிக்கெட் முறையாக உங்களுக்கு வழங்கப்பட்டது என்று உடனடியாக உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நீங்கள் ஆதாரத்தை வழங்கி, டிக்கெட்டின் தவறான உபயோகத்தின் காரணமாக எங்களுக்கு அல்லது பிற விமான நிறுவனத்திற்கு நியாயமான வகையில் மற்றும் அவசியமான விதத்தில் ஏற்பட்ட செலவுகள் மற்றும் இழப்புகளுக்கு அசல் டிக்கெட்டின் மதிப்புக்கு இணையாக நீங்கள் எங்களுக்கு ஈட்டுத்தொகை வழங்குவதாக ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்போது, தங்கள் கோரிக்கையின் பேரில் புதிய டிக்கெட்டை நாங்கள் வழங்குவோம். எங்கள் கவனக் குறைவின் காரணமாக நேரும் அத்தகைய எந்த இழப்புகளுக்கும் உங்களிடம் இருந்து ஈட்டுத் தொகையை நாங்கள் உரிமை கோர மாட்டோம். டிக்கெட் இழப்பு அல்லது டிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டதற்கு டிக்கெட்டை வழங்கிய விமான நிறுவனம் அல்லது அதன் ஏஜெண்ட்டின் கவனக்குறைவே காரணம் எனும் சூழல் தவிர, டிக்கெட் வழங்கும் விமான நிறுவனம் இந்தச் சேவைக்காக நியாயமான ஒரு நிர்வாகக் கட்டணத்தை வசூலிக்கலாம்.

3.1.8   ஆதாரம் கிடைக்காவிட்டால் அல்லது அத்தகைய ஒப்பந்தத்தில் நீங்கள் கையொப்பமிடாவிட்டால், மாற்று டிக்கெட்டை வழங்குவதற்காக புதிய டிக்கெட்டை வழங்கும் விமான நிறுவனம் டிக்கெட்டுக்கான முழு தொகையையும் உங்களிடம் வசூலிக்க வேண்டி இருக்கலாம், இழக்கப்பட்ட அல்லது மோசடியாக மாற்றம் செய்யப்பட்ட டிக்கெட்டானது அதன் செல்லுபடி காலாவதி ஆவதற்கு முன்பு பயன்படுத்தப்படவில்லை என்று முதலில் டிக்கெட்டை வழங்கிய நிறுவனம் திருப்திகரமாக நம்பினால், அதற்குப் பணம் திருப்பியளிக்கப்பட வாய்ப்புள்ளது. செல்லுபடிக் காலம் முடிவதற்கு முன்பாகவே அசல் டிக்கெட் கிடைத்துவிட்டால், புதிய டிக்கெட்டை வழங்கும் நிறுவனத்திடம் நீங்கள் அதை ஒப்படைக்க வேண்டும், அப்போதுதான் முன்பு குறிப்பிட்டது போல் பணம் திருப்பியளிக்கும் செயல்முறை தொடங்கும்.

3.1.9   டிக்கெட் என்பது மதிப்பு வாய்ந்ததாகும், அதை பத்திரமாக வைத்துக் கொள்ளவும், தொலையாமல், திருடு போகாமல், சேதமடையாமல், மோசடியாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படாமல் அதைப் பார்த்துக் கொள்ளவும் தேவையான தகுந்த நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

3.2   செல்லுபடிக் காலம்

3.2.1   டிக்கெட்டில், இந்த நிபந்தனைகளில் அல்லது பொருந்தக்கூடிய கட்டணங்களில் குறிப்பிடப்பட்டால் (டிக்கெட் செல்லுபடிக் காலத்தை அது வரம்பிடலாம், அப்படியிருக்கும்பட்சத்தில், அந்த வரம்பானது டிக்கெட்டில் காட்டப்படும்) தவிர டிக்கெட்டின் செல்லுபடிக் காலம் பின்வரும்படி இருக்கும்: வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு ஆண்டு; அல்லது (b) வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு ஆண்டிற்குள் முதல் பயணம் நடைபெற வேண்டும் என்ற விதிமுறைக்கு உட்பட்டு, அந்த டிக்கெட்டை பயன்படுத்தி செய்யப்படும் முதல் பயணத்தின் தேதியிலிருந்து ஒரு ஆண்டு.

3.2.2   நீங்கள் முன்பதிவுகளைக் கோரும் சமயத்தில், உங்கள் முன்பதிவுக்கு ஏற்ப இடத்தை எங்களால் வழங்க முடியாமல் போனதால், நீங்கள் பயணம் செய்வது தடுக்கப்பட்டிருந்தால், பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உங்களுக்காக நாங்கள் முன்பதிவு உறுதிசெய்யும் வரை டிக்கெட்டின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்படும் அல்லது கட்டுரை 10-இன் விதிமுறைகளுக்கு இணங்க பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

3.2.3   உங்கள் பயணத்தை மேற்கொண்ட பிறகு, உடல்நலக் குறைவின் காரணமாக உங்கள் டிக்கெட்டின் செல்லுபடிக் காலத்திற்குள் நீங்கள் பயணம் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்டால், கட்டணம் செலுத்தப்பட்ட சேவையின் வகுப்பில் இடம் கிடைக்கும்போது பயணம் மீண்டும் தொடங்கும் தேதியில் இருந்து, நீங்கள் மீண்டும் பயணம் செய்வதற்கு ஏற்ற நல்ல நிலைக்கு வரும் வரை அல்லது அத்தகைய தேதிக்குப் பிறகு எங்கள் முதல் விமானப் பயணத்தின் தேதி வரை உங்கள் திட்டத்தின் செல்லுபடிக் காலத்தை நாங்கள் நீட்டிக்கலாம் (பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான நிபந்தனைகளுக்கு உட்பட்டது). அத்தகைய உடல்நலக் குறைவிற்குச் சான்றிதழ் ஒன்றின் மூலம் அதற்கு நீங்கள் உறுதிச் சான்று அளிக்க வேண்டும், அதை எங்கள் மருத்துவ அதிகாரி அங்கீகரிக்க வேண்டி இருக்கலாம். திட்டத்தில் விமானக் கூப்பன்கள் மீதம் இருக்கும்போது, அல்லது எலக்ட்ரானிக் டிக்கெட்டில் எலக்ட்ரானிக் கூப்பன் மீதம் இருக்கும்போது, அவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டாப்ஓவர்களைக் கொண்டவையாக இருந்தால், அத்தகைய டிக்கெட்டுகளின் செல்லுபடிக் காலம் அந்தச் சான்றிதழில் காண்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு மேல் நீட்டிக்கப்படாது. அத்தகைய சூழ்நிலைகளில், அதேபோல் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் டிக்கெட்டுகளின் செல்லுபடிக் காலத்தை நாங்கள் நீட்டிப்போம்.

3.2.4   பயணம் செல்லும் வழியில் பயணி ஒருவர் இறக்க நேர்ந்தால், அவருடன் பயணித்த நபர்களுக்கான குறைந்தபட்ச தங்கி இருத்தல் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டு அல்லது செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்பட்டு, அவர்களின் டிக்கெட்டுகள் திருத்தப்படக்கூடும். பயணம் செய்த பயணியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறக்க நேர்ந்தால், அந்தப் பயணியின் டிக்கெட்டுகள் மற்றும் அவருடன் சேர்ந்து பயணித்த அவரது குடும்ப உறுப்பினர்களின் டிக்கெட்டுகளின் செல்லுபடிக் காலமும் அதேபோல் திருத்தப்படலாம். செல்லுபடியான இறப்புச் சான்றிதழைப் பெற்று அத்தகைய திருத்தங்கள் செய்யப்படும், செல்லுபடிக் காலத்தை அப்படி நீட்டிக்கும்போது, நீட்டிப்புக் காலமானது இறப்பு ஏற்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்கு மேல் இருக்காது.

3.3   கூப்பன் நிகழ்வரிசை மற்றும் பயன்பாடு

3.3.1   நீங்கள் வாங்கிய டிக்கெட்டானது, அந்த டிக்கெட்டில் காண்பிக்கப்பட்டுள்ளபடி மேற்கொள்ளப்படும் போக்குவரத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும், அதாவது புறப்படும் இடத்திலிருந்து தொடங்கி ஒப்புக்கொள்ளப்பட்ட நிறுத்த இடங்கள் வழியாக இறுதியாகச் சென்று சேரும் இடம் வரை. நீங்கள் செலுத்திய கட்டணமானது எங்கள் கட்டண விவரங்களின் அடிப்படையில் ஆனது, மேலும் டிக்கெட்டில் காண்பிக்கப்பட்டுள்ளபடி மேற்கொள்ளப்படும் பயணத்திற்கானது. இது உங்களுடனான எங்கள் ஒப்பந்தத்தின் இன்றியமையாத பகுதியாகத் திகழ்கிறது. டிக்கெட்டில் வழங்கப்பட்டுள்ள அதே வரிசையில் கூப்பன்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாவிட்டால், டிக்கெட் செல்லுபடியானதாகக் கருதப்படாது, மேலும் அதன் செல்லுபடிக் காலம் இழக்கப்படும்.

3.3.2   உங்கள் பயணம் தொடர்பாக ஏதேனும் நீங்கள் மாற்ற விரும்பினால் முன்கூட்டியே எங்களைத் தொடர்புகொள்ள வேண்டும். உங்கள் புதிய போக்குவரத்துக்கான கட்டணமானது கணக்கிடப்பட்டு புதிய விலையை ஏற்றுக்கொள்ள அல்லது டிக்கெட்டில் முதலில் இருந்த அதே போக்குவரத்தை வைத்துக்கொள்ள உங்களுக்கு தெரிவு வழங்கப்படும். தடுக்க முடியாத நிகழ்வுகளின் காரணமாக உங்கள் போக்குவரத்தில் ஏதேனும் நீங்கள் மாற்றம் செய்ய விரும்பினால், நடைமுறையில் சாத்தியமான விரைவில் எங்களை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும், கட்டணத்தின் மறு கணக்கீடு இல்லாமல், அடுத்த நிறுத்த இடம் அல்லது இறுதியில் நீங்கள் சென்று சேரும் இடத்திற்குத் தேவையான போக்குவரத்தை உங்களுக்காக ஏற்பாடு செய்வதற்கு நாங்கள் நியாயமான வகையில் கூடிய மட்டும் முயற்சி எடுப்போம்.

3.3.3   எங்கள் ஒப்புதல் இல்லாமல் உங்கள் போக்குவரத்தை நீங்கள் மாற்ற விரும்பினால், உங்கள் உண்மையான பயணத்திற்கான சரியான கட்டணத்தை நாங்கள் மதிப்பிடுவோம். நீங்கள் செலுத்திய தொகைக்கும் நீங்கள் மாற்றம் செய்த புதிய போக்குவரத்திற்குப் பொருந்தும் கட்டணத் தொகைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். புதிய கட்டணம் குறைவாக இருந்தால், வித்தியாசத் தொகையை நாங்கள் உங்களுக்குத் திருப்பியளிப்போம், ஆனால் பயன்படுத்தப்படாத கூப்பன்களுக்கு அதன் பிறகு மதிப்பிருக்காது.

3.3.4   சிலவகை மாற்றங்களால் கட்டணத்தில் மாற்றம் எதுவும் இருக்காது. ஆனால் புறப்படும் இடத்தை மாற்றுதல் (உதாரணத்திற்கு, முதல் செக்மெண்டில் நீங்கள் பயணம் செய்யாமல் இருந்தால்), உங்கள் பயணத் திசையை எதிராக மாற்றுதல் போன்ற சில மாற்றங்கள் உங்கள் கட்டணத்தை அதிகமாக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலான சிறப்புக் கட்டணங்கள் குறிப்பிட்ட அந்தப் பயணத் தேதியில் மட்டுமே செல்லுபடியாகும், மேலும் டிக்கெட்டில் காண்பிக்கப்பட்ட அந்த விமானங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அவற்றை மாற்றவே முடியாமல் போகலாம் அல்லது கூடுதலாகக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அவற்றை மாற்ற முடியும் என்ற நிலை இருக்கலாம்.

3.3.5   உங்கள் டிக்கெட்டில் உள்ள விமானக் கூப்பன் ஒவ்வொன்றும், உங்களுக்கு இடம் முன்பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் விமானத்தில், சேவை வகுப்பில் பயணம் செய்வதற்கு ஏற்றுக்கொள்ளப்படும். முன்பதிவு குறிப்பிடப்படாமல் முதலில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தால், பின்னர் முன்பதிவு செய்யப்படும் இடமானது எங்களுடைய கட்டண விவரங்கள் மற்றும் கோரப்பட்ட விமான இடத்தின் கிடைக்கும்தன்மை ஆகியவற்றுக்கு உட்பட்டதாகும்.

3.4   விமான நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி

டிக்கெட்டில் எங்கள் நிறுவனத்தின் பெயர் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது பிற விதத்தில் சுருக்கப்பட்டிருக்கலாம். எங்கள் முகவரி: #22-01, ஈஸ்ட் டவர், உலக வர்த்தக மையம், எஷலன் ஸ்கொயர், கொழும்பு 1, ஸ்ரீலங்கா. எங்களை எப்படித் தொடர்புகொள்வது என்பது பற்றிய மேலும் விவரங்களுக்கு எங்கள் கால அட்டவணையைப் பாருங்கள்.


கட்டுரை 4 கட்டணங்கள் மற்றும் வரிகள்

4.1   கட்டணங்கள்

வேறு விதமாக வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, பயணம் தொடங்கும் இடத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து சென்று சேரும் இடத்தில் உள்ள விமான நிலையம் வரையான பயணத்திற்கு மட்டுமே இந்தக் கட்டணங்கள் பொருந்தும். விமான நிலையங்களுக்கு இடையே மற்றும் நகர முனையங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் இடையே வழங்கப்படும் போக்குவரத்துச் சேவை கட்டணங்களில் உள்ளடக்கப்படவில்லை. குறிப்பிட்ட தேதிகளிலும், காண்பிக்கப்பட்ட பயணத் திட்டத்தின் படியும் நீங்கள் செய்யும் பயணத்திற்கான உங்கள் டிக்கெட்டிற்கு நீங்கள் பணம் செலுத்தும் தேதியில் செயலில் உள்ள எங்கள் கட்டண விவரங்களுக்கு இணங்க உங்களுக்கான கட்டணம் கணக்கிடப்படும். உங்கள் பயணத் திட்டம் அல்லது பயணத் தேதிகள் அல்லது உங்கள் பயணத்தின் ஏதேனும் அம்சங்களை நீங்கள் மாற்ற வேண்டுமென்றால், நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தில் அது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் விவரங்களுக்கு 3.3.2 முதல் 3.3.4 வரை உள்ள விதிமுறைகளைப் பாருங்கள்.

4.2   வரி, கட்டணங்கள் மற்றும் மேல் வரிகள்

பொருந்தக்கூடிய வரிகள் கட்டணங்கள் மற்றும் அரசாங்கம் அல்லது பிற அதிகாரிகள் அல்லது விமான நிலையத்தை இயக்கும் நிறுவனம் விதிக்கும் கட்டணங்கள் அல்லது கூடுதல் கட்டணங்களைச் செலுத்துவது உங்கள் பொறுப்பாகும். நீங்கள் டிக்கெட்டை வாங்கும் சமயத்தில் பயணக் கட்டணத்தில் சேர்க்கப்படாத வரிகள், கட்டணங்கள், கூடுதல் கட்டணங்கள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கப்படும். அவற்றில் பெரும்பாலானவை உங்கள் டிக்கெட்டிலேயே தனியாகக் காண்பிக்கப்படும். விமானப் பயணத்திற்கு விதிக்கப்படும் வரிகள், கட்டணங்கள், கூடுதல் கட்டணங்கள் ஆகியவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும், டிக்கெட் வழங்கப்பட்ட தேதிக்குப் பிறகும் கூட அத்தகைய கட்டணங்கள் விதிக்கப்படலாம். டிக்கெட்டில் காண்பிக்கப்பட்ட வரி, கட்டணம் அல்லது கூடுதல் கட்டணத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால், அதைச் செலுத்த வேண்டியது உங்கள் பொறுப்பாகும். அதேபோல், டிக்கெட் வழங்கப்பட்ட பிறகும்கூட புதிதாக ஏதேனும் வரி, கட்டணம் அல்லது கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டால், அதைச் செலுத்த வேண்டியது உங்கள் பொறுப்பாகும். அதேபோல், டிக்கெட் வழங்கப்பட்ட சமயத்தில் நீங்கள் எங்களிடம் ஏதேனும் வரிகள், கட்டணங்கள் அல்லது கூடுதல் கட்டணங்கள் செலுத்தி இருந்து, இனிமேல் உங்களுக்கு அது பொருந்தாது அல்லது நீங்கள் செலுத்த வேண்டிய தொகை இன்னும் குறைவு என்று மாறும் வகையில் அவை நீக்கப்பட்டால் அல்லது குறைக்கப்பட்டால், பணம் திரும்பப் பெற நீங்கள் தகுதி பெறுவீர்கள். மற்றபடி டிக்கெட்டை நாங்கள் வழங்கி நீங்கள் அதற்கு பணம் செலுத்திவிட்ட பிறகு டிக்கெட்டின் விலையில் அதிகரிப்பு எதுவும் இருக்காது, எனினும் ஏதேனும் விதிவிலக்கான நிகழ்வு அல்லது சூழ்நிலைகளின் காரணமாக எங்களுக்கு செலவுகள் அதிகமானால் அதை பிரதிபலிக்கும் வகையில் கூடுதல் கட்டணம் விதிக்க எங்களுக்கு உரிமை உள்ளது.

4.3   நாணயம்

டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் சமயத்தில் அல்லது அதற்கு முன்பு நாங்களோ எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்டோ வேறு நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் தவிர (உதாரணமாக, உள்ளூர் நாணயத்திற்கு மாற்ற முடியாத சூழ்நிலையின் காரணமாக இருக்கலாம்), டிக்கெட் வழங்கப்படுகின்ற நாட்டின் நாணயத்திலேயே பயணக் கட்டணங்கள், வரிகள், கட்டணங்கள், கூடுதல் கட்டணங்கள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். எங்கள் சுய விருப்பத்தின் பேரில் வேறு நாணயத்திலும் நாங்கள் கட்டணத்தை ஏற்கலாம்.


கட்டுரை 5 முன்பதிவுகள்

5.1   முன்பதிவுக்கான தேவைகள்

5.1.1   உங்கள் முன்பதிவுகளை நாங்களோ எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டோடோ பதிவு செய்வோம். நீங்கள் கோரினால், உங்கள் முன்பதிவு(களு)க்கான எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம்.

5.1.2   குறிப்பிட்ட சில கட்டணங்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன, அந்த நிபந்தனைகள் முன்பதிவுகளில் நீங்கள் மாற்றம் செய்வதற்கான அல்லது ரத்துசெய்வதற்கான உங்கள் உரிமையை வரம்பிடுகின்றன அல்லது விலக்குகின்றன.

5.2   டிக்கெட்டிற்கான கால வரம்புகள்

உங்கள் முன்பதிவுகளை நாங்களோ எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டோ பதிவு செய்வோம். நீங்கள் கோரினால், உங்கள் முன்பதிவு(களு)க்கான எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம்.

5.3   நியாயமான செயலாக்க அறிவிப்பு

5.4   நாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம், உங்கள் தனியுரிமையையும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். தனியுரிமை தொடர்பாக உங்களுக்குள்ள உரிமைகள் பற்றியும், சட்டம் உங்களை எப்படிப் பாதுகாக்கிறது என்பது பற்றியும் எங்கள் தனியுரிமைக் கொள்கை கூறுகிறது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எப்படிச் சேகரிக்கிறோம், என்பது பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். www.srilankan.com/en_uk/corporate/privacy-policy என்ற முகவரியில் எங்கள் தனியுரிமைக் கொள்கை உள்ளது. உங்கள் உரிமைகள் பற்றியும் உங்கள் தனிப்பட்ட தரவை ஸ்ரீலங்கன் நிறுவனம் பயன்படுத்துவது பற்றியும் புரிந்துகொள்ள அதை படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்துகிறோம்.

முன்கூட்டியே செய்யப்படும் இருக்கைக் கோரிக்கைகளை நாங்கள் முன்னுரிமை அளித்துப் பரிசீலிப்போம். எனினும் குறிப்பிட்ட இருக்கை வழங்கப்படும் என்றெல்லாம் எந்த உத்தரவாதமும் நாங்கள் வழங்க முடியாது. விமானத்தில் ஏறிய பிறகும் கூட, எப்போது வேண்டுமானாலும் இருக்கைகளை ஒதுக்க அல்லது மாற்றி ஒதுக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. இயக்கம், பாதுகாப்பு அல்லது காவல் காரணங்களுக்காக இந்த ஏற்பாடுகள் தேவைப்படலாம்.

5.5   முன்பதிவுகளை மீண்டும் உறுதிப்படுத்துதல்

5.5.1   முன்னோக்கிய அல்லது திரும்பி வரும் பயணத்திற்கான முன்பதிவுகள், குறிப்பிட்ட கால வரம்புகளுக்குள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற தேவைப்பாட்டுக்கு உட்பட்டிருக்கலாம். எப்போது எங்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்தல் தேவை, அதை எப்போது செய்ய வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம். மீண்டும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாக இருந்து, நீங்கள் அதை செய்யத் தவறினால் உங்கள் முன்னோக்கிய பயணம் அல்லது திரும்பி வரும் பயணத்திற்கான முன்பதிவுகளை நாங்கள் ரத்துசெய்யக்கூடும். எனினும், பயணம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக எங்களிடம் தெரிவித்தால், அப்போது விமானத்தில் இடமும் இருந்தால், உங்கள் முன்பதிவுகளை நாங்கள் மீண்டும் செயல்படுத்தி உங்களை அழைத்துச் செல்வோம். அந்த நேரத்தில் விமானத்தில் இடம் இல்லாவிட்டால், உங்களுடைய அடுத்த நிறுத்தம் அல்லது இறுதியாக சென்று சேர வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல கூடுமான நியாயமான முயற்சிகளை நாங்கள் எடுப்போம்.

5.5.2   உங்கள் பயணத்தில் சம்பந்தப்பட்ட பிற விமான நிறுவனங்களின் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா என்று அவர்களைத் தொடர்புகொண்டு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது அவசியமானால், சம்பந்தப்பட்ட டிக்கெட்டில் உள்ள குறியீட்டுக்குரிய அந்த விமான நிறுவனத்திடம் நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

5.6   முக்கியப் பயணத்திற்கான முன்பதிவுகளை ரத்துசெய்தல்

முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிக்காமல், விமானப் பயணத்திற்கு நீங்கள் வந்து சேரத் தவறினால், திரும்பி வருவதற்கான அல்லது முன்னோக்கிய பயணத்திற்கான உங்கள் முன்பதிவுகளை நாங்கள் ரத்துசெய்யக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், முன்கூட்டியே இது பற்றி நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால், தொழில்நுட்ப ரீதியாக நடைமுறையில் சாத்தியமான அளவிற்கு, உங்கள் அடுத்த பயணத்திற்கான முன்பதிவுகளை நாங்கள் ரத்துசெய்யாமல் வைத்திருப்போம்.


கட்டுரை 6 செக்-இன் மற்றும் போர்டிங்

6.1   ஒவ்வொரு விமான நிலையத்திலும் செக்-இன் செய்வதற்கான நேர வரம்பு மாறக்கூடும், இந்த செக்-இன் நேர வரம்புகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படும்படி பரிந்துரைக்கிறோம். செக்-இன் நேர வரம்புகளைப் பின்பற்றுவதற்குத் தேவையான அவகாசம் கிடைக்கும் வகையில் நீங்கள் செயல்பட்டால் உங்கள் பயணம் பரபரப்பில்லாமல் இனிமையாக இருக்கும். குறிப்பிடப்பட்ட செக்-இன் நேர வரம்புகளுக்கு நீங்கள் இணங்கத் தவறினால், உங்கள் முன்பதிவுகளை ரத்துசெய்வதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எங்கள் விமானங்களுக்கான செக்-இன் நேர வரம்புகளை எங்கள் கால அட்டவணையில், அல்லது அங்கீகரிக்கப்பட்ட எங்கள் ஏஜெண்ட்டுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். உலகளவில் உள்ள எங்கள் கவுண்ட்டர்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு 3 மணிநேரம் முன்னதாகத் திறக்கப்படும், வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் (அதாவது புறப்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு) எங்களுடைய செக்-இன் டெஸ்க்குகளை நீங்கள் வந்தடைய வேண்டும். எங்கள் செக்-இன் கவுண்ட்டர்கள் அனைத்தும், விமானம் புறப்படுவதற்கு 01 மணிநேரத்திற்கு முன்பு மூடப்படும்.

6.2   குறைந்தபட்சம் விமானம் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு நீங்கள் போர்டிங் கேட்டை வந்தடையாவிட்டால், விமானம் உங்களுக்காக நிறுத்தி வைக்கப்படாது.

6.3   கட்டுரைகளில் உள்ள விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்கத் தவறுவதால் உங்களுக்கு ஏதேனும் இழப்பு அல்லது செலவு ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.

6.4   உங்கள் உரிமைகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவின் எங்களுடைய உபயோகம் பற்றிய தகவல்களுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.


கட்டுரை 7 பயண அனுமதி மறுத்தல் மற்றும் வரம்பிடுதல்

7.1   பயண அனுமதியை மறுப்பதற்கான உரிமை

நியாயமான அளவில் எங்கள் சுய விருப்பத்தின் பேரில், உங்களையோ உங்கள் பேகேஜையோ நாங்கள் பயணத்திற்கு அனுமதிக்க முடியாது என்று உங்களுக்கு நாங்கள் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கிவிட்டால், அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும், உங்களையோ உங்கள் பேகேஜையோ நாங்கள் பயணத்திற்கு அனுமதிக்க முடியாது என்று மறுக்கலாம். இந்தச் சூழ்நிலையில் பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தகுதி பெறுவீர்கள். பின்வருபவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் நடந்திருந்தால் அல்லது நடக்கக்கூடும் என்று நாங்கள் நியாயமான வகையில் நம்பினாலும், உங்களையோ உங்கள் பேகேஜையோ பயணத்திற்கு அனுமதிக்க நாங்கள் மறுக்கக்கூடும்.

7.1.1   பொருந்தக்கூடிய அரசாங்கச் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் அல்லது ஆணைகளுக்கு இணங்க அப்படிச் செய்ய வேண்டியது அவசியமாகும்போது;

7.1.2   உங்களையோ உங்கள் பேகேஜையோ பயணத்திற்கு அனுமதித்தால், பிற பயணிகள் அல்லது விமானிக் குழுவினருக்கு அது ஆபத்தை ஏற்படுத்தலாம் அல்லது அவர்களின் பாதுகாப்பு, உடல்நலத்தைப் பாதிக்கலாம் அல்லது அவர்களின் சௌகரியத்தைக் கணிசமாகப் பாதிக்கலாம் எனும் சூழ்நிலையில்;

7.1.3   ஆல்கஹால் அல்லது போதைப் பொருள் பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் பலவீனம் உட்பட, உங்கள் உளவியல் அல்லது உடல்ரீதியான நிலையானது, உங்களுக்கு, பிற பயணிகளுக்கு, விமானிக் குழுவிற்கு அல்லது உடைமைகளுக்குத் தீங்கை ஏற்படுத்தக் கூடும் எனும் சூழ்நிலையில்;

7.1.4   விமானம் நிரம்பியிருந்து, அந்த விமானத்திற்கு என்று நீங்கள் இடத்தை முன்பதிவு செய்யாதபோது;

7.1.5   பாதுகாப்புப் பரிசோதனைக்கு உட்பட நீங்கள் மறுத்துவிடும்போது;

7.1.6   பொருந்தக்கூடிய கட்டணங்கள், வரிகள் அல்லது கூடுதல் கட்டணங்களை நீங்கள் செலுத்தத் தவறும்போது;

7.1.7   செல்லுபடியான ஆவணங்களை நீங்கள் வைத்திருக்காதபோது, பயணம் செல்லும் வழியில் நீங்கள் கடந்து செல்கின்ற ஒரு நாட்டிற்குள் அல்லது குறிப்பிட்ட நாட்டிற்குள் உள்நுழைவதற்கு உங்களுக்கு செல்லுபடியான பயண ஆவணங்கள் இல்லாத நிலையில் நீங்கள் அந்த நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும்போது, அல்லது விமானப் பயணத்தின்போது உங்கள் பயண ஆவணங்களை நீங்கள் அழித்துவிடும்போது அல்லது விமானிக் குழுவிடம், உரிய ரசீது வழங்கப்படும் பட்சத்திலும் அவற்றை ஒப்படைக்குமாறு கோரப்படும் போதும் உங்கள் பயண ஆவணங்களை ஒப்படைக்க நீங்கள் மறுக்கும்போது;

7.1.8   சட்டவிரோதமாகப் பெறப்பட்ட, எங்களிடமிருந்து அல்லது எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டிடம் இருந்து அல்லாமல் பிற வழிகளில் வாங்கப்பட்ட, அல்லது காணாமல் போனதாக அல்லது திருடப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்ட, போலியான டிக்கெட்டை நீங்கள் வழங்கும்போது; அல்லது டிக்கெட்டில் உள்ள பெயருக்குரிய நபர் நீங்கள்தான் என்பதை உங்களால் நிரூபிக்க முடியாதபோது;

7.1.9   கூப்பன்களின் வரிசை மற்றும் பயன்பாடு தொடர்பாக மேலே உள்ள கட்டுரை 3.3-இல் உள்ள விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்கத் தவறும்போது, நாங்களோ எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட் அல்லாமல் பிற வழிகளில் வழங்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட டிக்கெட்டை நீங்கள் வழங்கும்போது, அல்லது டிக்கெட் மோசடியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கும்போது;

7.1.10  பாதுகாப்பு அல்லது காவல் தொடர்பான எங்கள் அறிவுறுத்தல்களை நீங்கள் பின்பற்றத் தவறும்போது;

7.1.11  மேலே உள்ள 7.1.5 முதல் 7.1.10 வரையான விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள செயல்கள் அல்லது செயலின்மைகளில் ஒன்றை முன்னர் நீங்கள் செய்திருந்தால், மீண்டும் அதை நீங்கள் செய்யக்கூடும் என்று நாங்கள் நம்புவதற்கு நியாயமான காரணம் இருந்தால்;

7.1.12  ஏதேனும் பயணக் கட்டுப்பாடுகள், எல்லை மூடல்கள், வர்த்தகத் தடை மற்றும் அல்லது நாங்கள் விமானப் பயணத்தைத் தொடங்கிய, மேலே விமானப்பயணம் செய்கின்ற மற்றும் அல்லது விமானத்தை உள்ளே கொண்டு செல்கின்ற ஏதேனும் மாநிலத்தால் விதிக்கப்பட்டு இருக்கும் பிற கட்டுப்பாடுகளுக்கு நாங்கள் இணங்குவதற்கு, பயண அனுமதியை மறுப்பது அவசியம் என்று நாங்கள் நம்பும்போது;

7.2   சிறப்பு உதவி

7.2.1   பெரியவர்கள் உடன் இல்லாமல் தனியாகப் பயணிக்கும் குழந்தைகள், பலவீனமான நபர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலம் இல்லாத நபர்கள் அல்லது சிறப்பு உதவி தேவைப்படுகின்ற நபர்களை பயணத்திற்கு நாங்கள் அனுமதிக்க, முன்பே எங்களிடம் அத்தகைய ஏற்பாடுகளைப் பற்றித் தெரிவித்து உறுதிசெய்து கொள்ள வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே சிறப்புத் தேவைகள் பற்றி எங்களிடம் தெரிவித்து நாங்கள் அதை ஒப்புக்கொண்டபட்சத்தில், நாங்கள் ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களுக்குத் தேவைப்படுகின்ற சிறப்பு உதவியில் பெரிய அளவில் மோசமாக மாற்றம் ஏற்பட்டால் தவிர, உடல் குறைபாடுகள் உள்ள அந்தப் பயணிகளுக்கான பயண அனுமதியை அதன் பிறகு அத்தகைய உடல் குறைபாடுகள் அல்லது சிறப்புத் தேவைகளின் அடிப்படையில் நாங்கள் மறுக்கக்கூடாது.

7.2.2   நீங்கள் அமெரிக்காவில் இருந்து விமானப் பயணம் செய்தால் அல்லது அமெரிக்காவை நோக்கி விமானப் பயணம் செய்தால், வேறு உள்நாட்டு விதிமுறைகள் பொருந்தக்கூடும். அமெரிக்காவை நோக்கி அல்லது அமெரிக்காவில் இருந்து செய்யும் பயணங்களுக்கு பொருந்தக்கூடிய விதிகள் பற்றிய கூடுதல் தகவல், கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.

7.2.3   சிறப்பு உதவி சக்கர நாற்காலிகள் கொழும்பு விமான நிலையத்தில் LKR 1500.00 கட்டணத்திற்கு வழங்கப்படும். இதற்கான கட்டணத்தை போக்குவரத்துக் காசாளர் கவுண்ட்டரில் மட்டுமே செலுத்த வேண்டும். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தரை ஊழியரை (கிரவுண்ட் ஸ்டாஃப்) தொடர்புகொள்ளவும்.

7.3   விமானத்தில் செல்வதற்கான தகுதி நிலை

7.3.1   குறிப்பிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பட்சத்தில், நீங்கள் விமானப் பயணம் செய்வதற்குத் தகுதி வாய்ந்தவர் ஆவீர்கள் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தால், அத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் நீங்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பாகும், மேலும் பயண அனுமதிக்கான நிபந்தனைகளின் அவசியப்படி, விமானத்தில் செல்வதற்கான உங்கள் தகுதிநிலை குறித்த எழுத்துப்பூர்வ ஆதாரத்தை உங்களால் வழங்க முடிய வேண்டும்.

7.3.2   விமானத்தில் பயணம் செல்வதற்கான உங்கள் தகுதிநிலை குறித்து சந்தேகங்கள் இருந்தால், பின்வருபவற்றை நீங்கள் செய்யாதபட்சத்தில் உங்களை விமானப் பயணத்திற்கு அனுமதிக்க நாங்கள் மறுக்கக்கூடும்:

(a)   நீங்கள் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள எல்லா விமானங்களிலும் பயணம் செய்ய நீங்கள் தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்தும் படி, முறையான தகுதி பெற்ற மருத்துவரிடம் இருந்து, உங்கள் பயணத் தேதிக்கு முன்னதாக 10 நாட்களுக்குள்ளான தேதியிட்ட மருத்துவ அறிக்கை ஒன்றை, விமானப் பயணத்திற்கு முன்னதாக 48 மணிநேரத்திற்குள் நீங்கள் எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும், அல்லது

(b)   விமானப் பயணத்திற்கு உங்களை நாங்கள் அனுமதிக்க முடியும் என்று குறிப்பிடுகிறது என்று நாங்கள் உறுதிப்படுத்திய, முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட மருத்துவத் தகவல் படிவத்தை (MEDIF) விமானப் பயணத்திற்கு முன்னதாக 48 மணிநேரத்திற்குள் எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும், அல்லது

(c)   விமானப் பயணத்திற்கு உங்களை நாங்கள் அனுமதிக்க முடியும் என்று நாங்கள் உறுதிப்படுத்திய, முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட அடிக்கடி பயணம் செய்வதற்கான மருத்துவ அட்டையை (FREMEC) விமானப் பயணத்திற்கு முன்னதாக 96 மணிநேரத்திற்குள் எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

7.3.3   பின்வரும் நிபந்தனைகளில் எதையேனும் பூர்த்தி செய்கின்ற ஒரு நோய் உங்களுக்கு இருப்பதாகத் தோன்றினால், உங்கள் விமானப் பயணத்திற்கு முன்னதாக 48 மணிநேரத்திற்குள் எங்களுடைய மருத்துவத் துறையிடம் இருந்து விமானப் பயணத்திற்கான அனுமதியைப் பெற வேண்டும்;

(a)   மும்முரமாகப் பரவக்கூடிய அல்லது தொற்றக்கூடியதாக நம்பப்படும் நோய்

(b)   பிற பயணிகள் அல்லது விமானிக் குழு உறுப்பினர்களின் நலத்தையும் சௌகரியத்தையும் பாதிக்கக்கூடிய விதத்தில், வழக்கத்திற்கு மாறான நடத்தையைத் தூண்டுகின்ற அல்லது உடல் நிலையை ஏற்படுத்துகின்ற நோய்.

(c)   விமானத்தின் பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவிக்கும் சாத்தியம் கொண்டதாகக் கருதப்படும் நோய், அல்லது

(d)   விமானத்தைத் திருப்பிவிட அல்லது திட்டமிடப்படாத இடத்தில் நிறுத்த வழிவகுக்கக்கூடிய நோய், அல்லது

(e)   விமானப் பயணத்தின்போது உடல் நலத்துடன் இருப்பதற்கு மருத்துவக் கவனிப்பு மற்றும்/அல்லது சிறப்பு உபகரணம் தேவைப்படுகின்ற நோய், அல்லது

(f)    விமானப் பயணத்தின்போது தீவிரமாகக்கூடிய நோய்.

7.3.4   நீங்கள் அமெரிக்காவில் இருந்து விமானப் பயணம் செய்தால் அல்லது அமெரிக்காவை நோக்கி விமானப் பயணம் செய்தால், வேறு உள்நாட்டு விதிமுறைகள் பொருந்தக்கூடும். அமெரிக்காவை நோக்கி அல்லது அமெரிக்காவில் இருந்து செய்யும் பயணங்களுக்குப் பொருந்தக்கூடிய விதிகள் பற்றிய கூடுதல் தகவல், கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.


கட்டுரை 8 பேகேஜ்

8.1   இலவச பேகேஜ் அனுமதி

ஓரளவு பேகேஜை நீங்கள் கட்டணம் இன்றி எடுத்துச் செல்லலாம். இது எங்கள் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இவற்றை எங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டுகளிடமிருந்து பெறலாம்.

8.2   கூடுதல் பேகேஜ்

இலவசமாக அனுமதிக்கப்படும் பேகேஜ் இல்லாமல் கூடுதலாக நீங்கள் பயணத்தில் கொண்டு செல்கின்ற பேகேஜிற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். கோரிக்கையின் பேரில் இதற்கான கட்டணங்கள் பற்றிய விவரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

8.3   பேகேஜாக ஏற்றுக்கொள்ளப்படாத பொருட்கள்

8.3.1   பின்வரும் பொருட்களை உங்கள் பேகேஜில் வைத்திருக்கக் கூடாது:

(a)   விமானப் போக்குவரத்தின் மூலம் ஆபத்தான பொருட்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, இன்டர்நேஷனல் சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன் (ICAO) வழங்கும் தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள், இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் (IATA) வெளியிட்டுள்ள ஆபத்தான பொருட்களுக்கான ஒழுங்குமுறைகள், எங்களுடைய ஒழுங்குமுறைகள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவை போன்ற, விமானம் அல்லது விமானத்தில் உள்ள நபர்கள் அல்லது உடைமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாத்தியமுள்ள பொருட்கள் (கூடுதல் தகவல் கோரிக்கையின் பேரில் கிடைக்கும்);

(b)   விமானம் எந்த மாநிலத்தை நோக்கி அல்லது மாநிலத்தில் இருந்து பயணிக்கிறதோ, அந்த மாநிலத்தின் பொருந்தக்கூடிய சட்டங்கள், ஒழுங்குமுறைகள் அல்லது ஆணைகளால் விமானத்தில் கொண்டு செல்லத் தடை செய்யப்பட்ட பொருட்கள்;

(c)   எடை, அளவு, வடிவம், தன்மை காரணமாக பாதுகாப்பற்றது, ஆபத்தானது அல்லது பிற பொருட்களுடன் சேர்த்து வைக்கும்போது, பயன்படுத்தும் விமானத்தின் வகையின் காரணமாக உடையக்கூடியது அல்லது கெட்டுப் போகக் கூடியது என்பதால், விமானத்தில் கொண்டு செல்ல ஏற்றதல்ல என்று நியாயமான விதத்தில் நாங்கள் கருதக்கூடிய பொருட்கள். சேர்க்க முடியாத பொருட்கள் பற்றிய தகவல் கோரிக்கையின் பேரில் கிடைக்கும்;

8.3.2   வேட்டையாடுதல், விளையாட்டு போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துபவை தவிர, மற்ற துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை பேகேஜாகக் கொண்டு செல்லத் தடை செய்யப்பட்டவை. வேட்டையாடுதல், விளையாட்டு போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை பேகேஜாகக் கொண்டு செல்ல ஏற்கப்படலாம். துப்பாக்கிகள் சேஃப்டி லாக் பூட்டப்பட்டு, தோட்டாக்கள் இல்லாமல், சரியான விதத்தில் பேக் செய்யப்பட்டிருக்க வேண்டும். தோட்டாக்களைக் கொண்டு செல்வது 8.3.1(a)-இல் குறிப்பிட்டபடி, ICAO மற்றும் IATA ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதாகும்.

8.3.3   8.1-இல் வரையறுக்கப்பட்ட படி பேகேஜாகக் கருதப்படாத பொருட்கள்:

(a)   விமானம் அல்லது விமானத்தில் உள்ள நபர்கள் அல்லது உடைமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாத்தியமுள்ள பொருட்கள்.

(b)   விமானம் எந்த மாநிலத்தை நோக்கி அல்லது மாநிலத்தில் இருந்து அல்லது எந்த மாநிலத்தின் மேல் பயணிக்கிறதோ, அந்த மாநிலத்தின் பொருந்தக்கூடிய சட்டங்கள், ஒழுங்குமுறைகள் அல்லது ஆணைகளால் விமானத்தில் கொண்டு செல்லத் தடை செய்யப்பட்ட பொருட்கள்;

(c)   கூர்மையான பொருட்கள் மற்றும்/அல்லது சரியாக பேக் செய்யப்படாத, 5 கிலோவிற்கும் அதிக எடை கொண்ட, ஒழுங்கற்ற உலோகப் பொருட்கள் போன்ற அளவு, அல்லது தன்மை காரணமாக, விமானத்தில் கொண்டு செல்ல ஏற்றவை அல்ல என்று விமான நிறுவனம் கருதுகின்ற பொருட்கள்.

(d)   நாய்கள், பூனைகள், வீட்டில் வளர்க்கும் பறவைகள், பிற செல்லப்பிராணிகள் ஆகியவை, விமான நிறுவனத்தின் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு விமானத்தில் கொண்டு செல்ல ஏற்கப்படும்.

(e)   வேட்டையாடுதல், விளையாட்டு போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துபவை தவிர, மற்ற துப்பாக்கிகள் மற்றும், தோட்டாக்கள்.

(f)    உடையக்கூடிய அல்லது கெட்டுப் போகக்கூடிய பொருட்கள், பணம், நகைகள், விலை உயர்ந்த உலோகங்கள், வெள்ளிப் பாத்திரங்கள், பணமதிப்புள்ள ஆவணங்கள், பங்குகள் அல்லது பிற விலை உயர்ந்த பொருட்கள், வணிக ஆவணங்கள், பாஸ்போர்ட்கள் மற்றும் பிற அடையாள ஆவணங்கள் அல்லது மாதிரிகள்.

(g)   பழங்காலத் துப்பாக்கிகள், வாள்கள், கத்திகள் மற்றும் அதுபோன்ற பிற பொருட்கள் எங்கள் சுய விருப்பத்தின் பேரில், செக் செய்த பேகேஜாக ஏற்கப்படலாம், ஆனால் விமானத்தின் கேபினில் வைத்துக்கொள்ள அவை அனுமதிக்கப்படாது.

8.3.4   பணம், நகைகள், விலை உயர்ந்த உலோகங்கள், கணினிகள், தனிநபர் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பணமதிப்புள்ள ஆவணங்கள், பங்குகள் அல்லது பிற விலை உயர்ந்த பொருட்கள், வணிக ஆவணங்கள், பாஸ்போர்ட்கள் மற்றும் பிற அடையாள ஆவணங்கள் அல்லது மாதிரிகளை செக் செய்த பேகேஜில் நீங்கள் சேர்க்கக்கூடாது.

8.3.5   தடை செய்யப்பட்டிருந்த போதும், 8.3.1, 8.3.2, 8.3.4 ஆகிய விதிகளில் குறிப்பிடப்பட்ட பொருட்களை உங்கள் பேகேஜிங் நீங்கள் சேர்த்திருந்தால், அந்தப் பொருட்களின் இழப்பு அல்லது சேதத்திற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

8.4   பயண அனுமதியை மறுப்பதற்கான உரிமை

8.4.1   பத்தி 8.3.2 மற்றும் பத்தி 8.3.3-இல் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, 8.3 பிரிவில் விவரிக்கப்பட்ட பொருட்களை பேகேஜாக எடுத்துச் செல்வதை நாங்கள் மறுப்போம். மேலும் அதுபோன்ற பொருட்களை பின்னர் நாங்கள் கண்டறிந்தால் தொடர்ந்து அவற்றைக் கொண்டு செல்ல மறுக்கக்கூடும்.

8.4.2   அளவு, வடிவம், எடை, உள்ளடங்கிய பொருட்கள், தன்மை அல்லது பாதுகாப்பு அல்லது இயக்கக் காரணங்களுக்காக, அல்லது பிற பயணிகளின் சௌகரியம் காரணமாக விமானத்தில் கொண்டு செல்ல ஏற்றதல்ல என்று நாங்கள் நியாயமான விதத்தில் கருதுகின்ற எந்த பொருளையும் பேகேஜாகக் கொண்டு செல்ல நாங்கள் மறுக்கக்கூடும். ஏற்கப்படாத பொருட்கள் பற்றிய தகவல், கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.

8.4.3   எங்கள் நியாயமான கருத்தின்படி சரியாகவும் பாதுகாப்பாகவும் தகுந்த கண்டெய்னர்களிலும் பேக் செய்யப்பட்டிருக்கிறது என்று நாங்கள் கருதாவிட்டால், பேகேஜைக் கொண்டு செல்ல நாங்கள் மறுக்கக்கூடும். நாங்கள் ஏற்காத பேக்கிங் மற்றும் கன்டெய்னர்கள் பற்றிய தகவல், கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.

8.5   தேடுவதற்கான உரிமை

பாதுகாப்பு மற்றும் காவல் காரணங்களுக்காக, உங்களைத் தேடவும் ஸ்கேன் செய்யவும், உங்கள் பேகேஜைத் தேடவும் ஸ்கேன் செய்யவும் எக்ஸ்ரே கொண்டு ஸ்கேன் செய்யவும் அனுமதிக்குமாறு உங்களிடம் நாங்கள் கோரலாம். தேடியும் நீங்கள் கிடைக்காதபட்சத்தில், 8.3.1 விதிமுறையில் விவரிக்கப்பட்டுள்ள ஏதேனும் பொருட்கள் அல்லது 8.3.2 அல்லது 8.3.3 விதிமுறைகளுக்கு இணங்க எங்களிடம் தெரிவிக்கப்படாத, ஏதேனும் துப்பாக்கிகள், தோட்டா அல்லது ஆயுதங்கள் உங்களிடம் அல்லது உங்கள் பேகேஜில் உள்ளதா என்று தீர்மானிப்பதற்காக, நீங்கள் இல்லாமலே உங்கள் பேகேஜ் தேடப்படலாம். தேடல் கோரிக்கைக்கு நீங்கள் இணங்க மறுத்தால், உங்களையும் உங்கள் பேகேஜையும் விமானத்தில் கொண்டு செல்ல நாங்கள் மறுக்கக்கூடும். தேடுவது அல்லது ஸ்கேன் செய்வது உங்களுக்கு ஏதேனும் சேதத்தை ஏற்படுத்தினால் அல்லது எக்ஸ்ரே சோதனை செய்வது அல்லது ஸ்கேன் செய்வது உங்கள் பேகேஜுக்குச் சேதத்தை ஏற்படுத்தினால், எங்களுடைய தவறு அல்லது கவனக்குறைவின் காரணமாக அத்தகைய சேதம் ஏற்பட்டால் தவிர, அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.

8.6   செக் செய்த பேகேஜ்

8.6.1   நீங்கள் செக் செய்ய விரும்புகின்ற பேகேஜை எங்களிடம் நீங்கள் ஒப்படைக்கும்போது, செக் செய்த உங்கள் ஒவ்வொரு பேகேஜையும் எங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்வோம், அது ஒவ்வொன்றுக்கும் பேகேஜ் அடையாளச் சீட்டு வழங்குவோம்.

8.6.2   செக் செய்த பேகேஜில் உங்கள் பெயர் அல்லது பிற தனிப்பட்ட அடையாளத் தகவல் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

8.6.3   பாதுகாப்பு, காவல் அல்லது விமானத்தை இயக்குவது தொடர்பான காரணங்களுக்காக, வேறு விமானத்தில் பேகேஜைக் கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்யாத வரை, கூடுமானவரை செக் செய்த பேகேஜை நீங்கள் செல்லும் அதே விமானத்திலேயே கொண்டு செல்வோம். நீங்கள் செக் செய்த பேகேஜ் அடுத்து வரும் வேறு விமானத்தில் கொண்டுவரப்பட்டால், சுங்கத்துறை ஒப்புதல் கிடைப்பதற்கு நீங்கள் இருக்க வேண்டும் என்று பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியம் இல்லாதபட்சத்தில், அதை உங்களிடம் வழங்குவதற்குத் தேவையான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம்.

8.7   செக் செய்யாத பேகேஜ்

8.7.1   விமானத்தில் உங்களுடன் நீங்கள் கொண்டு செல்லக்கூடிய பேகேஜிங் அதிகபட்சப் பரிமாணம் மற்றும்/அல்லது எடையை நாங்கள் குறிப்பிடக்கூடும். அப்படி நாங்கள் குறிப்பிடாவிட்டால், நீங்கள் விமானத்தில் கொண்டு செல்லும் பேகேஜ் உங்களுக்கு முன்னே இருக்கின்ற இருக்கையின் அடியில் பொருந்தும் அளவில் அல்லது விமானத்தின் கேபினில் உள்ள ஸ்டோரேஜ் கம்பார்ட்மெண்டில் வைத்து மூடக்கூடிய அளவில் இருக்க வேண்டும். இந்த இரு வழிகளிலும் உங்கள் பேகேஜை வைக்க முடியாமல் இருந்தால் அல்லது அதன் எடை அதிகமாக இருந்தால் அல்லது ஏதேனும் காரணத்தினால் அது பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்டால், அதை 8.2, 8.3 ஆகிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செக் செய்த பேகேஜாக மட்டுமே நீங்கள் கொண்டு செல்ல முடியும்.

8.7.2   கார்கோ கம்பார்ட்மெண்டில் கொண்டு செல்ல ஏற்றதாக இல்லாத பொருட்கள் மற்றும் மேலே உள்ள 8.7.1 விதிமுறையில் கொடுக்கப்பட்டுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யாத பொருட்கள், முன்பு எங்களிடம் நீங்கள் அறிவிப்பை வழங்கி நாங்கள் அதற்கு அனுமதி வழங்கியிருந்தால் மட்டுமே கேபின் கம்பார்ட்மெண்டில் அவற்றைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். இந்தச் சேவைக்காக நீங்கள் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

8.7.3   பயணிகள் இலவசமாகக் கையில் கொண்டு செல்லக்கூடிய பேகேஜ்: பிசினஸ் வகுப்பு - 2 கேபின் பேகேஜ், 18"x14"x8" (46x36x20செ.மீ) என்ற அளவிற்கு மிகாமலும், ஒவ்வொன்றும் அல்லது இரண்டும் சேர்த்து அதிகபட்சம் 7 கிலோவுக்கு மிகாத எடையும் இருக்கின்ற ஆடைகளைக் கொண்டு செல்லும் பைகள் அல்லது ஓவர் நைட் பைகள் எக்கனாமி வகுப்பு - 18"x14"x8" (46x36x20செ.மீ) என்ற அளவிற்கு மிகாமலும், 7 கிலோவுக்கு மிகாத எடையும் கொண்ட 1 பை. மேலே குறிப்பிட்ட செக் செய்யாத பேகேஜ் தவிர, கீழே கொடுக்கப்பட்டுள்ள படி இலவசமாகக் கையில் கொண்டு செல்லக்கூடிய பொருட்கள் அனுமதிக்கப்படும்;

  • ஒரு மடிக்கணினி
  • பெண்கள் பயன்படுத்தும் ஒரு கைப்பை, பர்ஸ் அல்லது பாக்கெட் புக்
  • ஒரு ஓவர் கோட், ஷால் அல்லது போர்வை
  • ஒரு குடை அல்லது வாக்கிங் ஸ்டிக்
  • ஒரு சிறிய கேமரா மற்றும்/அல்லது ஒரு பைனாகுலர்
  • குழந்தையைத் தூக்கிச் செல்வதற்கான கூடை அல்லது முழுவதும் மடித்துச் சிறிதாக்கக்கூடிய ஸ்ட்ரோலர்/புஷ்சேர் (கேபினில் இடம் இருந்தால் மட்டும் கொண்டு செல்லப்படலாம். இடம் இல்லை என்றால் செக் செய்த பேகேஜாகக் கொண்டு செல்ல வேண்டும்).

பயணிகளுக்கும் விமானக் குழு உறுப்பினர்களுக்கும் காயங்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கு கேபின் பேகேஜிற்கான இந்தக் கட்டுப்பாடுகள் மிக மிக முக்கியமாகும். ஆகவே, போர்டிங் கேட்டில் வைக்கப்பட்டுள்ள கேபின் பேகேஜ் எடை பார்க்கும் கருவியில் பொருந்தாத, கையில் கொண்டு செல்வதற்கான பேகேஜ் போர்டிங் கேட்டில் மீட்டு பெறப்படும்.

8.8   குறியீட்டுப் பகிர்வு பேகேஜ் கொள்கை

உங்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் டிக்கெட்டுகளில் இருக்கின்ற, ஆனால் பிற விமான நிறுவனத்தால் இயக்கப்படுகின்ற, ‘UL’ விமான எண் கொண்ட விமானங்கள், குறியீட்டுப் பகிர்வு விமானங்கள் ஆகும். இந்த விமான நிறுவனங்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வேறுபட்ட பேகேஜ் அனுமதி வரம்புகளை வைத்திருக்கக்கூடும். பேகேஜ் அனுமதி வரம்புகள் அல்லது கையில் கொண்டு செல்லக்கூடிய பேகேஜிற்கான கட்டணங்கள் தொடர்பான தகவலுக்கு, அந்த விமான நிறுவனத்தின் பேகேஜ் கொள்கையைப் பாருங்கள். எங்கள் குறியீட்டுப் பகிர்வு கூட்டாளர்கள் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

8.9   செக் செய்த பேகேஜின் சேகரிப்பு மற்றும் டெலிவரி

8.9.1   8.6.3 கட்டுரைக்கு உட்பட்டு, நீங்கள் சென்று சேரும் இடத்தில் அல்லது இடைப்பட்ட நிறுத்த இடத்தில் உங்கள் செக் செய்த பேகேஜ் வழங்கப்பட்டவுடன், கூடிய விரைவில் அதை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். தகுந்த நேரத்திற்குள் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள தவறினால், அதை எடுத்து வைப்பதற்கான கட்டணத்தை நாங்கள் வசூலிக்கக்கூடும். உங்கள் செக் செய்த பேகேஜ் கிடைக்கும்பட்சத்தில், மூன்று (3) மாதங்களுக்குள் அதை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், உங்களுக்கு எந்தவித அறிவிப்பும் வழங்காமல் அதை நாங்கள் அப்புறப்படுத்தக்கூடும்.

8.9.2   பேகேஜ் செக் மற்றும் பேகேஜ் அடையாளச் சீட்டை வைத்திருப்பவர் மட்டுமே செக் செய்த பேகேஜை டெலிவரி பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர் ஆவார்.

8.9.3   செக் செய்த பேகேஜை உரிமை கோரும் நபரால், பேகேஜ் செக்கை வழங்க முடியாவிட்டால், பேகேஜ் அடையாளச் சீட்டைக் கொண்டு பேகேஜை அடையாளம் காட்ட முடியாவிட்டால், நாங்கள் திருப்திகரமாக நம்பும் அளவிற்கு அந்த பேகேஜிற்கு அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் நிரூபித்து, எங்களை இழப்பீட்டில் இருந்து விடுவிப்பதற்கான படிவத்தில் கையொப்பமிட்டால் மட்டுமே அந்த நபரிடம் பேகேஜை நாங்கள் ஒப்படைப்போம்.

8.10   விலங்குகள்

உங்கள் விலங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல நாங்கள் ஏற்றுக் கொண்டால், பின்வரும் நிபந்தனைகள் அதற்குப் பொருந்தும்:

8.10.1  நாய்கள், பூனைகள், வீட்டில் வளர்க்கும் பறவைகள் மற்றும் பிற செல்லப் பிராணிகள் தகுந்த கூண்டுகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும், நீங்கள் செல்ல இருக்கின்ற அல்லது நீங்கள் கடந்து செல்ல இருக்கின்ற நாடுகளில் கேட்கப்படும் செல்லுபடியான உடல்நலம் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்கள், நுழைவதற்கான அனுமதிகள் மற்றும் பிற ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது பயணத்திற்கு அனுமதிக்கப்படாது. இப்படிக் கொண்டு செல்வது, நாங்கள் குறிப்பிடுகின்ற கூடுதல் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். கோரிக்கையின் பேரில் அவை கிடைக்கும்.

8.10.2  பேகேஜாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், கண்டெய்னர் மற்றும் உணவுடன் சேர்த்து, விலங்கு உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இலவச பேகேஜில் சேர்க்கப்படக் கூடாது, அது கூடுதல் பேகேஜாகவே கருதப்படும், அதற்கு பொருந்தக்கூடிய கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும்.

8.10.3  உடல் குறைபாடுகளைக் கொண்ட பயணிகளுடன் பயணிக்கும் வழிகாட்டும் நாய்கள், வழக்கமாக அனுமதிக்கப்படும் இலவச பேகேஜ் வரம்புடன் கூடுதலாக, இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இது நாங்கள் குறிப்பிடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. கோரிக்கையின் பேரில் இவை கிடைக்கும்.

8.10.4  பயணமானது, சாசனத்தின் பொறுப்பு விதிகளுக்கு உட்படாதபட்சத்தில், நாங்கள் கவனக்குறைவாக இருந்தால் தவிர, நாங்கள் பயணம் செய்ய ஒப்புக்கொண்ட விலங்குக்கு ஏற்படும் காயம், தொலைந்து போவது, உடல்நலப் பிரச்சினை அல்லது மரணத்திற்கு நாங்கள் பொறுப்பேற்கமாட்டோம்.

8.10.5  விலங்கு செல்ல இருக்கின்ற அல்லது கடந்து செல்ல இருக்கின்ற நாடு, மாநிலம் அல்லது பிரதேசத்திற்குத் தேவையான நுழைவு, வெளியேற்றம், உடல்நலம் மற்றும் பிற அனைத்து ஆவணங்களையும் கொண்டிருக்காத விலங்கிற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம், இதன் விளைவாக எங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள், ஏற்படும் செலவுகள், இழப்புகள் அல்லது பொறுப்புகளுக்கான இழப்பீட்டை விலங்கைக் கொண்டு செல்லும் நபரே வழங்க வேண்டும்.

8.10.6  நீங்கள் அமெரிக்காவில் இருந்து விமானத்தில் பயணம் செய்தால் அல்லது அமெரிக்காவை நோக்கி விமானத்தில் பயணம் செய்தால், வேறு உள்நாட்டு விதிமுறைகள் பொருந்தக்கூடும். அமெரிக்காவை நோக்கி அல்லது அமெரிக்காவில் இருந்து செய்யும் பயணங்களுக்கு பொருந்தக்கூடிய விதிகள் பற்றிய கூடுதல் தகவல், கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் அனைத்துமே விலங்குகளைக் கொண்டு செல்வதற்கு இணக்கமானவை அல்ல என்பதால், முன்பதிவு செய்யும்போது உங்கள் டிக்கெட்டிங் ஏஜெண்ட்டிடம் அது குறித்து விசாரித்துக் கொள்ளவும்.


கட்டுரை 9 கால அட்டவணைகள், தாமதங்கள், விமானங்கள் ரத்துசெய்யப்படுதல்

9.1   கால அட்டவணைகள்

9.1.1   கால அட்டவணைகளில் காட்டப்படும் விமான நேரங்கள், அவை வெளியிடப்பட்ட தேதியில் இருந்த நிலையில் இருந்து நீங்கள் உண்மையில் பயணம் செய்யக்கூடிய தேதியில் மாறக்கூடும். அவற்றுக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்கவில்லை, மேலும் எங்களுடனான உங்கள் ஒப்பந்தத்திலும் அவை குறிப்பிடப்படவில்லை.

9.1.2   உங்கள் முன்பதிவை நாங்கள் ஏற்கும் முன்பு, அந்த நேரத்தில் திட்டமிடப்பட்டுள்ள விமான நேரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்போம், அதுவே உங்கள் டிக்கெட்டிலும் காட்டப்படும். டிக்கெட்டை வழங்கிய பிறகு, திட்டமிடப்பட்ட விமான நேரத்தை நாங்கள் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படச் சாத்தியம் உள்ளது. நீங்கள் உங்கள் தொடர்புத் தகவலை எங்களிடம் வழங்கினால், அத்தகைய மாற்றங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்போம். நீங்கள் டிக்கெட்டை வாங்கிய பிறகு, திட்டமிடப்பட்ட விமான நேரத்தில் நாங்கள் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்தால், அது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏற்புடைய வகையிலான மாற்று விமானத்தை எங்களால் முன்பதிவு செய்து கொடுக்க முடியாமல் போனால், கட்டுரை 10.2-க்கு இணங்க, பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

9.2   விமானம் ரத்துசெய்யப்படுதல், தடம் மாற்றி அனுப்பப்படுதல், தாமதங்கள் போன்றவை

9.2.1   உங்களையும் உங்கள் பேகேஜையும் கொண்டு செல்வதில் எந்தத் தாமதமும் ஏற்படாமல் தவிப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம். இந்த நடவடிக்கைகளை எடுக்கையில், விமானம் ரத்துசெய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, விதிவிலக்கான அரிய சூழல்களில் எங்கள் சார்பாக வேறொரு விமான நிறுவனத்தால் இயக்கப்படுகின்ற விமானம் மற்றும்/அல்லது வேறொரு விமானத்தை நாங்கள் ஏற்பாடு செய்யக்கூடும்.

9.2.2   சாசனத்தில் வேறு விதமாக வழங்கப்படாதபட்சத்தில், நாங்கள் ஒரு விமானத்தை ரத்துசெய்தால், கால அட்டவணைக்கு ஏற்ப எங்களால் ஒரு விமானத்தை இயக்க முடியாவிட்டால், நீங்கள் சென்று சேர வேண்டிய இடம் அல்லது நிறுத்த இடத்தில் எங்களால் நிறுத்த முடியாமல் போனால் அல்லது நீங்கள் முன்பதிவு செய்து இருந்த இணைப்பு விமானத்தைத் தவறவிட நேர்ந்தால், பின்வரும் தீர்வுகளை உங்கள் விருப்பப்படி நாங்கள் வழங்குவோம்:

(a)   கூடுதல் கட்டணம் இல்லாமல், திட்டமிடப்பட்ட எங்கள் அடுத்த சேவைகளில் கூடிய விரைவில் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, இடம் கிடைக்கக்கூடிய விமானத்தில் உங்களை அழைத்துச் செல்வது, தேவைப்பட்டால் உங்கள் டிக்கெட்டின் செல்லுபடிக் காலத்தை நீட்டிப்பது; அல்லது

(b)   கூடுதல் கட்டணம் இல்லாமல், எங்கள் சேவைகள் அல்லது மற்றொரு விமான நிறுவனத்தின் சேவைகள் மூலம், இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் வழிகளில் மற்றும் போக்குவரத்து வகுப்பில், உங்கள் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சென்று சேர வேண்டிய இடத்திற்கு நியாயமான கால அளவில் உங்களை அனுப்பி வைப்பது. புதிய பயணத் தடத்திற்கான கட்டணம் நீங்கள் ஏற்கனவே செலுத்திய தொகையைவிடக் குறைவாக இருந்தால், வித்தியாசத் தொகையை உங்களுக்கு நாங்கள் திருப்பியளிப்போம்; அல்லது

(c)   கட்டுரை 10.2-இன் விதிமுறைகளுக்கு இணங்க பணத்தைத் திருப்பியளிப்போம்; அல்லது

(d)   பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டம் மற்றும்/அல்லது எங்களுடைய போர்டிங் மறுக்கப்பட்டதற்கான இழப்பீட்டுக் கொள்கைக்கு இணங்க, ஈட்டுத்தொகை பெற நீங்கள் தகுதி வாய்ந்தவராக இருக்கும்பட்சத்தில் அதை வழங்குவோம் (பொருந்தும் எனில். கோரிக்கையின் பேரில் அதன் ஒரு நகலைப் பெற்றுக்கொள்ளலாம்).

9.2.3   கட்டுரை 9.2.2-இல் விவரிக்கப்பட்டுள்ள படி ஏதேனும் நேர்ந்தால், சாசனத்தில் வேறு விதமாக வழங்கப்பட்டால் தவிர, கட்டுரை 9.2.2(a), முதல் 9.2.2(d) வரை விவரிக்கப்பட்ட தெரிவுகளே, உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரே மற்றும் பிரத்தியேக நிவாரணங்கள் ஆகும், அதைத் தாண்டி உங்களுக்கு நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பாகவில்லை.

9.3   போர்டிங் மறுக்கப்பட்டதற்கான இழப்பீடு

முன்பு நீங்கள் முன்பதிவு செய்த இடத்தை எங்களால் உங்களுக்கு வழங்க முடியாமல் போனால், பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க மற்றும் போர்டிங் மறுக்கப்பட்டதற்கான இழப்பீட்டுக் கொள்கை பொருந்தும் அளவிற்கு அதற்கு இணங்க அந்தப் பயணிகளுக்கு நாங்கள் ஈட்டுத்தொகை வழங்குவோம். போர்டிங் மறுக்கப்பட்டதற்கான இழப்பீட்டுக் கொள்கையின் நகல், கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.


கட்டுரை 10 பணம் திருப்பியளித்தல்

10.1 பொருந்தக்கூடிய கட்டண விதிமுறைகள் அல்லது கட்டண விவரங்களுக்கு இணங்க, பின்வரும்படி, டிக்கெட் அல்லது அதன் பயன்படுத்தாத பகுதிக்கான பணத்தை நாங்கள் திருப்பியளிப்போம்:

10.1.1 இந்தக் கட்டுரையில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, டிக்கெட்டில் பெயர் உள்ள நபர் அல்லது டிக்கெட்டிற்குப் பணம் செலுத்திய நபருக்கு (அவர்தான் பணம் செலுத்தினார் என்பதற்கான திருப்திகரமான ஆதாரத்தை வழங்கும்பட்சத்தில்), பணத்தைத் திருப்பியளிக்க எங்களுக்குக் கடமை உள்ளது.

10.1.2 டிக்கெட்டில் பெயர் உள்ள பயணி அல்லாத வேறொரு நபர் டிக்கெட்டிற்குப் பணம் செலுத்தியிருந்தால், டிக்கெட்டின் பணம் திருப்பியளிப்பதற்குக் கட்டுப்பாடு இருப்பதாக காண்பிக்கப்பட்டால், டிக்கெட்டிற்குப் பணம் செலுத்திய நபருக்கு அல்லது அவரது கோரிக்கையின் பேரில் மட்டுமே நாங்கள் பணத்தைத் திருப்பியளிப்போம்.

10.1.3 டிக்கெட் தொலைந்து போகும் சூழ்நிலை தவிர்த்து, டிக்கெட் மற்றும் பயன்படுத்தப்படாத விமானக் கூப்பன்களை எங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே பணத்தைத் திருப்பியளிப்போம்.

10.2 கட்டாயமாகப் பணம் திருப்பியளிக்கப்படுதல்

10.2.1 நாங்கள் ஒரு விமானத்தை ரத்துசெய்தால், கால அட்டவணைக்கு ஏற்ப விமானத்தை இயக்கத் தவறினால், நீங்கள் சென்று சேர வேண்டிய இடம் அல்லது நிறுத்த இடத்தில் விமானத்தை நிறுத்தத் தவறினால், உங்கள் பயண வகுப்பைத் தரமிறக்கினால் அல்லது நீங்கள் முன்பதிவு செய்திருக்கும் இணைப்பு விமானத்தை நீங்கள் தவறவிட நாங்கள் காரணமானால், திருப்பியளிக்கப்படும் தொகையானது:

(a)    டிக்கெட்டின் எந்தப் பகுதியும் பயன்படுத்தப்படாமல் இருந்தால், செலுத்தப்பட்ட கட்டணத் தொகைக்குச் சமமாக இருக்கும்;

(b)    டிக்கெட்டின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட கட்டணத்திற்கும், டிக்கெட் பயன்படுத்தப்பட்ட இடங்களுக்கு இடையிலான பயணத்திற்கான பொருந்தக்கூடிய கட்டணத்திற்கும் இடையிலான வித்தியாசத் தொகைக்குக் குறையாமல் இருக்கும்.

(c)    உங்கள் பயண வகுப்பு தரமிறக்கப்பட்டால், தரமிறக்கப்பட்ட செக்ட்டாருக்குச் செலுத்தப்பட்ட கட்டணத்திற்கும், அந்த செக்ட்டாருக்கான உண்மையான பயண வகுப்பிற்குப் பொருந்தக்கூடிய கட்டணத்திற்கும் இடையிலான வித்தியாசத் தொகையாக இருக்கும்.

10.3 தன்னிச்சையாகப் பணம் திருப்பியளிக்கப்படுதல்

10.3.1 நீங்கள் கட்டுரை 10.2-இல் விவரிக்கப்பட்ட காரணங்கள் அல்லாத பிற காரணங்களுக்காக உங்கள் டிக்கெட்டிற்கான பணத்தைத் திரும்பப் பெற தகுதி பெற்றால், திருப்பியளிக்கப்படும் தொகையானது (கட்டுரை 3.1.3-க்கு உட்பட்டு):

(a)   டிக்கெட்டின் எந்தப் பகுதியும் பயன்படுத்தப்படாமல் இருந்தால், செலுத்தப்பட்ட கட்டணத் தொகையில் இருந்து, நியாயமான ஏதேனும் சேவைக் கட்டணங்கள் அல்லது ரத்துக் கட்டணங்கள் பிடித்தம் செய்தது போக மீதமுள்ள தொகையாக இருக்கும்;

(b)   டிக்கெட்டின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட கட்டணத்திற்கும், டிக்கெட் பயன்படுத்தப்பட்ட இடங்களுக்கு இடையிலான பயணத்திற்கான பொருந்தக்கூடிய கட்டணத்திற்கும் இடையிலான வித்தியாசத் தொகையில் இருந்து, நியாயமான ஏதேனும் சேவைக் கட்டணங்கள் அல்லது ரத்துக் கட்டணங்கள் பிடித்தம் செய்தது போக மீதமுள்ள தொகையாக இருக்கும்;

10.4 தொலைந்து போன டிக்கெட்டிற்கான பணம் திருப்பியளிக்கப்படுதல்

10.4.1 உங்கள் டிக்கெட் தொலைந்து போனால் அல்லது அதன் ஒரு பகுதி தொலைந்து போனால், டிக்கெட் தொலைந்து விட்டதற்கான திருப்திகரமான ஆதாரத்தை எங்களிடம் நீங்கள் வழங்கி, நியாயமான ஒரு நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்தும்பட்சத்தில், பின்வரும் நிபந்தனைகளின் பேரில், டிக்கெட்டின் செல்லுபடிக் காலம் முடிந்த பிறகு கூடிய விரைவில் பணம் திருப்பியளிக்கப்படும்:

(a)   தொலைந்து போன டிக்கெட் அல்லது அதன் பகுதி பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது, முன்பே அதற்குப் பணம் திருப்பியளிக்கப்பட்டு இருக்கக் கூடாது அல்லது அதற்கு மாற்றாக வேறொரு டிக்கெட் வழங்கப்பட்டிருக்கக் கூடாது (அப்படிப் பயன்படுத்துவது, பணம் திருப்பியளிப்பது அல்லது ஒரு மூன்றாம் தரப்பினரால் அல்லது ஒரு மூன்றாம் தரப்பினருக்கு மாற்றாக வேறு டிக்கெட் வழங்கப்படுவது ஆகியவை எங்களுடைய கவனக்குறைவால் நிகழ்ந்திருந்தால் தவிர)

(b)   பணம் திருப்பியளிக்கப்படும் நபர், நாங்கள் பரிந்துரைக்கும் அத்தகைய படிவத்தில், மோசடி நிகழும்பட்சத்தில் மற்றும்/அல்லது தொலைந்து போன டிக்கெட்டில் மூன்றாம் தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட அளவிற்கு (எங்களுடைய கவனக்குறைவின் காரணமாக மோசடி அல்லது மூன்றாம் தரப்பினர் டிக்கெட்டைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டிருந்தால் தவிர) திருப்பியளிக்கப்பட்ட தொகையை எங்களுக்கு மீண்டும் செலுத்துவதாக உறுதியளிக்க வேண்டும்.

(c)   நாங்கள் அல்லது எங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட் டிக்கெட்டை அல்லது அதன் ஒரு பகுதியைத் தொலைத்து விட்டால், அந்த இழப்புக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வோம்.

10.5 பணத்தைத் திருப்பியளிக்க மறுப்பதற்கான உரிமை

10.5.1 டிக்கெட் முதலில் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 1 வருடத்திற்குள் பணத்தைத் திருப்பிக் கேட்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்காவிட்டால் நாங்கள் பணத்தைத் திருப்பியளிக்க மாட்டோம்.

10.5.2 டிக்கெட்டின் செல்லுபடிக் காலம் முடிந்த பிறகு பணத்தைத் திருப்பிக் கேட்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால் பணத்தைத் திருப்பியளிக்க நாங்கள் மறுக்கக்கூடும்.

10.5.3 நீங்கள் அந்த நாட்டிலேயே இருப்பதற்கு உங்களுக்கு அனுமதி உள்ளது அல்லது வேறொரு விமான நிறுவனத்தின் மூலம் அல்லது பிற வகை போக்குவரத்தின் மூலம் அந்த நாட்டை விட்டு நீங்கள் புறப்படுவீர்கள் என்பதற்கான திருப்தி எங்களுக்கு ஏற்படும்பட்சத்தில் நீங்கள் அதை நிரூபிக்காத வரை, அந்த நாட்டிலிருந்து புறப்படும் உங்கள் நோக்கத்திற்கான ஆதாரமாக எங்களிடம் அல்லது அரசாங்க அதிகாரிகளிடம் வழங்கப்பட்ட டிக்கெட்டுக்கான பணத்தைத் திருப்பியளிக்க நாங்கள் மறுக்கக்கூடும்.

10.6 நாணயம்

டிக்கெட்டிற்குப் பணம் செலுத்தப் பயன்படுத்திய அதே வழியில் மற்றும் அதே நாணயத்தில் பணத்தைத் திருப்பியளிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது.

10.7 டிக்கெட்டுக்கு யார் பணத்தைத் திருப்பியளிக்கலாம்

டிக்கெட்டை முதலில் வழங்கிய விமான நிறுவனம் அல்லது அவ்வாறு வழங்க அங்கீகரிக்கப்பட்ட அதன் ஏஜெண்ட் மட்டுமே தன்னிச்சையாகப் பணத்தைத் திருப்பியளிக்கும் செயல்முறைகளை மேற்கொள்ள முடியும்.


கட்டுரை 11 விமானத்தில் ஏறிய பின் நடந்து கொள்ளும் விதம்

11.1 பொது

விமானத்திற்கு அல்லது விமானத்தில் உள்ள ஏதேனும் ஒரு நபருக்கு அல்லது உடைமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் நீங்கள் நடந்து கொண்டால் அல்லது விமானக் குழுவினர் தங்களது கடமைகளைச் செய்வதை தடுத்தால், புகைபிடித்தல், ஆல்கஹால் அல்லது போதைப்பொருள் உட்கொள்ளுதல் போன்றவை தொடர்பான அறிவுறுத்தல்கள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல) எந்த அறிவுறுத்தல்களுக்கும் நீங்கள் இணங்கத் தவறினால் அல்லது பிற பயணிகளுக்கு அல்லது விமானக் குழுவினருக்கு அசௌகரியம், வசதியின்மை, சேதம் அல்லது உடல் காயம் ஏற்படும் விதத்தில் நீங்கள் நடந்து கொண்டால், அத்தகைய உங்கள் நடத்தை தொடர்வதைத் தடுக்கத் தேவையானதாக நாங்கள் கருதும் நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கக்கூடும். பலவந்தமாகக் கட்டுப்படுத்துதலும் இதில் அடங்கும். எந்த நேரத்திலும் நீங்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்படலாம் மற்றும் விமானத்தில் பயணத்தைத் தொடர மறுக்கப்படலாம், விமானத்தில் இருக்கும்போது நீங்கள் செய்த குற்றங்களுக்காக வழக்கு தொடுக்கப்படலாம்.

11.2 Pவிமானம் திருப்பிவிடப்படுதல் தொடர்பான செலவுகளுக்கான கட்டணம்

கட்டுரை 11.1-இல் குறிப்பிட்ட விதங்களில் நீங்கள் நடந்து கொண்டதன் விளைவாக, நியாயமான அளவில் எங்கள் சுய விருப்பத்தைப் பயன்படுத்தி உங்களை விமானத்திலிருந்து வெளியேற்றுவதற்காக விமானத்தை நாங்கள் திருப்பி விட முடிவு செய்தால், அதனால் ஏற்படும் எல்லாச் செலவுகளுக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.


கட்டுரை 12 கூடுதல் சேவைகளுக்கான ஏற்பாடுகள்

12.1 விமானத்தின் சேவைகள் தவிர, விமானப் பயணத்தின்போது ஏதேனும் மூன்றாம் தரப்பினர் மூலம் உங்களுக்கு ஏதேனும் சேவைகளை வழங்க நாங்கள் ஏற்பாடு செய்தால், ஹோட்டல் முன்பதிவுகள் அல்லது வாடகைக் கார் போன்ற, மூன்றாம் தரப்பினர் வழங்கும் போக்குவரத்து அல்லது சேவைகள் (விமானப் பயணத்தில் அழைத்துச் செல்வது தவிர) தொடர்பாக ஏதேனும் டிக்கெட் அல்லது வவுச்சரை நாங்கள் வழங்கினால், அவ்வாறு செய்யும்போது நாங்கள் உங்களுக்கான ஓர் ஏஜெண்ட்டாகவே செயல்படுகிறோம். மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

12.2 வான்வழி அல்லாத பிற வகை போக்குவரத்தையும் நாங்கள் உங்களுக்கு வழங்கினால், அத்தகைய போக்குவரத்திற்குக் கூடுதல் நிபந்தனைகள் பொருந்தக்கூடும். அத்தகைய நிபந்தனைகள், கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.


கட்டுரை 13 நிர்வாக நடைமுறைகள்

13.1 பயண ஆவணங்கள்

13.1.1 தேவையான எல்லாப் பயண ஆவணங்கள் மற்றும் விசாக்களைப் பெறுவது, நீங்கள் புறப்பட்ட, நீங்கள் செல்ல இருக்கின்ற அல்லது வழியே கடந்து செல்ல இருக்கின்ற நாடுகளுக்குத் தேவையான சட்டங்கள், ஒழுங்குமுறைகள், ஆணைகள், தேவைப்பாடுகள் மற்றும் பயணத் தேவைகள் அனைத்திற்கும் இணங்குவது உங்கள் பொறுப்பாகும்.

13.1.2 அத்தகைய ஆவணங்கள் அல்லது விசாக்களைப் பெற ஏதேனும் பயனர் தவறினால் அல்லது அத்தகைய சட்டங்கள், ஒழுங்குமுறைகள், ஆணைகள், தேவைப்பாடுகள், தேவைகள், விதிகள் அல்லது அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.

13.1.3 பயணத்திற்கு முன்பு மற்றும்/அல்லது பயணத்தின்போது, சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டம், ஒழுங்குமுறை, ஆணை, தேவைப்பாடு அல்லது பிற அவசியத்தின் கீழ் வெளியேற்றம், நுழைவு, உடல்நலம் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் வழங்க வேண்டும்/வழங்க வேண்டி இருக்கலாம், மேலும் நாங்கள் அவற்றை நகலெடுக்கவும் நகல்களை நாங்களே வைத்திருக்கவும் நீங்கள் எங்களை அனுமதிக்க வேண்டும். இந்தத் தேவைகளுக்கு நீங்கள் இணங்காதபட்சத்தில் அல்லது உங்கள் பயண ஆவணங்கள் சரியாக இல்லாதபட்சத்தில், உங்கள் பயண அனுமதியை மறுக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது.

13.2 நுழைவை மறுத்தல்

ஏதேனும் நாட்டில் உள்நுழைய உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அரசாங்கத்தால் அதற்காக எங்களுக்கு விதிக்கப்படும் ஏதேனும் கட்டணம் அல்லது அபராதத் தொகையைச் செலுத்துவதும், அந்த நாட்டில் இருந்து உங்களை அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து செலவுத் தொகையைச் செலுத்துவதும் உங்கள் பொறுப்பாகும். அனுமதி மறுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட இடம் வரை உங்களை விமானப் பயணத்தின் மூலம் அழைத்துச் சென்றதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் எங்களால் திருப்பியளிக்கப்படாது.

13.3 அபராதங்கள், பிடித்து வைத்தல் தொடர்பான செலவுகள் போன்றவற்றுக்குப் பயணியே பொறுப்பு.

சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டங்கள், ஒழுங்குமுறைகள், ஆணைகள், தேவைப்பாடுகள் அல்லது பிற பயணத் தேவைகளுக்கு நீங்கள் இணங்கத் தவறுவதன் காரணமாக அல்லது தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க தவறுவதன் காரணமாக, நாங்கள் ஏதேனும் அபராதம் அல்லது தண்டத்தொகை செலுத்த நேர்ந்தால் அல்லது எங்களுக்கு ஏதேனும் செலவு ஏற்பட்டால், அவ்வாறு நாங்கள் செலுத்திய தொகை அல்லது எங்களுக்கு ஏற்பட்ட செலவுக்கு நாங்கள் கேட்டால் நீங்கள் எங்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும். உங்கள் டிக்கெட்டில் பயன்படுத்தப்படாத மதிப்பு அல்லது எங்களிடம் இருக்கும் உங்களுடைய ஏதேனும் நிதிகள் ஆகியவற்றை, அத்தகைய பேமெண்ட் அல்லது செலவுக்காக நாங்கள் பிடித்தம் செய்து கொள்ளக்கூடும்.

13.4 சுங்கத்துறைச் சோதனை

தேவைப்பட்டால், சுங்கத்துறை அல்லது பிற அரசாங்க அதிகாரிகள் உங்கள் பேகேஜைச் சோதனை செய்ய நீங்கள் உட்பட வேண்டும். அத்தகைய சோதனையின்போது அல்லது இந்தத் தேவைக்கு நீங்கள் இணங்கத் தவறுவதன் காரணமாக உங்களுக்கு ஏற்படும் ஏதேனும் இழப்பு அல்லது சேதத்திற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.

13.5 பாதுகாப்புச் சோதனை

அரசாங்கங்கள், விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள் அல்லது நாங்கள் செய்கின்ற பாதுகாப்புச் சோதனைகளுக்கு நீங்கள் உட்பட வேண்டும்.


கட்டுரை 14 பின்தொடரும் விமான நிறுவனங்கள்

ஒரே டிக்கெட் அல்லது இணைப்பு டிக்கெட்டின் கீழ் நாங்களும் பிற விமான நிறுவனங்களும் சேர்ந்து விமானப் பயணத்தை வழங்கும்போது, சாசனத்தின் நோக்கங்களுக்காக, அது ஒரே இயக்கமாகக் கருதப்படும்.


கட்டுரை 15 சேதத்திற்கான பொறுப்பு

15.1 பொருந்தும் தன்மை

உங்கள் பயணத்துடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விமான நிறுவனத்திற்குமான பொறுப்பு, பயண அனுமதிக்கான அந்தந்த நிறுவனத்தின் நிபந்தனைகளால் தீர்மானிக்கப்படும். எங்கள் பொறுப்புக்கான விதிமுறைகள் பின்வருமாறு:

இந்தக் கட்டுரையில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, சாசனத்தில் வரையறுக்கப்பட்ட படி சர்வதேச விமானப் பயணம் என்பது சாசனத்தின் பொறுப்பு சார்ந்த விதிகளுக்கு உட்பட்டதாகும்.

15.2 பயணிகளுக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுதல்

15.2.1 விபத்து நேரும்பட்சத்தில் ஒரு பயணிக்கு ஏற்படும் மரணம், காயம் அல்லது பிற உடல் பாதிப்புகளால் ஏற்படும் சேதங்களுக்கான எங்கள் பொறுப்பானது, சட்டம், சாசனம் அல்லது ஒப்பந்தம் எதனாலும் வரையறுக்கப்பட்ட எந்தவித நிதி வரம்புக்கும் உட்பட்டதல்ல.

15.2.2 128,821 ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸிற்கு சமமான தொகை வரையான எந்தச் சேதங்களுக்கும், வேதத்தைத் தவிர்ப்பதற்கு நாங்களும் எங்கள் ஏஜெண்ட்டுகளும் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தோம் அல்லது அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது எங்களுக்கு அல்லது எங்கள் ஏஜெண்ட்டுகளுக்குச் சாத்தியமற்றதாக இருந்தது என்று நிரூபித்து, எங்கள் பொறுப்பை நாங்கள் விலக்கிக்கொள்ள அல்லது வரம்பிட முடியாது.

15.2.3 கட்டுரை 15.3.2-இல் உள்ள விதிமுறைகளையும் மீறி, காயம் அடைந்த அல்லது இறந்த பயணியின் கவனக்குறைவு காரணமாகவே அல்லது அவரின் பங்களிப்பின் காரணமாகவே சேதம் ஏற்பட்டது என்று நாங்கள் நிரூபித்தால், பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க நாங்கள் எதிர்கொள்ளக்கூடிய பொறுப்பில் இருந்து நாங்கள் முழுவதுமாக அல்லது பகுதியளவு விடுபடக்கூடும்.

15.2.4 இழப்பீட்டைப் பெறத் தகுதியான நபரின் அடையாளத்தை நாங்கள் கண்டுகொண்ட பிறகு, எந்தச் சூழ்நிலையிலும் 15 நாட்களுக்குள், தாமதமின்றி, அவர் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலையின் தன்மையின் அடிப்படையில், அவரது உடனடி பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்ள தேவையான முன் பணத்தை நாங்கள் வழங்குவோம்.

15.2.5 கட்டுரை 15.3.4-இன் சார்பு இல்லாமல், பயணி மரணிக்கும் சூழலில், நாங்கள் வழங்கும் முன் பணமானது, ஒரு பயனருக்கு, 15,000 ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸிற்கு சமமான தொகைக்குக் குறையாமல் இருக்கும்.

15.2.6 நாங்கள் முன்பணம் வழங்குவது, எங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டதாகக் குறிக்காது, அதன் பிறகு நாங்கள் வழங்கக்கூடிய ஏதேனும் தொகைகளுக்கு எதிராக எங்கள் பொறுப்பின் அடிப்படையில், விலக்கப்படலாம், ஆனால் கட்டுரை 15.2.3-இல் விவரிக்கப்பட்ட சூழல்களாக இருந்தால் அல்லது முன்பணத்தைப் பெற்ற அந்த நபரைக் கவனக் குறைவின் காரணமாகச் சேதத்திற்குக் காரணமாக இருந்தார் அல்லது இழப்பீட்டைப் பெறுவதற்குத் தகுதி பெற்ற நபர் அவர் அல்ல என்று பின்னர் நிரூபணம் ஆகும் சூழ்நிலைகளில், அது திருப்பியளிக்கக் கூடியதாக இருக்காது.

15.2.7 உங்கள் உடல் நிலையின் காரணமாக அல்லது அத்தகைய நிலை தீவிரமடைவதன் காரணமாக நேரும் உடல் நலக்குறைவு, காயம் அல்லது மரணம் உட்பட, உடல் இயலாமை எதற்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

15.3 பேகேஜ்

15.3.1 செக் செய்யாத பேகேஜிற்கு எங்கள் கவனக் குறைவால் ஏற்படும் சேதங்களைத் தவிர்த்து, பிற சேதத்திற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.

15.3.2 சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே அல்லது மூர்க்கமாக மற்றும் சேதம் நேரக்கூடும் என்று தெரிந்தே செய்யப்பட்ட செயல் அல்லது செயலைச் செய்யத் தவறுவதன் ரணமாகச் சேதம் ஏற்படும் சூழல்களைத் தவிர, செக் செய்த பேகேஜுக்கான சேதம் தொடர்பான எங்கள் பொறுப்பு சாசனத்தின் வழங்கப்பட்ட வரம்பின்படி இருக்கும், பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க, பொறுப்பிற்கான வெவ்வேறு வரம்புகள் பொருந்தும் என்றால், அந்த வரம்புகள் பொருந்தும். செக் செய்த பேகேஜிங் எடை பேகேஜ் செக்கில் குறிப்பிடப்படாவிட்டால், செக் செய்த பேகேஜிங் மொத்த எடையானது சம்பந்தப்பட்ட பயண வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்ட இலவச பேகேஜிற்குப் பொருந்தக்கூடிய எடைக்கு மிகாமல் இருப்பதாகக் கருதப்படும்.

15.3.3 உங்கள் பேகேஜினால் ஏற்படும் சேதம் எதற்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். உங்கள் பேகேஜிங் காரணமாகப் பிறருக்கு அல்லது உங்கள் உடைமை உட்பட, உடைமைகளுக்கு ஏற்படும் சேதத்திற்கு நீங்களே பொறுப்பாவிர்கள்.

15.3.4 கட்டுரை 8.3-இன் கீழ் குறிப்பிடப்பட்ட, செக் செய்த பேகேஜில் வைத்திருக்க அனுமதிக்கப்படாத, உடையக்கூடிய அல்லது கெட்டுப் போகக்கூடிய பொருட்கள், பணம், நகை, விலை உயர்ந்த உலோக, கணினிகள், தனிப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பண மதிப்பு கொண்ட ஆவணங்கள், பங்குகள் அல்லது பிற விலை மதிப்பு கொண்ட பொருட்கள், வணிக ஆவணங்கள், பாஸ்போர்ட்கள் மற்றும் பிற அடையாள ஆவணங்கள் அல்லது மாதிரிகள் போன்ற, சிறப்பு மதிப்பு கொண்ட பொருட்களுக்கு எந்த வித சேதம் நேர்ந்தாலும், அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.

15.4 பொது

15.4.1 மற்றொரு விமான நிறுவனத்தில் பயணம் செய்வதற்கு நாங்கள் டிக்கெட்டை வழங்கினால் அல்லது பேகேஜ் செக் செய்தால், மற்ற விமான நிறுவனத்திற்கு நாங்கள் ஒரு ஏஜெண்ட்டாகவே செயல்படுகிறோம். இருப்பினும், செக் செய்த பேகேஜைப் பொறுத்தவரை, முதல் அல்லது கடைசி விமான நிறுவனத்திற்கு எதிராக நீங்கள் கிளைமைச் சமர்ப்பிக்க முடியும்.

15.4.2 பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது அரசாங்க விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு நாங்கள் இணங்குவதால் அல்லது நீங்கள் இணங்கத் தவறுவதால், ஏற்படும் எந்தவித சேதத்திற்கும் நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.

15.4.3 பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகளில் வேறு விதமாக பிரத்தியேகமாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, நிரூபிக்கப்பட்ட இழப்புகளுக்கான இழப்பீடு பெறக்கூடிய சேதங்களுக்காக மட்டுமே உங்களுக்கு நாங்கள் நிறைவேற்ற கடமைப்பட்டிருப்போம்.

15.4.4 பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகள் மற்றும் பொறுப்பிற்கான விலக்கங்கள் அல்லது வரம்புகள் உட்பட, பயண அனுமதிக்கான ஒப்பந்தமானது, எங்களுக்குப் பொருந்தும் அதே அளவிற்கு எங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டுகள், வேலையாட்கள், பணியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் அனைவருக்கும் பொருந்தும். எங்களிடம் இருந்தும், அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டுகள், பணியாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பிற நபர்களிடம் இருந்தும் நீங்கள் பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகையானது, நாங்கள் வழங்க வேண்டிய எழுப்பீட்டுத் தொகைக்கு (ஏதேனும் இருந்தால்) மிகாமலே இருக்கும்.

15.4.5 பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகளில் எதுவும், சாசனம் அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, எங்களுக்கு உள்ள ஒரு விலக்கம் அல்லது வரம்பைத் தள்ளுபடி செய்வதாகக் கருதப்பட முடியாது.

15.4.6 பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகளில் எதுவும், சாசனம் அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ், பயணித்து ஏற்பட்ட மரணம், காயம் அல்லது உடல் பாதிப்புகளுக்காக இழப்பீட்டை வழங்க வேண்டிய அல்லது வழங்கிய அரசாங்க சமூகக் காப்பீட்டு நிறுவனம் அல்லது ஏதேனும் நபருக்கு எதிராக, எங்களுக்கு உள்ள பொறுப்பின் விலக்கம் அல்லது வரம்பை அல்லது பாதுகாப்பை தள்ளுபடி செய்வதாகக் கருதப்பட முடியாது


கட்டுரை 16 கிளைம்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான காலவரம்பு

16.1 கிளைம்களின் அறிவிப்பு

16.1.1 இல்லை என்று நீங்கள் நிரூபிக்காத வரை, பேகேஜ் செக்கை வைத்திருக்கும் நபர் எந்த புகார் இல்லாமல் டெலிவரி சமயத்தில் பேகேஜைப் பெற்றுக் கொள்வதே, பேகேஜ் நல்ல நிலையிலும் பயண அனுமதிக்கான ஒப்பந்தத்திற்கு இணங்கவும் ஒப்படைக்கப்பட்டது என்பதற்கான போதுமான ஆதாரமாகும்.

16.1.2 செக் செய்த பேகேஜுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக நீங்கள் ஒரு கிளைம் அல்லது நடவடிக்கையைத் தாக்கல் செய்ய விரும்பினால், சேதத்தை நீங்கள் கண்டறிந்த உடன் கூடிய விரைவில் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும், குறைந்தபட்சம் பேகேஜைப் பெற்ற ஏழு (7) நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். செக் செய்த பேங்கேஜ் தாமதமாக வழங்கப்பட்டது தொடர்பாக கிளைம் அல்லது நடவடிக்கையை நீங்கள் தாக்கல் செய்ய விரும்பினால், பேகேஜ் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய தேதியிலிருந்து இருபத்தியோரு (21) நாட்களுக்குள் எங்களுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். அத்தகைய அறிவிப்புகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும்.

16.2 நடவடிக்கைகளின் வரம்பு

சென்று சேர வேண்டிய இடத்திற்குச் சேர்ந்த தேதியில் இருந்து அல்லது விமானம் வந்து சேர வேண்டியதாக திட்டமிடப்பட்ட தேதியில் இருந்து, அல்லது பயணம் நின்ற தேதியில் இருந்து, இரண்டு வருடங்களுக்குள் நடவடிக்கை கொண்டுவரப்படாவிட்டால், சேதங்கள் தொடர்பான எந்த உரிமையும் இல்லாமல் போய்விடும். வரம்புக்கான கால அளவின் கணக்கீட்டு முறையானது, வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்றத்தின் சட்டத்தால் தீர்மானிக்கப்படும்.


கட்டுரை 17 பிற நிபந்தனைகள்

17.1 உங்களையும் உங்கள் பேகேஜையும் விமானத்தில் அழைத்துச் செல்லும் சேவையானது, எங்களுக்குப் பொருந்தக்கூடிய அல்லது நாங்கள் பின்பற்றக்கூடிய பிற குறிப்பிட்ட ஒழுங்குமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கவும் வழங்கப்படுகிறது. இந்த ஒழுங்குமுறைகளும் நிபந்தனைகளும் அவ்வப்போது மாறக்கூடியவை, முக்கியமானவை. அவை மற்ற விஷயங்களுடன் கூடுதலாக இவற்றைப் பற்றிக் கூறுகின்றன:

17.1.1 பெரியவர்கள் யாரும் உடன் இல்லாமல் பயணிக்கும் சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலம் இல்லாத பயணிகள்,

17.1.2 எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பொருட்களின் உபயோகத்திற்கான கட்டுப்பாடுகள்

17.1.3 விமானத்திற்குள் இருக்கும் போது ஆல்கஹால் பானங்களைப் பருகுதல்;

17.1.4 போர்டிங் மறுக்கப்பட்டதற்கான இழப்பீட்டுக் கொள்கை இந்த விவகாரங்கள் தொடர்பான ஒழுங்குமுறைகள் கோரிக்கையின் பேரில் எங்களிடமிருந்து கிடைக்கும்; மேலும்

17.1.5 திரவங்கள், வளிமக் கரைசல்கள், ஜெல்கள் ஆகியவற்றை விமானத்தில் கொண்டு செல்வதற்கு சில விமான நிலையங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள்.


கட்டுரை 18 புரிதல் விளக்கம்

18.1 பயண அனுமதிக்கான இந்த நிபந்தனைகளின் ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும், வசதிக்காக மட்டுமே. அதன் கீழ் உள்ள உரையின் புரிதல் விளக்கத்திற்கு அதைப் பயன்படுத்தக் கூடாது.

18.2 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒதுக்கப்பட்ட குறியீடு - UL


கட்டுரை 19 கனடிய பயணிகளுக்கான விமானப் பயணிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் (APPR)

கனடிய பயணிகள்

கனடிய பயணிகளுக்கான விமானப் பயணிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் (APPR)

கனடிய பயணிகளுக்கான விமானப் பயணிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் (APPR), கனடாவிற்கும் கனடாவில் இருந்தும் பயணிக்கும் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்புகளை வழங்கக்கூடும். “இணைப்பு விமானங்கள் உட்பட, கனடாவிற்கு வரும், கனடாவில் இருந்து செல்லும்” விமானங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும். ஒரு பயனியின் பயணத்திட்டத்தில் கனடாவிற்கு வெளியே உள்ள இரண்டு இடங்களுக்கான பயணம் இருந்து, கனடாவிற்கு வருகின்ற அல்லது கனடாவில் இருந்து செல்கின்ற ஒரு விமானம் அவருக்கு இணைப்பு விமானமாக இருந்தால், APPR அவருக்கு பொருந்துமா என்பது கட்டணத்தின் வகை மற்றும் விமானச் சேவை வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்ததாக இருக்கும்.

APPR-க்கு இரண்டு நிலைகளில் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது - தொடக்கக் கடமைகள் ஜூலை 15, 2019 அன்று அமலுக்கு வந்தது (முக்கியமான தகவல்களின் தகவல் தொடர்பு, விமான நுழைவு மறுக்கப்படுதல், டார்மாக் தாமதங்கள், பேகேஜ், இசைக்கருவிகளின் போக்குவரத்து ஆகியவை தொடர்பாக), எஞ்சிய கடமைகள் டிசம்பர் 15, 2019 அன்று அமலுக்கு வந்தது.


இயல்பான அறிவிப்பு

நீங்கள் விமானத்தில் ஏற மறுக்கப்பட்டால் அல்லது உங்கள் விமானம் ரத்துசெய்யப்பட்டால் அல்லது குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் தாமதிக்கப்பட்டால் அல்லது உங்கள் பேகேஜ் தொலைந்து போனால் அல்லது சேதமடைந்தால் விமானப் பயணி பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின் கீழ் குறிப்பிட்ட சில நடத்தைத் தரநிலைகள் மற்றும் இழப்பீட்டிற்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். உங்களுக்குள்ள பயணிகள் உரிமைகள் பற்றி மேலும் தகவலுக்கு உங்கள் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது கனடியப் போக்குவரத்து ஏஜென்சியின் வலைதளத்தைப் பாருங்கள்.

Si l'embarquement vous est refusé ou si vos bagages sont perdus ou endommagés, vous pourriez avoir droit au titre du Règlement sur la protection des passagers aériens a certains avantages au titre des normes de traitement applicables et a une indemnité. Pour de plus amples renseignements sur vos droits, veuillez communiquer avec votre transporteur aérien ou visiter le site Web de l'Office des transports du Canada.


தொடர்புத் தகவல்

உங்கள் உரிமைகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது கனடா விமானப் பயணிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் தொடர்பாக ஏதேனும் புகாரளிக்க விரும்பினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் புகாருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கிய தீர்வு குறித்து உங்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால், கனடியப் போக்குவரத்து ஏஜென்சியிடமும் நீங்கள் நேரடியாகப் புகாரளிக்கலாம்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயண அனுமதிக்கான நிபந்தனைகள்

https://www.srilankan.com/en_uk/corporate/conditions-of-carriage-for-passengers-and-baggage

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள் – customer@srilankan.com

விமானப் பயணிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் (SOR 2019/50) கீழே உள்ள இணைப்பில் கிடைக்கும்.

http://www.gazette.gc.ca/rp-pr/p2/2019/2019-05-29/html/sor-dors150-eng.html

கனடியப் போக்குவரத்து ஏஜென்சி - https://www.canada.ca/en/transportation-agency.html


விமான நுழைவு மறுக்கப்படுதல்

சில சமயங்களில் பயணிகள் விமானத்தில் இருக்கை முன்பதிவு செய்துவிட்டு, எங்களிடம் தெரிவிக்காமலே பயணம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து விடுவதுண்டு. விமான முன்பதிவுகளை நாங்கள் கவனமாகக் கண்காணிக்கிறோம், பயணம் செய்ய வராமல் விட்டுவிடுகின்ற பயணிகளைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு விமானத்திற்கும் விற்பனை செய்யக் கிடைக்கின்ற டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை நாங்கள் தீர்மானிக்கிறோம். இதை சில சமயம் நாங்கள் சரியாகச் செய்யாமல் போகின்ற சில சம்பவங்களும் நடப்பது, இப்படி ஆகும் சமயங்களில் அதீதமாக முன்பதிவு செய்யப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதீதமாக முன்பதிவு செய்யப்படும் சூழ்நிலைகளில், கட்டாயமாக விமானத்தில் நுழைய பயணிகள் மறுக்கப்படும் முன்பு, நாங்கள் தானாக முன்வந்து கொடுக்கும் இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டு, தங்கள் இருக்கையை விட்டுக் கொடுக்க விரும்புகிறார்களா என்று பயணிகள் அனைவரிடமும் நாங்கள் கேட்போம். இப்படி முன்வந்து விட்டுக் கொடுக்கும் பயணிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நாங்கள் எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்துவோம். பின்வரும் பயணிகளை நாங்கள் விமானத்தில் நுழைய மறுப்பது அரிது:

  • பெரியவர்கள் உடன் பயணிக்காத சிறுவர்கள்
  • உடல் குறைபாடு உள்ள பயணிகள் மற்றும் அவர்களை கவனித்துக் கொள்ளும் நபர்கள்
  • ஒன்றாகப் பயணிக்கும் குடும்பத்தினர்
  • அதே டிக்கெட்டில் முன்னர் விமானத்தில் நுழைய மறுக்கப்பட்ட பயணி

பாதுகாப்பு, காவல் அல்லது உடல் நலக் காரணங்கள் தவிர்த்து, ஏற்கனவே விமானத்தில் ஏறிய பயணியை நாங்கள் வெளியேற்றுவதும் இல்லை.

உங்களுக்காக மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்து கொடுப்பது, உங்களுக்குத் தகவல் தெரிவிப்பது, தேவையான வசதிகள் வழங்குவது, டிக்கெட்டிற்கான பணத்தைத் திருப்பியளிப்பது, உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக இளம் பீட்டை வழங்குவது போன்றவை கூடுதல் உரிமைகளில் அடங்கும்.

விமானத்தில் நுழைய மறுக்கப்படும் சூழல்களில், பின்வரும் தொகைகளை உங்களுக்கு இழப்பீடாக நாங்கள் வழங்க வேண்டியிருக்கலாம்:

  • $900 CAD: பயணியின் அசல் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள வருகை நேரத்தை விட ஆறு மணி நேரத்திற்கும் குறைவான தாமதத்தில், சென்று சேர வேண்டிய இடத்தை வந்தடைந்தால்;
  • $1,800 CAD: பயணியின் அசல் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள வருகை நேரத்தை விட ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான, ஆனால் ஒன்பது மணி நேரத்திற்கு குறைவான தாமதத்தில், சென்று சேர வேண்டிய இடத்தை வந்தடைந்தால்;
  • $2,400 CAD, பயணியின் அசல் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள வருகை நேரத்தை விட ஒன்பது மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான தாமதத்தில், சென்று சேர வேண்டிய இடத்தை வந்தடைந்தால்;

தாமதங்கள் மற்றும் விமானம் ரத்துசெய்யப்படுதல்

விமானம் தாமதமானால் அல்லது ரத்துசெய்யப்பட்டால், இவற்றை உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம்:

  1. தாமதம்/ ரத்துசெய்யப்பட்டதற்கான காரணம்;
  2. உங்களுக்கு நாங்கள் வழங்கப் போகின்ற கவனிப்பு மற்றும் இழப்பீடு; மற்றும்
  3. CTA இடம் உங்களுக்குள்ள தெரிவுகள் உட்பட, எங்களுக்கு எதிராக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவிகள்.

கூடிய விரைவில் புதிய விமானத்தின் நிலை பற்றிய தகவலை உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம். தாமதம் ஏற்படும் சூழல்களில், புதிய புறப்பாடு நேரம் நிர்ணயிக்கப்படும் வரை அல்லது புதிய பயண ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை நிலை பற்றிய தகவலையும் உங்களுக்கு வழங்குவோம்.

உங்களுக்கான கவனிப்பு மற்றும் இழப்பீடு தொடர்பான எங்களுக்குள்ள பொறுப்பானது, விமானச் சேவை தடை பட்டதற்கான காரணத்தைப் பொறுத்தது.

  • தாமதம் / விமானம் ரத்துசெய்யப்படுவதற்கான காரணம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றாக இருந்து, பாதுகாப்பு தொடர்பானதாக இல்லாமல் இருந்தால், உங்களுக்கான கவனிப்பு மற்றும் இழப்பீட்டை நாங்கள் வழங்கி, உங்கள் பயணத்திட்டத்தை நீங்கள் நிறைவு செய்வதற்காக மீண்டும் உங்களுக்காக முன்பதிவு செய்து தருவோம் அல்லது உங்களுக்குப் பணத்தைத் திருப்பியளிப்போம்.
  • தாமதம் / விமானம் ரத்துசெய்யப்படுவதற்கான காரணம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றாக இருந்து, பாதுகாப்பு தொடர்பானதாக இருந்தால், உங்களுக்கான கவனிப்பு மற்றும் இழப்பீட்டை நாங்கள் வழங்கி, உங்கள் பயணத்திட்டத்தை நீங்கள் நிறைவு செய்வதற்காக மீண்டும் உங்களுக்காக முன்பதிவு செய்து தருவோம் அல்லது உங்களுக்குப் பணத்தைத் திருப்பியளிப்போம்.
  • தாமதம் / விமானம் ரத்துசெய்யப்படுவதற்கான காரணம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக இருந்து, உங்கள் பயணத்திட்டத்தை நீங்கள் நிறைவு செய்வதற்காக மீண்டும் உங்களுக்காக முன்பதிவு செய்து தருவது மட்டுமே எங்கள் கடமையாக இருக்கும்.

எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகளில் அடங்குபவை:

  • விமானத்தின் இயக்கத்தை சாத்தியமற்றதாக்கும் வானிலை அல்லது இயற்கைப் பேரிடர்கள்;
  • விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்கள்;
  • விமான நிலைய செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள்;
  • மருத்துவ அவசர சூழ்நிலைகள்;
  • பாதுகாப்பு அச்சுறுத்தல்;
  • விலங்குகள் மோதுதல்;
  • போர் அல்லது அரசியல் நிலையற்ற தன்மை;
  • சட்டவிரோதமான செயல்கள் அல்லது நாசங்கள்;
  • விமானிகளுக்கு வரும் அறிவிப்பு (கனடிய விமான ஒழுங்குமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி)
  • விமான நிறுவனத்திற்குள் அல்லது விமான நிலையம் அல்லது விமான வழி செலுத்தல் சேவை வழங்குநர் போன்ற அத்தியாவசியமான சேவை வழங்குநர் நிறுவனங்களுக்குள் ஏற்படும் தொழிலாளர் பிரச்சனைகள்;
  • விமானத் தயாரிப்பு நிறுவனம் அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியால் கண்டறியப்பட்ட, பயணிகளின் பாதுகாப்பைக் குறைக்கின்ற வகையில் விமானத்தில் உள்ள ஒரு உற்பத்திக் குறைபாடு; அல்லது
  • போலீஸ், செக்யூரிட்டி அல்லது சுங்கத்துறை அதிகாரியின் கோரிக்கை.

நாங்கள் வழங்கும் கவனிப்பு:

விமானச் சேவையில் ஏற்படும் தடங்கலானது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததாக இருந்தால் தவிர, விமானச் சேவையில் ஏற்பட்ட தடை பற்றி திட்டமிடப்பட்ட புறப்பாடு நேரத்திற்கு குறைந்தபட்சம் 12 நேரம் முன்னதாக உங்களுக்கு நாங்கள் அது பற்றித் தெரிவிக்காவிட்டால், விமானம் ரத்துசெய்யப்பட்டால் அல்லது இரண்டு மணி நேரம் தாமதமானால் உங்களுக்கு நாங்கள் இவற்றை வழங்குவோம்:

  • தகுந்த அளவுகளில் உணவு, பானம்; மற்றும்
  • தகவல்தொடர்புக்கான அணுகல் (எ.கா. இலவச Wi-Fi).

புதிய விமானத்திற்காக இரவு முழுதும் நீங்கள் காத்திருக்க வேண்டி இருந்தால், கட்டணம் ஏதும் இல்லாமல் உங்களுக்கு நாங்கள் ஹோட்டல் அல்லது அதற்கு இணையான தங்கும் வசதியை வழங்குவோம்; அது மட்டும் இன்றி அங்கு செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கும் இலவசப் போக்குவரத்து வசதியையும் வழங்குவோம்.

நாங்கள் வழங்கக்கூடிய இழப்பீடு:

விமானச் சேவைகள் ஏற்படும் தடங்கல் குறித்து முன்கூட்டியே 14 நாட்களுக்குள் உங்களுக்கு நாங்கள் தெரிவித்திருந்தால், விமானச் சேவையில் ஏற்பட்ட தடங்கலுக்கான காரணம் விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் இருக்கும் ஒன்றாக இருந்தால், பாதுகாப்பு தொடர்பானதாக இல்லாமல் இருந்தால், விமானத் தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்கள் காரணமாக உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக நாங்கள் இழப்பீட்டை வழங்குவோம். இந்த இழப்பீடானது, தாமதமான நேர அளவின் அடிப்படையில் இருக்கும், இது உங்கள் டிக்கெட்டில் உள்ள சென்று சேர வேண்டிய இடத்திற்கு விமானம் வந்து சேர்ந்த நேரத்தை வைத்துத் தீர்மானிக்கப்படும்.

தாமதத்தின் நேர அளவு:

  • 3 முதல் 6 மணி நேரம் வரை இருந்தால்: உங்களுக்கு CAD $ 400 இழப்பீடு வழங்கப்படும்;
  • 6 முதல் 9 மணி நேரம் வரை இருந்தால்: உங்களுக்கு CAD $ 700 இழப்பீடு வழங்கப்படும்;
  • 9 மணி நேரத்திற்கு மேல் இருந்தால்: உங்களுக்கு CAD $ 1000 இழப்பீடு வழங்கப்படும்;

வேறொரு நாட்டில் உள்ள பயணி பாதுகாப்பு விதிமுறைகளின், இதே நிகழ்வுக்காக நீங்கள் ஏற்கனவே இழப்பீட்டைப் பெற்றிருந்தால், கனடிய ஒழுங்குமுறைகளின் கீழ் நீங்கள் மீண்டும் இழப்பீட்டைப் பெற முடியாது. எங்களிடம் இழப்பீட்டுக்கான கிளைமைத் தாக்கல் செய்ய உங்களுக்கு ஒரு வருட அவகாசம் உள்ளது, மேலும் அதை எழுத்துப்பூர்வமாகவே தாக்கல் செய்ய வேண்டும். பணம் செலுத்தப்படுவது பற்றிய அறிவுறுத்தல்களுடன் 30 நாட்களுக்குள் உங்களுக்கு நாங்கள் பதிலளிப்போம் அல்லது ஏன் இழப்பீடு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான காரணத்தைக் கூறுவோம்.

ரொக்கமாக உங்களுக்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கப்படும் என்பதையும், வேறு எந்தெந்த வடிவங்களில் எங்களால் இழப்பீட்டை வழங்க முடியும் என்பது பற்றியும் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக நாங்கள் தெரிவிப்போம். அவற்றில் நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை இருக்கும்.

மீண்டும் விமானத்தை முன்பதிவு செய்து கொடுப்பதால் உங்கள் பயணத் தேவைகள் நிறைவேறாது அல்லது பயணம் செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை என்பதால் பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தேர்வு செய்தால், பணம் திருப்பியளிப்பதுடன் கூடுதலாக இழப்பீடாக உங்களுக்கு CAD $ 400 வழங்கப்படும்.


14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான இருக்கைகள்

14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அருகில் இருக்கும் வகையில் இருக்கை வசதிகளை ஏற்பாடு செய்வோம், இதை செக்-இன் சமயத்தில் அல்லது போர்டிங் கேட்டில், கூடுதல் கட்டணம் இன்றி செய்து கொடுப்போம். 4 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய குழந்தையாக இருந்தால், பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்குப் பக்கத்திலேயே இருக்கும் இருக்கையை வழங்குவோம், 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்குப் பக்கத்திலேயே இருக்கும் இருக்கையை எங்களால் வழங்க முடியாவிட்டால், அதே வரிசையில் ஒரு இருக்கைக்கு மேல் தள்ளி இல்லாத இருக்கையை வழங்குவோம். அருகாமையில் இருக்கைகள் எதுவும் கிடைக்காவிட்டால், தானாக முன்வந்து யாராவது இருக்கை மாற்றிக் கொள்ள விரும்புகிறார்களா என்று கேட்போம்.


இசைக்கருவிகள்

கேபின் பேகேஜாக அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் பொருந்துகின்ற இசைக்கருவி (சிறிய புல்லாங்குழல்கள் அல்லது வயலின்கள் போன்றவை) உங்கள் கேபின் பேகேஜ் வரம்பின் ஒரு பகுதியாக கட்டணம் இன்றி கொண்டு செல்லப்படலாம்.

இருக்கைக்கு மேல் உள்ள பை வைக்கும் இடத்தில் வைக்க முடியாத அளவு பெரிதாக இருக்கும் அல்லது இயல்பான கேபின் பேகேஜ் அளவுகள் அல்லது எடையை விட அதிகமாக உள்ள (பேஸ் அல்லது செல்லோ போன்ற) இசைக்கருவிகளைக் கொண்டு செல்ல, குளோபல் காண்டாக்ட் சென்டர் மூலம் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்து கொள்வதன் மூலம், அதற்கென்று நீங்கள் கூடுதலாக ஒரு இருக்கையை வாங்கிக் கொள்ளலாம்.

மாற்றாக, செக் செய்த பேகேஜ் வரம்பின் ஒரு பகுதியாக உங்கள் இசைக் கருவியை நீங்கள் செக்-இன் செய்து கொண்டு செல்லலாம் அல்லது செக் செய்த பேகேஜ் வரம்பை நீங்கள் மீறி விட்டால், கூடுதல் பேகேஜை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.


பேகேஜ் வந்து சேர்வதில் தாமதம் அல்லது தொலைந்து போதல்

பேகேஜ் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டால், பயணி விமானத்தில் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் அல்லது வந்து சேர்ந்து 48 மணி நேரத்திற்குள் எழுத்துப்பூர்வமாகப் புகாரளிக்க வேண்டும். பேகேஜ் வருவதில் தாமதம் ஏற்பட்ட பயணிகள், உடனடியாகத் தேவைப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக ஏற்பட்ட செலவுகளுக்காக, இடைக்கால நிவாரணம் (IR) கிளைம் செய்யத் தகுதி பெறுவார்கள். (IR பேகேஜ் கிளைம் படிவத்தை cus.bge@srilankan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்)

பேகேஜ் தொலைந்து போய் இருக்க சாத்தியமிருப்பதாக நம்பினால், பேகேஜ் வந்து சேர்ந்திருக்க வேண்டிய தேதியில் இருந்து 21 நாட்களுக்குள் கிளைம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பயனியின் பை தொலைந்து போகும்பட்சத்தில் 21 நாட்களுக்குப் பிறகு அது தொலைந்து போனதாகக் கருதப்படும். பேகேஜ் வந்து சேர்வதில் தாமதம் அல்லது தொலைந்து போவதற்காக இழப்பீட்டை கிளைம் செய்வதற்கு, பயணிகள் தங்களுடைய கிளைமுடன் சேர்த்து இவற்றையும் cus.bge@srilankan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

  • போர்டிங் கார்டு
  • ரசீதுகள்
  • வங்கிக் கணக்கு விவரங்கள்
  • பாஸ்போர்ட்
  • பை சீட்டு
  • கையொப்பம, விடுவிப்பு மற்றும் இழப்பீட்டில் இருந்து காப்பதற்கான படிவம்

உங்கள் பேகேஜ் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டால், அது தொலைந்து போயிருந்தால் அல்லது சேதமடைந்தால், நீங்கள் ஏதேனும் கூடுதல் பேகேஜ் கட்டணம் செலுத்தி இருந்தால் அதை நாங்கள் திருப்பி வழங்கி விடுவோம்.

கனடாவிற்கு வரும் அல்லது கனடாவில் இருந்து செல்லும் விமானங்களைப் பொறுத்தவரை, பெரும்பாலானவற்றுக்கு மாண்ட்ரீல் சாசனம் பொருந்தக்கூடும், ஆகவே பேகேஜ் வருவதில் ஏற்படும் தாமதம் அல்லது இழப்புக்கான பொறுப்பில் உள்ள வரம்புகள் பற்றி அதிலேயே பார்க்கலாம்.


டார்மாக் தாமதங்கள்

விமானம் மேல எழும்புவதற்காக அல்லது விமானம் தரை இறங்கிய பிறகு விமானத்தின் கதவுகள் மூடப்பட்ட பிறகு ஏற்படும் தாமத டார்மாக் தாமதம் எனப்படுகிறது.

டார்மாக் தாமதம் ஏற்படும் போது, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்வரும் வழக்கமான நிவாரணத்தை வழங்கும்:

  • நன்றாக வேலை செய்கின்ற, கழிவறை வசதி,
  • விமானத்தில் தகுந்த காற்றோட்ட வசதி மற்றும் குளிர்விப்பு அல்லது சூடாக்கும் வசதி
  • விமானத்திற்குள் இருந்து வெளியே உள்ளவர்களை தொடர்புகொள்ள முடிந்தால், அதற்கான உதவியை வழங்கும்
  • தாமதத்தின் நேர அளவு, தாமதம் ஏற்பட்ட நேரம், ஏர்போர்ட் அமைந்துள்ள இடம் ஆகியவற்றைக் கருத்தில், கருத்தில் கொண்டு நியாயமான அளவுகளில் உணவு மற்றும் பானம்.

டார்மாக் தாமதம் ஏற்பட்டால், விமானம் புறப்பட நேரம் குறைவாக இல்லாதிருந்தால், அடுத்த 45 நிமிடங்களில், அதாவது அடுத்த 45 நிமிடங்களில், விமானம் புறப்பட்டு விடும், மற்றும் மேலே குறிப்பிட்ட தர நிலையான சேவையை எங்களால் தொடர்ந்து வழங்க முடியும் என்றால் தவிர, விமானத்தை மேலெழுப்புவதற்காக விமானத்தின் கதவுகள் மூடப்பட்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு விமானத்திலிருந்து வெளியேற உங்களுக்கு உரிமை உள்ளது.

பாதுகாப்பு அல்லது காவல் தொடர்பான அல்லது விமானப் போக்குவரத்து அல்லது சுங்கத்துறை கட்டுப்பாட்டு மையம் தொடர்பான காரணங்களுக்காக, விமானத்தில் இருந்து வெளியேறுவது முடியாது என்றால், விமானத்தில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்க வேண்டும் என்கிற பொறுப்பில் இருந்து எங்களுக்கு விலக்கு கிடைக்கிறது.

முடிந்தால், விமானத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை உடல் குறைபாடு உள்ள பயணிகள், உதவிக்கு வந்த நபர்கள் ஆகியோருக்கே முதலில் நாங்கள் வழங்குவோம்.

விமானம் மேல் எழும்புவதற்கு முன் அல்லது தரையிறங்கிய பின், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சூழ்நிலையில், உதவி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம்.


தகவல்களுக்கான அணுகல்

நீங்கள் கேட்டால், அறிவிப்புக் காட்சி அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றை அனுப்புவதற்கான மாற்று வழிமுறையை விமான நிலைய அதிகாரி வழங்குவார். கோரினால், இது பெரிய எழுத்து அளவில் வழங்கப்படலாம் அல்லது அறிவிப்பு அல்லது கடிதத்தின் நகலை உங்களுக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் இதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.


கட்டண விவரங்கள்

விமானப் பயணி பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின் கீழ் ஒரு விமான நிறுவனத்திற்கு உள்ள கடமைகள் கட்டண விவரங்களின் ஒரு அங்கமாக திகழ்கின்றன, மேலும் கட்டண விவரங்களில் விவரிக்கப்பட்ட ஏதேனும் இணக்கமற்ற அல்லது சீரற்ற விதிமுறை மற்றும் நிபந்தனையை மீறி, அந்த சீரற்ற அல்லது இணக்கமற்ற தன்மையின் அளவில், நடைமுறைப்படுத்தப்படும்.

ஆனால், APPR-இல் உள்ள விமான நிறுவனத்திற்கான கடமைகளைவிட, பயணிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கின்ற, பயண அனுமதிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்துவதில் இருந்து விமான நிறுவனத்தை இது விடுவிக்காது.

பயணிகள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து தொடர்பான தனது பொறுப்பை, குறிப்பாக பின்வரும் சூழ்நிலைகளில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எப்படி வரம்பிடுகிறது என்பது பற்றிய தகவல் இந்தக் கட்டண விவரங்களில் உள்ளது.

-விமானப் போக்குவரத்தின் போது ஏற்படும் விபத்துகளினால் தனிநபருக்கு ஏற்படும் காயம் அல்லது மரணம்

-பயணிகள் தாமதம் மற்றும்

-மேரேஜ் தொலைந்து போவது, சேதமடைவது அல்லது தாமதமாவது போன்ற சூழ்நிலைகளில் சேதங்களுக்குக் கடன்பட வேண்டிய அதிகபட்ச அளவுகளை விவரிக்கிறது.


சர்வதேசப் பயணத்திற்கு, பொறுப்பின் வரம்புகள் சர்வதேச விமானப் பயணத்திற்கான குறிப்பிட்ட விதிகளின் ஒருங்கிணைப்புக்கான சாசனத்திற்கு (மாண்ட்ரீல் சாசனம் என்றும் அழைக்கப்படும்) உட்பட்டதாகும் அல்லது மாண்ட்ரீல் சாசனத்தை அங்கீகரிக்காத நாடுகளில் வார்சா சாசனத்திற்கு உட்பட்டதாகும். ஸ்ரீலங்கா வார்சா, மாண்ட்ரீல் ஆகிய இரண்டு சாசனங்களையும் அங்கீகரித்துள்ளது, 1992ஆம் ஆண்டின் எண் 55 விமான வழிசெலுத்தல் சட்டத்தின் மூலம் இவை இரண்டும் ஸ்ரீலங்காவில் சட்டமாக்கப்பட்டன.


மாண்ட்ரீல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள, பொறுப்புகளுக்கான வரம்புகள் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப திருத்தப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்காக, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இன்டர்நேஷனல் சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷனால் மறுஆய்வு செய்யப்படுகின்றன (கடைசியாக, கீழே உள்ள பின்னிணைப்பு A-இன் படி, இதுபோன்ற மறுஆய்வானது டிசம்பர் 2019-இல் நடந்தது. ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸ் (SDR) என்பது, பண நிதி அமைப்பால் உருவாக்கப்பட்ட, சர்வதேச பண வடிவமாகும், மேலும் பல்வேறு மாற்றக்கூடிய நாணயங்களின் எடையிடப்பட்ட சராசரி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 3 டிசம்பர், 2019 அன்று, 1 SDR என்பது 1.82 .கனடிய டாலர்களுக்கு சமமாக இருந்தது


மாண்ட்ரீல் மற்றும் வார்சா சாசனங்கள் எங்கே உள்ளன? மாண்ட்ரீல் சாசனம் 2003 என்பது 18 ஜனவரி 2019 அன்று ஸ்ரீலங்காவில் சட்டப்பூர்வமாக அமலுக்கு வந்த சர்வதேச உடன்படிக்கையாகும். இது 4 பிப்ரவரி 1948 அன்று ஸ்ரீலங்காவில் சட்டப்பூர்வமாக அமலுக்கு வந்த வார்சா சாசனம் 1929-இன் விதிகளை நவீனமாக்குகிறது, விமானப் போக்குவரத்து சட்டம் 2018 (மாண்ட்ரீல் சாசனத்தை உள்ளடக்கி) 28 செப்டம்பர் 2018 அன்று அமலுக்கு வந்தது.


ஸ்ரீலங்கா போன்ற சில நாடுகள், மாண்ட்ரீல் சாசனம், வார்சா சாசனம் இரண்டையும் ஏற்றுக்கொண்டன, மேலும் சில நாடுகள் இவற்றில் ஒன்றை மட்டும் ஏற்றுக் கொண்டன, மற்ற நாடுகள் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு நாடு மாண்ட்ரீல் சாசனத்தை அங்கீகரிக்காவிட்டால், அப்போதும் வார்சா சாசனம் பொருந்தும். மாண்ட்ரீல் அல்லது வார்சா சாசனங்கள் இரண்டில் ஒன்றை ஒரு நாடு அங்கீகரிக்காவிட்டால், வேறு சர்வதேச உடன்படிக்கை எதுவும் பொருந்தாது, விமான நிறுவனம் தனது பொறுப்புக்கான வரம்புகளை தானே அமைத்துக் கொள்ளலாம்.


மாண்ட்ரீல் சாசனமானது, பயணிகள், பேகேஜ், சரக்குகள் ஆகியவற்றை சர்வதேச விமானப் பயணத்தின் மூலம் கொண்டு செல்வதற்கு, விமான நிறுவனங்களுக்கு உள்ள பொறுப்பிற்கான வரம்புகளைப் பரிந்துரைக்கிறது, அவை பின்வருமாறு:


  • சரக்குகளை விமானத்தில் கொண்டு செல்வது தொடர்பாக அழிவு, இழப்பு, சேதம் அல்லது தாமதம் ஏற்பட்டால் – வரம்பு = கிலோ ஒன்றுக்கு 22 SDR (கட்டுரை 22, பத்தி 3)
  • பேகேஜ்களை விமானத்தில் கொண்டு செல்வது தொடர்பாக அழிவு, இழப்பு, சேதம் அல்லது தாமதம் ஏற்பட்டால் – வரம்பு = பயணி ஒருவருக்கு 1288 SDR (கட்டுரை 22, பத்தி 2)
  • நபர்களின் விமானப் பயணத்தில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் நேர்ந்த சேதம் தொடர்பாக – வரம்பு = பயணி ஒருவருக்கு 5,346 SDR (கட்டுரை 22, பத்தி 1)
  • உடல் காயம் அல்லது மரணம் ஏற்படும் சூழ்நிலையில், ஒரு விமான நிறுவனத்தின் பொறுப்பானது விமானத்திற்குள் அல்லது விமானத்தில் ஏறும்போது அல்லது விமானத்திலிருந்து வெளியே செல்லும்போது ஏற்பட்ட விபத்தினால் நேர்ந்த சேதங்களுக்கு மட்டுமே இருக்கும். ஒரு விமான நிறுவனம் 128821 SDR-க்கு மிகாமல் சேதங்களுக்குப் பொறுப்பேற்கும், அதன் பொறுப்பை விலக்கவோ குறைக்கவோ முடியாது. விமான நிறுவனம் பின்வருபவற்றை நிரூபித்தால் சேதங்களுக்கு அதன் மீதான பொறுப்பு 128821 SDR-க்கு மிகாமல் இருக்கும்: a) விமான நிறுவனம் அல்லது அதன் வேலையாட்கள் அல்லது ஏஜெண்ட்டுகளின் கவனக்குறைவு அல்லது பிற தவறான செயல் அல்லது செயல்களை செய்யத் தவறியதன் காரணமாக அத்தகைய சேதம் ஏற்படவில்லை; அல்லது b) அத்தகைய சேதமானது ஒரு மூன்றாம் தரப்பின் கவனக்குறைவு அல்லது பிற தவறான செயல் அல்லது செயல்களை செய்யத் தவறியதன் காரணமாகவே ஏற்பட்டது.

பின்னிணைப்பு A

நிகழ்வு டிச. 30, 2009 நிலவரப்படி தற்போதுள்ள வரம்பு டிச. 28, 2019 நிலவரப்படி புதிய வரம்பு
சரக்குப் போக்குவரத்து தொடர்பாக அழிவு, இழப்பு, சேதம் அல்லது தாமதம் ஏதேனும் ஏற்பட்டால் (கட்டுரை 22, பத்தி 3) கிலோ ஒன்றுக்கு 19 ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸ் (SDRகள்) கிலோ ஒன்றுக்கு 22 SDRகள்
பேகேஜ் தொடர்பாக அழிவு, இழப்பு, சேதம் அல்லது தாமதம் ஏதேனும் ஏற்பட்டால் (கட்டுரை 22, பத்தி 2) ஒவ்வொரு பயணிக்கும் 1131 SDRகள் ஒவ்வொரு பயணிக்கும் 1288 SDRகள்
நபர்களின் போக்குவரத்தில் ஏற்படும் தாமதத்தின் காரணமாக நேர்ந்த சேதம் தொடர்பாக (கட்டுரை 22, பத்தி 1) ஒவ்வொரு பயணிக்கும் 4694 SDRகள் ஒவ்வொரு பயணிக்கும் 5-346 SDRகள்
பயணியின் மரணம் அல்லது உடல் காயத்தினால் ஏற்பட்ட சேதத்திற்கு (முதல் டீயருக்கு கட்டுரை 21, பத்தி 1) ஒவ்வொரு பயணிக்கும் 113100 SDRகள் ஒவ்வொரு பயணிக்கும் 128821 SDRகள்


Close

flysmiles


More about FlySmiles