பிஸ்னஸ் வகுப்பில் பயணிப்பதாக கனவு காண்கின்றீர்களா?


பிஸ்னஸ் வகுப்பில் பயணிப்பதாக கனவு காண்கின்றீர்களா?

பயன்பாட்டிலுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள

வரைவிலக்கணங்கள்

“ஸ்ரீலங்கன் விமானசேவை” என்பது ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனம், அதன் அனுமதி வழங்கப்பட்ட மற்றும் வழித்தோன்றல்களைக் குறிக்கும்.

“பயணி”, “நீங்கள்” அல்லது “ உங்களுடைய” என்பன ஸ்ரீலங்கன் விமானசேவையினால் செயற்படுத்தப்படும் ஸ்ரீலங்கன் விமானசேவை விமானங்களுக்காக பயணச்சீட்டினைக் கொள்வனவு செய்த தனிநபரைக் குறிக்கும்.

“தரமுயர்த்தல்” என்பது எக்கனமி வகுப்பிற்குரிய பயணச்சீட்டை பிஸ்னஸ் வகுப்புக்குரியதாக்குவதற்கு வகுப்பில் செய்யப்படும் மாற்றத்தைக் குறிக்கும்.

“தரமுயர்த்தல் சலுகை” என்பது எக்கனமி வகுப்பிற்குரிய பயணச்சீட்டை பிஸ்னஸ் வகுப்புக்குரியதாக தரமுயர்த்துவதற்கென முன்வைக்கப்படும் விலைக் கட்டணத்தைக் குறிக்கும்.

 1. ஸ்ரீலங்கன் விமானசேவைக்குரிய விமானத்தில் எக்கனமி வகுப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்ட பயணச் சீட்டை பிஸ்னஸ் வகுப்புக்குரியதாக தரமுயர்த்துவதற்கென சமர்ப்பிக்கும் வாய்ப்புக்கள் கீழ்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
 2. தரமுயர்த்தல் என்பது ஸ்ரீலங்கன் விமானசேவையினால் செயற்படுத்தப்படும் யு.எல் குறியீடு கொண்ட விமானங்களுக்களின் எக்கனமி வகுப்பிற்காக பயணியினால் ஸ்ரீலங்கன் விமானசேவையில் கொள்வனவு செய்யப்பட்ட பயணச் சீட்டை (இதன் பின்னர் “ பயணச் சீட்டு”) பிஸ்னஸ் வகுப்புக்குரியதாக மாற்றம் செய்வதற்காக கட்டணத்தில் செய்யப்படும் மாற்றம் ஆகும்.
 3. ஸ்ரீலங்கன் விமானசேவையில் தரமுயர்த்தலுக்கான வாய்ப்பினை பயணி முறையாக முன்வைக்க வேண்டுமாயின் , அவர்கள் முதலில் ஸ்ரீலங்கன் விமானசேவையில் எக்கனமி வகுப்பிற்கான பயணச் சீட்டினைக் கட்டாயமாக கொள்வனவு செய்தல் வேண்டும். (ஸ்ரீலங்கன் விமானசேவையின் பயணச் சீட்டு இலக்கம் 603xxxx என்று ஆரம்பமாகும், குறிப்பு : இம்முறைமை ஏனைய விமானசேவைகளின் விலைக்கோரல் / தரமுயர்த்தல் வாய்ப்பு என்பவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றபோதும் இவ்விலைக்கோரல்கள் செயன்முறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது. ப்ளைஸ்மைல்ஸின் மைல்ஸினைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகள் தரமுயர்த்தல் வாய்ப்பு / விலைக்கோரல் என்பவற்றுக்குப் பொருத்தமற்றவை )
 4. ஸ்ரீலங்கன் விமானசேவையில் முற்பதிவினை மேற்கொள்ளும்போது ஒரு தரமுயர்த்தல் வாய்ப்பினை நேரடியாக ஸ்ரீலங்கன் விமானசேவையிடமோ அல்லது வேறு ஏதேனும் வழிகளுக்கூடாக ஸ்ரீலங்கன் விமானசேவையிடம் முன்வைக்கும்போதோ தரமுயர்த்தல் வாய்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள நபர் அல்லது நபர்கள், இவ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கமையவே தரமுயர்த்தலுக்காக கருத்திற் கொள்ளப்படுவர்.
 5. பயணச் சீட்டைக் கொள்வனவு செய்ததன் பின்னர் தரமுயர்த்தலுக்கான கோரிக்கையினை முன்வைப்பதற்குரிய தெரிவினை பயணி கொண்டுள்ளார். கொள்வனவு செய்யப்பட்டுள்ள விமானம் குறிப்பிட்ட இடத்திற்காக தரமுயர்த்தலுக்கு தகுதி உடையதாக இருக்குமாயின் இ பயணிகள் தங்களது விமானம் புறப்படுவதற்கு 36 மணித்தியாலங்களுக்கு முன்பு வரை “தரமுயர்த்தல்” என்ற இணைப்பினை அழுத்துவதன் மூலம் தரமுயர்த்தலுக்கான விலைக்கட்டணமொன்றை சிபாரிசு செய்யலாம் . ஒவ்வொரு இடத்துக்காகவும் ஒரு தரமுயர்த்தல் வாய்பினை முன்வைத்தல் வேண்டும்.
 6. தரமுயர்த்தலுக்காக முன்வைக்கப்பட்டுள்ள விலைக் கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தும் முறை தொடர்பிலான தகவல்களைப் பூரணப்படுத்துமாறு பயணி கேட்டுக்கொள்ளப்படுவார். பயணியினால் தகவல்கள் பூரணப்படுத்தப்பட்டு தகவல்கள் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் பயணியின் தரமுயர்த்தல் வாய்ப்பு பதிவு செய்யப்படும்.
 7. பயணிகள் தாம் கொள்வனவு செய்துள்ள பயணச் சீட்டுடன் தொடர்புடைய ஒரு விமானத்துக்கு ஒரு தரமுயர்த்தல் வாய்ப்பினையே முன்வைக்க முடியும். இந்த வாய்ப்பினை முன்வைக்கும்போதும் கட்டணம் செலுத்தும்போதும் பயணி தரமுயர்த்தல் வாய்ப்பினை முன்வைக்கும்போது சிபாரிசு செய்யும் அதே கிரெடிட் அட்டையினைப் பயன்படுத்தல் வேண்டும்.
 8. உங்கள் தரமுயர்த்தல் சலுகையினை ஏற்றுக்கொள்வதா அல்லது இல்லையா என்பது குறித்து சுயமாக தீர்மானம் எடுக்கும் உரிமையினை ஸ்ரீலங்கன் விமானசேவை கொண்டுள்ள அதேநேரம் தரமுயர்த்தல் வாய்பினை முன்வைக்கும் வகுப்பில் ஆசனங்கள் கிடைக்குமா என்பதனை உறுதி செய்யாமல் தரமுயர்த்தலை முன்வைத்த பயணிகளுக்கு உத்தரவாதம் அளிக்காது.
 9. உங்கள் தரமுயர்த்தல் வாய்ப்பினை ஸ்ரீலங்கன் விமானசேவை ஏற்றுக்கொள்ளுமாயின் ஏற்பினையடுத்து உடனடியாகவே உங்களால் சிபாரிசு செய்யப்பட்ட கிரெடிட் அட்டையிலிருந்து அதற்கான முழுக் கட்டணமும் அறவிடப்படும். ஸ்ரீலங்கன் ஒவ்வொரு பயணிக்கும் தரமுயர்த்தலைக் குறிக்கும் வகையில் ஏற்கனவே செய்யப்பட்ட முற்பதிவினை உள்ளடக்கியதாக தனித்தனியாக புதிய பயணச்சீட்டுக்களை விநியோகிக்கும். அறவிடப்படும் முழுக் கட்டணமானது தரமுயர்த்தலுக்கான வரிகள் / கொடுப்பனவுகள் (இருப்பின்) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
 10. உங்கள் தரமுயர்த்தல் வாய்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டமையானது உங்களின் விமானம் புறப்படுவதற்கு 35 முதல் 24 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட நேரத்திற்குள் மின்னஞ்சலுக்கூடாக அறிவிக்கப்படும்.
 11. உங்கள் தவறு இல்லாத நிலையில் வேறு ஏதேனும் காரணத்துக்காக ஸ்ரீலங்கன் விமானசேவை உங்களை இன்னுமொரு விமானத்தில் செல்வதற்கு ஏற்பாடு செய்யுமாயின், உங்கள் அசல் முற்பதிவுக்கு அமைய நீங்கள் முன்னெடுத்த தரமுயர்த்தலானது புதிய விமானத்தின் / விமானங்களின் தரமுயர்த்தல் வகுப்பில் கிடைக்ககூடியதைப் பொறுத்து மாற்றம் செய்யப்படும்
 12. ஸ்ரீலங்கன் விமானசேவையினால் உங்கள் தரமுயர்த்தல் ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களால் சிபாரிசு செய்யப்பட்ட கிரெடிட் அட்டைகளிலிருந்து கட்டணம் அறவிடப்பட்டதன் பின்னர் கீழ்வரும் நிபந்தனைகளைத் தவிர எச்சந்தர்ப்பத்திலும் பணம் திரும்ப வழங்கப்படவோ அல்லது பரிமாற்றம் செய்வதோ முடியாது.
  1. குறித்த விமானத்துக்காக உங்கள் தரமுயர்த்தல் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கன் விமானசேவை உங்கள் அசல் பயணச்சீட்டிலுள்ள வகுப்பிற்கமைய உங்களை பிறிதொரு விமானத்தில் செல்ல அனுமதிக்க நேரிடும் சந்தர்ப்பத்தில் தரமுயர்த்தலுக்காக அறவிடப்பட்ட கட்டணம் தரமுயர்த்தலுக்காக சிபாரிசு செய்யப்பட்ட கிரெடிட் அட்டைக்கு மீள வைப்பிலிடப்படுவதுடன் ஸ்ரீலங்கன் விமானசேவை இதற்காக மேலும் பொறுப்புக் கூறமாட்டாது.
  2. உங்கள் தரமுயர்த்தல் சலுகை ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களுக்கு தரமுயர்த்தல் வழங்கப்பட்டதன் பின்னரும், உபகரணத்தில் செய்யப்படும் மாற்றம், இணைக்கப்படவுள்ள விமானத்தில் ஏற்படக் கூடிய தாமதம் காரணமாக உங்களுக்கான தரமுயர்த்தலை பெற்றுக் கொள்ள முடியாமல் போதல் உள்ளிட்ட ஆனால் மட்டுப்படுத்தப்படாத ஸ்ரீலங்கன் விமானசேவையில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்கமையவும் விமானத்தை மாற்றுதல் அல்லது விமானத்தை தவறவிடுதல் போன்ற உங்களால் இடம்பெறக்கூடிய செயற்பாடுகள் மற்றும் தவறுகைகள் தவிர்ந்த ஏனையவை உள்ளடக்கிய ஆனால் மட்டுப்படுத்தப்படாத காரணங்களுக்காகவும் தரமுயர்த்தப்பட்ட வகுப்பில் உங்களால் அமர்ந்து செல்ல முடியாமல் போனால்

   மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக பணம் மீளச்செலுத்துவதற்கு அங்கீகரிக்கப்படும், இவை தரமுயர்த்தலுக்காக கட்டணம் அறவிடப்பட்ட அதே கரன்ஸியில் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறாக மீளச் செலுத்தப்படும் கட்டணங்கள் அறவிடப்பட்ட கட்டணத்தின் பெறுமானத்துக்குரியதாக இருப்பதுடன் வங்கியுடன் தொடர்புடைய ஏனைய கட்டணங்கள் மீளச் செலுத்தப்பட மாட்டாது.
 13. உங்கள் தரமுயர்த்தல் வாய்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு தரமுயர்த்தப்பட்ட பின்னரும் நீங்கள் கொள்வனவு செய்த அசல் பயணச்சீட்டிற்கான ரத்துக் கொள்கை, பயணப்பொதிக் கொடுப்பனவு, அடிக்கடி பயணிப்போருக்கான மைல்ஸ்களுடன் தொடர்புபட்ட விதிமுறைகள் உள்ளடங்கிய ஆனால் மட்டுப்படுத்தப்படாத பயணக் கட்டண நிபந்தனைகள் மாற்றமடையாமல் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
 14. தரமுயர்த்தல் வாய்ப்புக்காக முயற்சி செய்பவர்களுக்கு அதிசொகுசுக் கார் சேவை அமுலில் இருக்காது.
 15. ஸ்ரீலங்கன் விமானசேவையினால் தரமுயர்த்தல் வாய்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் பயணச்சீட்டில் பயணியினால் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமாயின், பயணி தனது தரமுயர்த்தலை இன்னுமொருவருக்கு மாற்றீடு செய்யவோ தரமுயர்த்தலை மீளப்பெறவோ முடியாது.
 16. ஸ்ரீலங்கன் விமானசேவை இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எவ்வித முன்னறிவித்தலுமின்றி காலத்துக்குக் காலம் மாற்றுவதற்கு, திருத்துவதற்கு, வித்தியாசங்களை மேற்கொள்வதற்கு அல்லது ரத்துச் செய்வதற்கான உரிமையினைக் கொண்டுள்ளது.
தரமுயர்த்தலுக்கான வாய்ப்பினை முன்வைப்பதன் மூலம் நீங்கள் மேற்படி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வாசித்து விளங்கிக் கொண்டதாகவும் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதாகவும் உடன்படுகின்றீர்கள்.

Close

flysmiles


More about FlySmiles