மாற்றுத் திறனாளிகளின் உதவிக்கு தொடர்பு கொள்ளும் முறை

கோரிக்கையினை சமர்பிக்கவும்
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி

For Passengers with Special Medical Requirements
Medical clearance form

தொடர்புக்கு
தொலைபேசி : + 94117771979
தொலைபேசி (இலவசம்) : 1-800-497-4270
தொலைநகல் : + 94197333999
மின்னஞ்சல் : reservations@srilankan.com

விசேட மருத்துவ தேவைப்பாடுடைய பயணிகள்

கீழ்வரும் நபர்கள் தமது விமானப் பயணத்திற்கு முன்னர் ஸ்ரீலங்கன் விமானசேவையிடமிருந்து மருத்துவ அறிக்கையினைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
  • பரவக்கூடிய மற்றும் தொற்றக்கூடியவை என நம்பப்படும் நோய்களால் பாதிப்புற்ற பயணிகள்.
  • விமானத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் சரியான நேரப்பிரயாணம் என்பன குறித்து விமானப் பயணிகள் முன்னெச்சரிக்கை அடைவதற்கும் ஏனைய பயணிகளின் நலன்புரி மற்றும் வசதிகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாத வகையிலும் நோய் மற்றும் உடல் நிலை காரணமாக வித்தியாசமான நடத்தை கொண்ட பயணிகள்.
  • விமானப் பயணத்தின்போது மருத்துவ உதவி மற்றும் அல்லது தமது உடல் நிலையைப் பாதுகாத்துக்கொள்ள விசேட உபகரணம் தேவைப்படும் பயணிகள்.
  • சுகயீனம் உயிர் அச்சுறுத்தலாக மாறும் சந்தர்ப்பம் அல்லது மேலதிக மருத்துவ உதவி இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது என்ற நிலை கருத்திற் கொள்ளப்படும் பயணிகள்.
  • சாதாரண விமானத்தின் இருக்கைகள் கிடையான நிலைக்கு வரும்போது அதனைப் பயன்படுத்த முடியாத பயணிகள்.
நீங்கள் மேற்குறிப்பிட்ட ஏதாவதொரு நிலையில் இருப்பீர்களாயின் உங்களுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் அங்கீகாரம் அவசியமாகும். இதற்காக உங்கள் தனிப்பட்ட மருத்துவரால் நிரப்பப்பட்ட ‘மருத்துவத் தகவல் படிவம்’ ((MEDIF) ஒன்றினை நீங்கள் புறப்படுவதற்கு ஆகக்குறைந்து 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அருகிலுள்ள ஸ்ரீலங்கன் விமானசேவை அலுவலகத்தில் சமரப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் பயண முகவரை கேட்டோ அல்லது ஏதாவது ஸ்ரீ லங்கன் விமான சேவை அலுவலகத்தை தொடர்பு கொண்டோ மருத்துவ தகவல் படிவத்தினைப் ((MEDIF) பெற்றுக் கொள்ளுங்கள்.

விமான நிலையத்தில் சக்கரவண்டிகள்

விமான நிலையத்திற்குள் உங்களுக்குச் சக்கர வண்டியின் உதவி தேவைப்படுமாயின் நீங்கள் முற்பதிவுகளை மேற்கொள்ளும்போதே தயவுசெய்து அதற்கான கோரிக்கையினையும் முன்வையுங்கள். எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் நாம் உங்களுக்குச் செய்யக் காத்திருக்கின்றோம்.

முன்னறிவித்தலின்றி விமான நிலையத்தில் சக்கரவண்டி உதவியினைக் கோரும் பயணிகளிடமிருந்து உதவிப்பணமாக 2 ஆயிரம் இலங்கை ரூபாய் அறவிடப்படும். ஆனால் இந்நடைமுறை ஒரே விமானத்தில் தொடர்ந்து பயணம் செய்தவர்கள் அல்லது அமெரிக்க விமான நிலையத்தில் பயணத்தை ஆரம்பிக்கும் அல்லது முடிக்கும் தனி இலக்க விமானத்தின் பயணிகளுக்கு விதிவிலக்காகும்.


உங்கள் தனிப்பட்ட பாவனைக்குரிய இயக்கும் உபகரணங்களை விமானத்தில் கொண்டு செல்கையில்

இயக்கும் உபகரணத்தின் இரண்டு துண்டங்களை உங்களால் இலவசமாக எடுத்துச் செல்ல முடியும். இது உங்களின் பயணப்பொதிச் சலுகையுடன் சேர்த்துக் கணக்கிடப்பட மாட்டாது.

எவ்வாறாயினும் ஒரே விமானத்தில் தொடர்ந்து பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அமெரிக்க விமான நிலையத்தில் பயணத்தை ஆரம்பிக்கும் அல்லது முடிக்கும் தனி இலக்கமுடைய விமானப் பயணிகள் தமக்கு அவசியமான உதவிச் சாதனங்கள் மற்றும் இயக்கும் உபகரணங்களை தம்முடன் விமானத்திலோ அல்லது தமது பொதியுடன் சேர்த்தோ இலவசமாக எடுத்துச் செல்ல முடியும். இவை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைத் தேவைகளை கவனத்திற் கொண்ட வகையில் கொண்டு செல்லப்படலாம்.

உங்களிடம் மின்கலம் மூலம் இயங்கும் சக்கரவண்டி இருக்குமாயின் நீங்கள் பயணம் செய்வதற்கு முன்னர் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். முற்பதிவின்போது தயவுசெய்து இதற்குரிய விவரங்களைக் கேட்டறியுங்கள்.


உதவி வழங்க உடன் வருவோர்

உங்களை நீங்கள் சுயமாக நம்பியிராத நிலையில், (விமானத்திற்குள் உங்கள் தேவைகளைத் தனியாக கவனத்திற் கொள்ளும் தகைமை) உ+ம் : விமானத்தில் ஏறும் போது சுயமாகச் சக்கரவண்டியை இயக்க முடியாதவர்கள், உங்களுக்கு உதவக் கூடிய ஒருவருடன் பயணம் செய்யுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். உங்களுக்கு உதவ எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். என்றபோதும் சுகாதாரம், பாதுகாப்பு, தூய்மை மற்றும் ஒழுங்கு விதிகளில் உங்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்பதன் காரணமாக இதனையே கடமையாக ஏற்றுக் கொள்வதாக எம்மால் உறுதி மொழி வழங்க முடியாது.

வான் போக்குவரத்துச் சேவையில், ஒரே விமானத்தில் தொடர்ந்து பயணம் செய்யும் அல்லது அமெரிக்க விமான நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அல்லது முடிக்கும் தனி இலக்கத்தையுடைய விமானத்தின் பயணிகள் கீழ்க் காணும் சந்தர்ப்பங்களில் உதவியாளர் அல்லது துணை ஒருவருடன் பயணிக்க வேண்டும்:

(1) தள்ளு வண்டி அல்லது கண்ணாடிப் பெட்டியில் பயணம் செய்தல்.
(2) புத்தி சுயாதீனமற்ற மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள், பாதுகாப்பு விளக்கவுரை, அல்லது அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு ஒழுங்கு விதிமுறைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள அல்லது அதன்படிநடக்க இயலாதவர்கள்.
(3) விமானம் அவசர நிலையை எதிர்நோக்கும்போது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலாத இசைவாக்கம் குறைந்தவர்கள் அல்லது
(4) செவித் திறன் மற்றும் பார்வைத் திறனை பாரதூரமான முறையில் இழந்த பயணிகள் விமானசேவைப் பணியாளருடன் பேச முடியாதவிடத்து, அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு ஒழுங்கு விதிமுறைகளைப் பின்பற்றாதவிடத்து மற்றும் விமானம் அவசர நிலையை எதிர்நோக்கும்போது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலாத நிலையில்

விசேட உதவி தேவைப்படும் பயணிகள்

விமானத்திற்குள் விசேட உதவி தேவைப்படும் எமது பயணிகளுக்கான வசதிகளை வழங்க நாம் எப்போதும் முயற்சிக்கின்றோம். எமது அகன்ற உடற்பரப்பைக் கொண்ட விமானங்களில் ஆசனங்களுக்கிடையிலான நடைபாதையில் செல்வதற்கு சக்கரவண்டிகள் கிடைக்கும். விமானங்களுக்குள் அவசர நிலைமைகளின்போது அதன் பணியாளர்களால் இலகுவில் அடையாளம் காணக்கூடிய வகையில் அவசர வெளியேறுகை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அவசர வெளியேறுகையில் அல்லது அதனை அடையும் வழியிலுள்ள நடைபாதைக்கு குறுக்காக இசைவாக்கம் குறைந்த பயணிகள் அமரக்கூடாது என்று பாதுகாப்பு விதிமுறைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விமானங்களிலுள்ள மலசலகூடங்களிலும் உதவிச் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பார்வைத் திறனற்ற அல்லது செவித்திறனற்ற பயணிகள்

சந்தித்து உதவும் சேவை அல்லது விமானத்திற்கோ அல்லது விமானத்திலிருந்தோ வழிகாட்ட வேண்டிய அவசியம் உங்களுக்குத் தேவைப்படுமாயின் தயவுசெய்து இட ஒதுக்கீட்டின்போதே இது குறித்து முற்பதிவு முகாமையாளரிடம் குறிப்பிடுங்கள்.

வழிகாட்டி / உதவி நாய்களுடன் பயணம் செய்தல்

பார்வைத் திறனற்ற அல்லது செவித்திறனற்ற ஒருவர் பயணிகளை வழிகாட்டுவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய் ஒன்றில் தங்கியிருப்பாராயின், குறித்த நாய் எவ்வித கட்டணமுமின்றி பயணியின் உதவிக்காக விமானத்திற்குள் அனுமதிக்கப்படும். ஸ்ரீலங்கன் விமானசேவை “பார்க்கும் கண்கள்” அல்லது “கேட்கும்” நாய்களை பின்வரும் ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய ஏற்றுக்கொள்ளும்.
  • பார்வை அல்லது செவித்திறனற்ற பயணியான அவன் / அவள் உண்மையில் இவ்வாறான நாயில் தங்கியிருப்பார்களாயின் மாத்திரமே குறித்த நாய் பயணியுடன் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
  • வருகையின் போது சந்தித்தல் மற்றும் உதவுதல்.
  • இவ்வாறான நாய்கள் பயணிகளுக்கான பிஸ்னஸ் வகுப்பில் செல்வதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படும் என்பதால் குறித்த பயணியை பிஸ்னஸ் வகுப்புக்குரிய பயணச்சீட்டுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  • இது போன்ற நாயில் தங்கியிருக்கும் பயணிகள் விமானத்தின் சாதாரண வகுப்புச் சேவை அல்லது விலை குறைந்த வகுப்புத் தெரிவுகள் இல்லாத விமானனொன்றில் பயணிப்பாராயின் நாயிடமிருந்து பிரிய வேண்டி ஏற்படும். இவ்வாறான நிலைமைகளில் நாய் பயணப்பொதிகளுடனேயே போக்குவரத்து செய்ய அனுமதிக்கப்படும். எவ்வாறாயினும் இதற்காக கட்டணம் அறவிடப்பட மாட்டாது. இதைவிட செல்லப்பிராணிகள் மற்றும் உயிருடனான விலங்குகளைக் கொண்டு செல்வதற்கான ஒழுங்கு விதிமுறைகள் அமுலில் இருக்கும்.
  • ஓவ்வொரு பயணத்தின்போதும் பிஸ்னஸ் வகுப்பில் ஒரேயொரு நாய் மாத்திரமே கொண்டு செல்லப்பட முடியும்.
  • இவ்வாறான நாய்களை விமானத்தில் அனுமதிப்பது தொடர்பிலான ஏனைய நிபந்தனைகளை அறிந்துகொள்ள தயவுசெய்து உங்கள் நாட்டிலுள்ள ஸ்ரீலங்கன் விமானசேவை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.


கர்ப்ப காலத்தில் விமானத்தில் பயணம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

கர்ப்பிணித் தாய்மார் தமது பிரசவத் திகதி மற்றும் விமானப் பயணத்திற்கு உகந்த உடற் தகைமை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் புறப்படுவதற்கு முதல் மூன்று நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவச் சான்றிதழை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

Special assistance for codeshare partners

For flights to and from the U.S., operated by codeshare partners, CRO assistance will be provided by our codeshare partners and directions on how to contact the CRO may be found on the codeshare partner’s website.

Certain special services may not be available for codeshare flights operated by partner airlines. Please contact the SriLankan Airlines 24-hour Contact Centre for further information.


Complaint Resolution for Customers with Special Need

For passengers travelling in to and out of United States of America, consumers can obtain a copy of Part 382, the regulations regarding nondiscrimination on the basis of disability in air travel, in an accessible format from the Department of Transportation by any of the following means:

  • For calls made from within the United States, by telephone via the Toll-Free Hotline for Air Travelers with Disabilities
    (Voice) 1-800-778-4838
    (TTY) 1-800-455-9880
  • By telephone to the Aviation Consumer Protection Division
    (Voice) 202-366-2220
    (TTY) 202-366-0511
  • By mail to the Air Consumer Protection Division
    C-75,
    U.S. Department of Transportation,
    1200 New Jersey Ave., SE., West Building
    Room W96-432
    Washington, DC 20590
  • On the Aviation Consumer Protection Division's Web site (http://airconsumer.ost.dot.gov).

For flights to and from the U.S, operated by codeshare partners, Complaints Resolution Official assistance will be provided by our codeshare partners and directions on how to contact the Complaints Resolution Official may be found on the codeshare partner’s website


Last updated date – 29th March 2023


Close

flysmiles


More about FlySmiles