ஆகாயச் சமையல்


உணவுப் பட்டியலில் உள்ளடங்காத ஏதாவது உங்களுக்குப் புதிதாக வேண்டுமா? உங்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிஸ்னஸ் வகுப்பில் ருசிகரமான உணவுகளுடன் கூடிய ஆகாயச் சமையலறை தாபிக்கப்பட்டுள்ளது. எமது சமையற்காரர்களை ஒன்று திரட்டி மனநிறைவுடன் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலிலிருந்து நீங்கள் விரும்பும் உணவை முற்பதிவு செய்யுங்கள்.



All meals catered out of Colombo and other direct network stations are prepared in a Halal certified kitchen except for Bangkok, Incheon and Tokyo.

முழு நாளுக்குமுரிய உணவுத் தெரிவுகள்
ஏதாவது  எளிமையாக

ஏதாவது எளிமையாக

AD01

தீயில் வாட்டிய செம்மறி ஆட்டுப் பனினி (இத்தாலி பாணியில் தயாரிக்கப்பட்ட சூடான சன்ட்விச்) வறுக்கப்பட்ட சிறிய உருளைக் கிழங்குகள், குடை மிளகாய்கள் மற்றும் கிரேக்க சலாதுகள் என்பவற்றுடன் பரிமாறப்படும்.

சைவத்  தெரிவு

சைவத் தெரிவு

AD02

ஃபீட்டா சீஸ் மற்றும் பசளியினை உள்ளீடாகக் கொண்ட பச்சை மூலிகை பேன்கேக் ஆனது காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கெப்பொனேட்டா, ஆரஞ்சு வாசனையுடனான பொலென்டா முக்கோணங்கள், அவிக்கப்பட்ட எஸ்பேரகஸ் தாவரம் மற்றும் பசில் க்ரீம் சோசுடன் பரிமாறப்படும்.

க்ளப்  சன்ட்விச்

க்ளப் சன்ட்விச்

AD03

தீயில் வாட்டிய கோழியின் மார்பு இறைச்சித் துண்டுகள், துருக்கி நாட்டின் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் சீஸ் ஆகியவற்றைக் கொண்ட மூன்று அடுக்கு வறுக்கப்பட்ட சன்ட்விச்சானது பொரித்த உருளைக்கிழங்குகள், வெங்காய ஊறுகாய், வெள்ளரிக்காய், தக்காளி சோஸ் ஆகியவற்றுடன் பரிமாறப்படும்.

கடலிலிருந்து

கடலிலிருந்து

AD04

இறால், மட்டி, நீளமான கூர்முனையுடனான மரக்குச்சியில் குத்தி வைக்கப்பட்ட மீன் துண்டுகள் மற்றும் செமன் ஆகியன பட்டரினால் தாளிக்கப்பட்ட பூசனிக்காய், பசளி, மசித்த உருளைக்கிழங்கு மற்றும் க்றீம் சோசுடன் பரிமாறப்படும்.

பிரதான உணவுத் தெரிவு – கோழி
சூடான  சலாது

சூடான சலாது

AD05

தீயில் வாட்டிய செமன், தானியங்களின் கலவை, காடை முட்டை, கறுப்பு ஒலீவ் பழங்கள், புதிய உருளைக்கிழங்கு ஆகியவை கொண்ட மிக எளிமையான உணவுத் தெரிவானது தேன், கடுகினால் அலங்கரிக்கப்பட்ட பச்சை சலாதுடன் கிடைக்கும்.

சீஸ் அடைத்த கோழி இறைச்சி மார்புப் பகுதிகள்

சீஸ் அடைத்த கோழி இறைச்சி மார்புப் பகுதிகள்

MC01

இவற்றுடன் பார்ஸ்லி சேர்த்து அவிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, கரட், நீளத் துண்டுகளாக நறுக்கப்பட்ட சுரைக்காய் ஆகியன தக்காளி, ஒலிவ் சோஸ், கேப்பர் விதைகளுடன் பரிமாறப்படும்.

கோழியின் மார்புப் பகுதி

கோழியின் மார்புப் பகுதி

MC02

நீராவியில் சமைத்த ஜெஸ்மின் சாதத்துடன் எஸ்பேரகஸ் தாவரம் மற்றும் மிளகாய் என்பன சிவப்புக் கறி சோசுடன் சேர்த்து தாளிக்கப்பட்ட கரட், சுரைக்காய் மற்றும் சிவப்பு மிளகுடன் பரிமாறப்படும்.

இலங்கையின் சிறப்பு

இலங்கையின் சிறப்பு

MC03

வெங்காயத்தினால் தாளிக்கப்பட்ட சாதத்துடன் கஜு கறி, கோழிக்கறி, சூடான காய்கறிகளின் கலவை, கத்தரிக்காய் மோஜு, மீன் கட்லட் ஆகியன பரிமாறப்படும்.

பிரதான உணவுத் தெரிவு – கடல் உணவு
கண்டியர்களின் பாணியில் 05 மசாலாக் கலவையில் தயாரிக்கப்படும் கோழிக்கறி

கண்டியர்களின் பாணியில் 05 மசாலாக் கலவையில் தயாரிக்கப்படும் கோழிக்கறி

MC04

இது நீராவியில் அவித்த பாசுமதி சாதத்துடன் கரட், லீக்ஸ் கறி, மலே ஊறுகாய் மற்றும் மீன் கட்லட்டுடன் பரிமாறப்படும்.

இலங்கையின்  சிறப்பு

இலங்கையின் சிறப்பு

MS01

நெய்ச் சாதமானது இறால் கறி, கஜு கறி, காளான் கறி, உருளைக்கிழங்கு, பீட்ரூட் வறுவல் மற்றும் சீனிச்சம்பலுடனும் பரிமாறப்படும்.

தீயில் வாட்டிய செமன் துண்டு

தீயில் வாட்டிய செமன் துண்டு

MS02

இது டெரியாக்கி சோஸ் மற்றும் பருவ காலத்துக்குரிய வறுக்கப்பட்ட காய்கறிகள், வசாபி தாவரம் மற்றும் மசித்த உருளைக்கிழங்குகள் என்பவற்றுடன் பரிமாறப்படும்.

Main meal options - Meat
இலங்கையின் மீன்கறி

இலங்கையின் மீன்கறி

MS03

இது பொரித்த மரக்கறி சாதத்துடன் கஜு, பட்டானிக் கறிகள் மற்றும் கத்தரிக்காய் பாஹியுடன் பரிமாறப்படும்.

கடலில் இருந்து

கடலில் இருந்து

MS04

பொரித்த மரக்கறிச் சாதத்துடன் தீயில்வாட்டிய மீன், இறால்கள் மற்றும் நீண்ட தடியில் குத்தி வைக்கப்பட்ட மசில் எனும் ஒரு வகை மட்டி என்பன இனிப்பு மிளகாய் சோஸ், ப்ரோக்கோலி மலர்கள், கரட், முட்டை ஆகியவற்றுடன் வழங்கப்படும்.

பிரதான உணவுத் தெரிவு- சைவம்
செம்மறி ஆட்டு பிரியாணி

செம்மறி ஆட்டு பிரியாணி

MM01

இது இந்தியாவின் பிரபல்யமான மிர்ச்சி பெயின்கன் கா சலன் எனும் கறியுடன் காய்ந்த முந்திரிகை மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட புதினா சட்னியையும் கொண்டிருக்கும்.

மொராக்கன் பாணியில் செம்மறி ஆட்டுத் துண்டுகள

மொராக்கன் பாணியில் செம்மறி ஆட்டுத் துண்டுகள

MM02

இது கறுப்பு ஒலிவ்ஸ், தூவப்பட்ட சீரகம், கசகசா, தீயில் வாட்டிய சீஸ், மிகச்சிறந்த க்ரீம், தக்காளி மசாலா சோஸ் ஆகியவற்றுடனான மிகச் சிறந்த காய்கறி கெப்பொனேட்டோவுடன் பரிமாறப்படும்.

செம்மறி ஆட்டுக் கறி

செம்மறி ஆட்டுக் கறி

MM03

இது கறுப்பு மிளகு சேர்க்கப்பட்ட சாதத்துடன் சூடான பருப்பு, பொரித்து பிரட்டிய காய்கறிகள் மற்றும் சீனிச் சம்பலுடன் பரிமாறப்படும்.

பிரதான உணவுத் தெரிவு – காலை உணவு
கிறில் கலவை

கிறில் கலவை

MM04

செம்மறி ஆட்டுத் துண்டுகள், மாட்டிறைச்சித் துண்டுகள், கோழி இறைச்சித் துண்டுகள், மிளகுச் சோள சோஸில் தோய்த்த கோழி இறைச்சி சொசேஜ் ஆகியன ஒன்றன்மேல் ஒன்றாக கோபுரமாக அடுக்கப்பட்ட உருளைக்கிழங்குத் துண்டுகள், பசளி மற்றும் காய்கறித் துண்டுகளுடன் பரிமாறப்படும்.

தெரிவு 1

தெரிவு 1

MV01

மஞ்சள் சாதத்துடன் மரக்கறி கட்லட், கஜு மற்றும் பட்டாணிக் கறி, கத்தரிக்காய் மோஜு ஆகியன பரிமாறப்படும்.

தெரிவு 2

தெரிவு 2

MV02

பொரித்த மரக்கறிச் சாதம் பருப்புக் கறி, பொரித்த காய்கறிக் குழம்பு, பாலக் பனீர் மற்றும் மரக்கறிக் கட்லட் என்பவற்றுடன் பரிமாறப்படும்.

தெரிவு 3

தெரிவு 3

MV03

வறுத்த காய்கறிகள் மற்றும் பண்ணைக் காளான் அடைக்கப்பட்ட கெனலோனியானது தக்காளி மூலிகை சோஸ், எஸ்பேரகஸ் தாவரத்தின் நறுக்கிய துண்டுகள் மற்றும் குடை மிளகாய்களுடன் பரிமாறப்படும்.

இலங்கையின்  பாரம்பரிய  காலை  உணவு

இலங்கையின் பாரம்பரிய காலை உணவு

MB01

தேங்காய்ப் பாலில் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த கிரிபத் அல்லது பாற்சோறு, இலங்கைக்குரிய பாணியில் தயாரிக்கப்பட்ட தீய்த்த 'எம்புல் தியல்' மீனுடன் வெங்காயம், புளி, சீனி, வாசனைத் திரவியங்களால் தயாரிக்கப்பட்ட சீனிச்சம்பலையும் கொண்டிருக்கும்.


Close

flysmiles


More about FlySmiles