விமானப் பயணத்திற்கு முன்னர்

இடையூறின்றிய, வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக கீழ்வரும் இலகுவான குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

உங்கள் மருத்துவரை அணுகவும்
நீண்ட நேரப் பயணத்தின்போது மருத்துவ ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பீர்களாயின் அல்லது சுவாச அல்லது இருதயக் கோளாறு காரணமாக நீங்கள் அவதியுறுபவராயின் விமானப் பயணத்திற்கு முன்னர் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்த தீர்வாகும்.
உங்கள் விமானப் பயணத்தைப் போன்றே நீங்கள் சென்றடையவுள்ள இடம் குறித்தும் சிந்தியுங்கள். இதற்காக உங்களுக்கு ஏதாவது விசேட மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் தேவைப்படுமா என உங்கள் வைத்தியரைக் கேளுங்கள். அதிக உயரம் மற்றும் கைத்தொழில் நகரங்கள் சில சந்தர்ப்பங்களில் ஆஸ்துமா அல்லது ஏனைய சுவாச நோய்களைத் தூண்டிவிடக் கூடியவை என்பதை கவனத்திற் கொள்ளவும். ((உ+ம். மெக்சிக்கோ நகரம் 9000 அடி உயரத்தில் உள்ளது). வைத்தியர் பரிந்துரையின்றி பல மருந்துகளை விமானத்திற்குள் பெற்றுக் கொள்ள முடிகின்றபோது வைத்தியரின் சிபாரிசுக்கமைய உங்களுக்குப் பொருத்தமானதைத் தெரிவு செய்யுங்களென்றே நாம் எப்போதும் பரிந்துரை செய்வோம்.

அதிகமாக உண்பதைத் தவிருங்கள்
நீண்ட தூர விமானப் பயணத்தின் போது உங்கள் உடம்பு வழமையிலும் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த செயற்பாடுகளையே கொண்டிருக்கும். உங்கள் சமிபாட்டின் வேகம் குறைவடைவதனால் அதிகமான உணவுகளை சமிபாடடையச் செய்வது சற்றுக் கடினமாகும். எனவே விமானத்தில் ஏறுவுதற்கு முன்பாக அவசியமுடைய இலகுவாக சமிபாடடையக் கூடிய உணவுகளை தெரிந்து உண்ணுங்கள்.

நேர காலத்துடன் வாருங்கள்
உள்வருகைக்கும், கடைகளுக்குச் செல்வதற்கும், போர்டிங் நுழைவாயிலை அடைவதற்கும் உங்களுக்கு நீங்களே நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் . வேகமாக வேலைகளைச் செய்வது உங்கள் உடம்பையும் மனதையும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கும். இயலுமானவரை விமான நிலையத்தில் ஓய்வெடுக்க முயற்சியுங்கள். நீங்கள் வியாபார வகுப்பில் பயணம் செய்பவராக இருந்தால், நேரத்துடன் வருகை தந்து உங்களுக்கான பொது ஓய்வறையிலுள்ள சலுகைகளை அனுபவியுங்கள்.

குறைந்த சுமையுடன் பயணியுங்கள்
விமான நிலையத்திலும் விமானத்திலும் சுமைக்கூடிய பைகள் சுமப்பதனைத் தவிருங்கள். சுமை காரணமாக நீங்கள் கணிசமான அளவு அழுத்தத்திற்கு உள்ளாகலாம். விமானப் பயணத்தின் போது உங்களுக்கு அவசியமானவற்றை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.

புகைத்தலுக்கான கொள்கை
ஈ-சிகரட் புகைத்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கண் வில்லைகளுக்குப் பதிலாக கண்ணாடிகளை அணியுங்கள்
விமானத்திற்குள் உள்ள வளியில் நீங்கள் வெளியில் உணர்ந்ததை விட ஈரப்பதன் சற்று குறைவாகவே காணப்படும். இதனால் உங்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. எனவே நாம் உங்களை கண் வில்லைகளுக்குப் பதிலாக கண்ணாடிகளை அணியுமாறு பரிந்துரை செய்வோம். இதன் மூலம் உங்கள் கண்கள் களைப்புக் குறைந்து புத்துணர்ச்சியுடன் காணப்படும். உங்கள் இடத்தை வந்தடைந்ததன் பின்னர் நீங்கள் மீண்டும் உங்கள் கண் வில்லைகளைப் பயன்படுத்த முடியும்.

எமது இளம் பயணிகளுக்காக
கோரிக்கைக்கு அமைய தொட்டில்களைப் போன்றே குழந்தைகளுக்கான உணவையும் விமானப் பணியாளர்களிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். விமானத்தில் சிறுவர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்காக கையில் வைத்து விளையாடக் கூடிய விளையாட்டுச் சாதனங்கள் அவர்களிடம் வழங்கப்படும்.

உங்கள் நலனுக்காக
வைத்தியரின் பரிந்துரையின்றி அவசர நிலமைகளுக்கான சில மருந்து வகைகளை விமானப் பணியாளர்களிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இசைவாக்கம் குறைந்த பயணிகளுக்கான உதவிகள்
விமான நிலையத்திற்குள் உங்களுக்கு உதவ சக்கரவண்டி தேவைப்படுமாயின் முற்பதிவுகளின் போதே தயவுசெய்து அதற்கான கோரிக்கையினையும் முன்வையுங்கள். இதன் மூலம் உங்களுக்கான சேவையை வழங்க நாம் முயற்சி எடுக்க முடியும்.

பார்வைத் திறனற்ற அல்லது செவித் திறனற்ற பயணிகள்
உங்களுக்கு சந்தித்து உதவும் சேவை அல்லது விமான நிலையத்திற்கோ அல்லது அங்கிருந்தோ வழிகாட்டுவதற்கான உதவி தேவைப்படுமாயின் இட ஒதுக்கீட்டின் போதே தயவு செய்து இது குறித்து உங்கள் பதிவு முகாமையாளருக்கு அறியத் தாருங்கள்.

பாதுகாப்புக்கு முதன்மை
'தரையில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும்போதோ, கதவுகள் மூடப்பட்ட பின்னரோ, ஏன் விமானம்; flight mode இல் உள்ளபோதோ கூட உங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.’

கர்ப்ப காலத்தில் விமானப் பயணம் செய்வதற்கான தேவைப்பாடுகள்
கர்ப்பம் தரித்துள்ள தாய்மார், தமது பிரசவத் திகதி மற்றும் விமானத்தில் பயணிப்பதற்கு உகந்த உடற் தகுதி ஆகியவை குறித்து விமானப் பயணத்தின் மூன்று நாட்களுக்குள் மகப்பேற்று மருத்துவர் ஒருவரினால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு ‘விசேட உதவி’ எனும் பக்கத்தை

Close

flysmiles


More about FlySmiles