எம்மைப் பற்றி

இலங்கையின் தேசிய விமானசேவையானது 1979 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இது சிறந்த சேவை ,வசதி, பாதுகாப்பு , நம்பகத்தன்மை, நேரத்திற்கு செயற்படுதல் போன்ற காரணங்களுக்காக விருதுகளை வென்றுள்ள விமான சேவையாகும்.

கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள எமது விமான சேவையின் மையம் பூகோள பயணப் பாதை வழியே 48 நாடுகளின் 111 பயண இலக்குகளுடன் மிகவும் வசதியான இணைப்பினைக் கொண்டுள்ளது.

எமது தூரநோக்கு

ஆசியாவில் மிகவும் விரும்பத்தக்க விமானசேவையாக விளங்குதல்

எமது இலக்கு

நாம் ஆகாயப் போக்குவரத்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோம். எமது பயணிகளுக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய மகிழ்ச்சியான பயண அனுபவத்தை நாம் வழங்குகின்றோம் . எமது வியாபார பங்குதாரர்களுக்கு பல்வேறு புத்தாக்கம், தொழில்சார் மற்றும் பரஸ்பர இலாபம் நிறைந்த சேவைகளையும் வழங்குகின்றோம். இலங்கையில் இலாபத்துடன் கூடிய சந்தை வாய்பினை உருவாக்க வேண்டும் என்ற எமது பங்குதாரர்களின் எதிர்பார்பினை நாம் நிறைவேற்றிவரும் அதேநேரம் சமூகத்தின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றோம். எமது குழு ஆக்கத்திறமை, விழிப்புணர்வு மற்றும் திறமைகள் நிறைந்தது. எமது அர்ப்பணிப்புக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைத்துள்ளது.

பணிப்பாளர் சபை
Mr. A. K. D. D. Dimal Arandara – Acting Chairman cum Treasury Representative
Flt/Lt (Retd) Mr. Sugath Rajapakse – Director
Mr. Vipula Gunatilleka – Director
Mr. Herath Banda – Director
Mrs. Niluka Madampe – Director

Last updated date – 04th May 2026



Close

flysmiles


More about FlySmiles