விமான நிலையத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ள அட்டைச் சோதனை

நீங்கள் உங்கள் பயணச்சீட்டை அட்டையினைப் பயன்படுத்தி இணையத்தில் முற்பதிவு செய்திருப்பின், அட்டை உரிமையாளரான அவன் / அவள் பயணத் தரப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையில் கொள்வனவுக்குப் பயன்படுத்திய அதே அட்டையினை விமான நிலையத்தின் சம்பந்தப்பட்ட அனைத்து செக்-இன் கருமபீடங்களிலும் தேவைப்படும் போதெல்லாம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் செயற்பாடானது 'கட்டாயப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் சோதனை" என அறியப்படுகிறது. பண அட்டை மோசடியிலிருந்து உங்களை பாதுகாப்பதனை உறுதிசெய்யும் வகையில் இந்நடைமுறை முன்னெடுக்கப்படுகிறது. இக்கோரிக்கைகளுடன் ஒழுக மறுப்பதன் விளைவாக விமானத்தில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்படும்.

எவ்வாறாயினும் உங்கள் கொடுப்பனவுகளுக்காக வீசா அல்லது மாஸ்டர் கார்டினை நீங்கள் தெரிவு செய்திருப்பின் உங்களின் பண அட்டை நிறுவனமானது 'verified by visa' அல்லது 'master card secure code' ஆகிய பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தும் பட்சத்தில் மேற்படி உண்மையை சரிபார்க்கும் செயற்பாடுகள் தேவைப்பட மாட்டாது.

நீங்கள் பயணம் செய்யும் தரப்பில் ஒருவராக இல்லாத போதும் உங்கள் அன்புக்குரியவருக்காக பயணச்சீட்டுக் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தினையும் ஸ்ரீலங்கன் விமானசேவை உங்களுக்கு வழங்குகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களில்ää நீங்கள் விமானசேவையினால் கீழே வழங்கப்பட்டுள்ள உண்மையைச் சரிபார்ப்பதற்கான செயன்முறைகளை பின்பற்றுவது மாத்திரமே போதுமானது.


இணையத்தில் பயணச்சீட்டுக் கொள்வனவு செய்தபோதும் பயணத் தரப்பின் உறுப்பினர் அல்லாத பண அட்டை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிமுறைகள்

உங்கள் அன்புக்குரியவருக்காக நீங்கள் இணையத்தில் பயணச்சீட்டினைக் கொள்வனவு செய்வீர்களாயின், தயவு செய்து கீழ்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

உண்மையை சரிபார்க்கும் செயன்முறைகளை பூரணப்படுத்துவதற்காக எந்தவொரு ஸ்ரீலங்கன் விமானசேவை அலுவலகமும் பயணி(கள்) புறப்படுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக பண அட்டை உரிமையாளரைத் தமது அலுவலக நேரத்திற்குள் நேரில் சமூகமளித்து கீழ்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்க்கலாம்.

  • பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பண அட்டைகள்
  • கடவுச் சீட்டின் (கையொப்பம் இடப்பட்ட பக்கம்) அசல் மற்றும் பிரதி அல்லது பண அட்டை உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை.
  • பயணிகளின் கடவுச் சீட்டுகளின் பிரதிகள்
  • பூரணப்படுத்துவதற்காக வெளியீடு மற்றும் முன் காப்பீட்டுப் படிவம், பண அட்டை உரிமையாளர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பணியாளர் அல்லது விமான சேவையின் பரிந்துரை செய்யப்பட்ட பணியாளர்கள் ஒருவரது முன்னிலையில் மாத்திரமே கையொப்பம் இடுமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றனர். ( Release and Indemnity Form)

இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் பண அட்டை உரிமையாளர் இல்லாமலேயே உங்கள் பயணத்துக்கான முற்பதிவுக் குறிப்புகளை மேம்படுத்தல் செய்யும்.

மேற்படி செயற்பாடுகள் குறித்த நேரத்திற்குள் பின்பற்றப்படாவிடத்து இதற்கான அங்கீகாரத்தை நிராகரிப்பதற்கும் விமானத்தில் ஏறுவதற்கு தடை விதிப்பதற்குமான உரிமை ஸ்ரீலங்கன் விமானசேவைக்கு உண்டு. இதேவேளை விமானத்தில் ஏறுவதற்காக விதிக்கப்பட்ட தடையினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ இழைக்கப்படும் நட்டங்களை ஸ்ரீலங்கன் விமானசேவை பொறுப்பேற்க மாட்டாது.

* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விண்ணப்பிக்கClose

flysmiles


More about FlySmiles