| விமான வகுப்பு | ஆகக்கூடிய நிறை | பரிமாணம் |
|---|---|---|
| முதலாம் / பிஸ்னஸ் வகுப்பு | 40 கிலோகிராம் | 158 செ.மீ / 62 அங்குலம் |
| எக்கனமி வகுப்பு | 30 கிலோகிராம் | 158 செ.மீ / 62 அங்குலம் |
| குழந்தைகள் - அனைத்து வகுப்பு | 10 கிலோகிராம் | 115 செ.மீ / 45 அங்குலம் |
பரிமாணம் = நீளம் + உயரம் + அகலம்
குறிப்பு : குறிப்பிட்ட காலப்பகுதி, பயணப்பாதைகள் மற்றும் பயணக் கட்டண வகைகள் ஆகியவற்றைப் பொறுத்து விதிவிலக்குகள் ஏற்படுத்தப்படலாம்.
| வகுப்பு | பரிமாணம் | துண்டங்களின் எண் | ஒரு துண்டத்துக்கான ஆகக்கூடிய நிறை |
|---|---|---|---|
| முதலாம் / பிஸ்னஸ் வகுப்பு | 158 செ.மீ / 62 அங்குலம் | 2 | ஒவ்வொன்றும் 32 கிலோ கிராம் |
| எக்கனமி வகுப்பு | 158 செ.மீ / 62 அங்குலம் | 2 | ஒவ்வொன்றும் 23 கிலோ கிராம் |
| குழந்தைகள் - அனைத்து வகுப்பு | 158 செ.மீ / 62 அங்குலம் | 1 | 23 கிலோ கிராம் |
Important
If your journey involves multiple airline partners, please note that baggage allowance may vary from the information provided above.
Please contact your travel agent or our ticketing/reservation agent for further advice on your baggage allowance.
For checked baggage allowances for SriLankan Airlines FlySmiLes Members and oneworld top tier members please visit our page on FlySmiLes Rewards & Benefits and the FlySmiLes member guide updated on our website.
Please note that when a piece of baggage exceeds the total dimension of 158cm (height + length + width), a charge of USD 50 per oversized bag will be charged. However, the acceptance of such oversized baggage will be subject to the type of aircraft as well. This does not apply to sporting equipment which will be handled separately
ஒவ்வொரு பொருளும்; 18"x14"x8" (46x36x20 செ.மீ) கட்டாயமாக இந்த பரிமாணத்தை மீறக்கூடாது.
| விமான வகுப்பு | ஆகக்கூடிய நிறை | ஆகக்கூடிய துண்டங்கள் |
|---|---|---|
| முதலாம் / பிஸ்னஸ் வகுப்பு | 7கிலோகிராம் | 2 |
| எக்கனமி வகுப்பு | 7கிலோகிராம் | 1 |
விமானத்திற்குள் எடுத்துச் செல்லப்படும் பயணப்பொதிகள் பயணிகளுக்கும் விமானப் பணியாளர்களுக்கும் காயங்களை உள்ளாக்கக் கூடிய அபாயகரமான சூழ்நிலையை ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இருத்தல் வேண்டும். இவற்றின் நிறை அதிகரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் போர்டிங் கேட்டில் வைத்து திருப்பி வழங்கப்படுவதுடன் இவை மேலதிக பயணப்பொதி கட்டணத்துக்குள் உள்ளடக்கப்படும்.
ஸ்ரீலங்கன் விமானசேவையூடாக உங்கள் விமானம் முற்பதிவு செய்யப்பட்டுள்ளபோதும் அந்த விமானம் எமது குறியீட்டுப் பங்குகளையுடைய எமது பங்குதாரர் விமானசேவைகளால் இயக்கப்படலாம்.
உங்கள் விமானம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்துக்கான விமானம் எம்மிடமுள்ள பலகுறியீட்டுப் பங்கு விமானங்களின் ஏதாவது ஒன்றினால் இயக்கப்படுமாயின் ஸ்ரீலங்கன் விமானசேவையின் பயணப்பொதிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். எவ்வாறாயினும் பயணப் பாதை மற்றும் ஏனைய பங்குதாரர் விமானங்களின் ஒப்பந்தங்களுக்கமைய விதிவிலக்குகள் அமுல் செய்யப்படும்.
குறியீட்டுப் பங்கு / பங்குதாரர் விமானசேவைகளில் எடுத்துச் செல்லப்படும் கைப்பொதிகளுக்கு செயற்படும் விமானசேவையின் பயணப்பொதிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.
எதனையும் தவற விடாமல் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துச் செல்லுங்கள்! மேலதிக பயணப்பொதிக் கொடுப்பனவுகளை விசேடமான விலைக்கழிவுக் கட்டணங்களுக்கு முற்கொள்வனவு செய்து உங்கள் நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்தி கவலையைத் தவிருங்கள். மேலதிக தகவல்களுக்கு எமது க்ளோபல் அழைப்பு மையத்தை 1979 / + 94 777 77 1979 ஆகிய இலக்கங்களில் அல்லது எமது பயணச்சீட்டு அலுவலகங்களை அல்லது உங்கள் பயண முகவரை உதவிக்காக அழையுங்கள்.
அனைத்து வகைப் பயணிகளும் வழங்கப்பட்டுள்ள இலவச பயணப்பொதிக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக கொண்டு செல்லும் எந்தவொரு பயணப்பொதியினையும் மேலதிக கட்டணம் செலுத்தியே எடுத்துச் செல்லல் வேண்டும்.
எந்தவொரு மேலதிக பயணப்பொதிக் கட்டணமும் (முழுமையாக அல்லது பகுதியளவில் பயன்படுத்தப்பட்டது) திரும்ப வழங்கப்பட மாட்டாது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அமுலில் இருக்கும்.
கீழே அச்சிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர்களிலுள்ள கட்டணங்களானது செக் -இன் ஆகும்போது உள்நாட்டில் நடைமுறையிலுள்ள கட்டணத்துக்கு மாற்றப்படும்.
உங்களின் இலவச பயணப்பொதிக் கொடுப்பனவை மீறும் ஒவ்வொரு கிலோ கிராம் நிறைக்கும் நீங்கள் கட்டணம் செலுத்த நேரிடும்.
கீழ் வரும் பயண இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு அல்லது அங்கிருந்து வருவதற்கென ஸ்ரீலங்கன் விமானசேவைக்காக விமான நிலையத்திற்குள் செக் -இன் ஆகும்போது ஒரு நிலையான கட்டணம் அறவிடப்படும்.
குறியீட்டுப்பங்கு அல்லது பங்குதாரர் விமானங்களில் செல்லும்போது இந்தக் கட்டணங்கள் வித்தியாசப்படலாம்.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்திற்கும் அப்பால், விமானநிலையங்களில் மேலதிக பயணப்பொதிக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் நடைமுறையிலிருக்கும். இதுகுறித்த தகவல்களுக்கு உள்நாட்டிலுள்ள ஸ்ரீலங்கன் விமானசேவை அலுவலகத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
தெற்காசிய உப கண்டம் ( தெ.ஆ.உ.க) – இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மாலைத்தீவு
மத்திய கிழக்கு – பஹரேன், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, சூடான், ஐக்கிய அரபு இராச்சியம்.
தென் கிழக்கு ஆசியா (தெ.கி.ஆ) – கம்போடியா, சீனா, ஹொங்கொங், இந்தோனேசியா, கஸகஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, வியட்நாம்.
தென் மேற்கு பசுபிக்(தெ.மே.ப) - அவுஸ்திரேலியா, நியுசிலாந்து
ஐரோப்பா – அவுஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிறிஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லட்வியா, லித்துவானியா, லக்ஷம்பேர்க், நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ரோமேனியா, ரஷ்யா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்ஷேரி, துருக்கி, ஐக்கிய இராச்சியம், சேர்பியா, மொன்டென்கிரோ, க்ரோஷியா
ஆபிரிக்கா – தென்னாபிரிக்கா மற்றும் ஷீசெல்ஸ்
உங்கள் இலவச பயணப்பொதி கொடுப்பனவை மீறும் நிறைக்கு / ஒவ்வொரு துண்டத்துக்கும் நீங்கள் கட்டணம் செலுத்தல் வேண்டும்.
| விமான வகுப்பு | மேலதிக நிறைக்கான கட்டணங்கள் 23 – 32கிலோகிராம் | மேலதிக துண்டத்துக்கான கட்டணம் | மேலதிக துண்டத்துக்கான ஆகக்கூடிய நிறை |
|---|---|---|---|
| முதல் / பிஸ்னஸ் வகுப்பு | - | அ.மெ.டொ 250 | 32 கிலோகிராம் |
| எக்கனமி வகுப்பு | அ.மெ.டொ 75 | அ.மெ.டொ 250 | 32 கிலோகிராம் |
மேலதிக நிறைக்கட்டணம் - உங்கள் பையின் அதிகரிக்கும் 23 கிலோகிராம் முதல் 32 கிலோகிராம் வரைக்கானது . கட்டணங்கள் ஒவ்வொரு பைக்கும் அறவிடப்படும்.
மேலதிக துண்டத்தின் பருமன் வழக்கத்திலுள்ள பயணப்பொதி தேவைப்பாடுகளுடன் இணைந்ததாக கவனத்திற் கொள்ளப்படும். மேலதிக தகவல்களுக்கு தயவுசெய்து பயணப்பொதி கொடுப்பனவைப் பார்வையிடவும்.
நடமாடும் சாதனங்களின் உதவி தேவைப்படும் பயணிகள் அவர்கள் பயணம் செய்யும் வகுப்புக்கு அமைய வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் தமது பயணப் பொதிகள் மற்றும் கைப்பொதிகளுக்கு மேலதிகமாக இவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல முடியும். (நிபந்தனைகள் நடைமுறையில்).
பெரிய அல்லது பாரமான பொருட்கள் (உ+ம் சக்கர வண்டிகள்) பயணப் பொதிகளுடனேயே எடுத்துச் செல்லப்படல் வேண்டும். விமானநிலையம் (களில்) விசேட ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காக தயவுசெய்து உங்கள் தேவைகளை முற்பதிவின்போதே குறிப்பிடவும்.
ஸ்ரீலங்கன் விமானசேவைகளில் aircraft mode (Flight Mode) இல் அல்லது செய்மதி தொடர்பாடல் வசதியுடைய விமானங்களில் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி இரு சந்தர்ப்பங்களின்போதும் விமானம் வழிகாட்டும் சாதனத்துடன் தொடர்புபட்டிருக்கும் தருணங்களின்போதும் இதன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்படும்.
ஸ்ரீலங்கன் விமானசேவையின் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக லித்தியம் மின்கலங்களால் மின்னேற்றப்பட்ட சிறிய வாகனங்கள் ( Air wheels, Solo wheels, Hover boards, Mini segways, Balance wheels) ஆகியன பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமான பொருட்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் பயணப்பொதிகளில் அல்லது விமானத்திற்குள் எடுத்துச் செல்லப்படும் பைகளில் இதனைக் கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கன் விமானசேவை முற்றாக தடை விதித்துள்ளது.
இதுபோன்ற பொருட்களைக் கொண்டு செல்ல விரும்பும் பயணிகள் தயவுசெய்து ஸ்ரீலங்கன் விமானசேவையின் அபாயகரமான பொருட்கள் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களினூடாக தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி : 1094 19733 2455
மொபைல் : 1094 71021 2455
மின்னஞ்சல் : cargodg@srilankan.com
மூட்டையாகக் கட்டப்பட்ட பயணப்பொதிகளை ( இசைக்கருவிகள் , இராஜதந்திர ரீதியான தபால்கள்) நாம் பயணிகள் ஆசனத்தில் ஏற்றுக் கொள்வோம். பயணிகள் ஆசனத்தில் “ ஆசனப் பயணப்பொதியாக” ஆகக்கூடியது 75 கிலோகிராம் நிறை வரை அனுமதிக்கப்படும்.
அனுமதிக்கப்படும் 75 கிலோகிராம் நிறைக்கு மேலதிகமாக வழங்கப்படும் பயணப்பொதி கொடுப்பனவுடன் இந்த மூட்டைப் பொதி பொருந்தாது என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.
நடைமுறையிலுள்ள பயணக் கட்டணம் மற்றும் விமானசேவை நிபந்தனைகளை தயவுசெய்து உங்கள் பயணச்சீட்டு முகவரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
கொள்கை மற்றும் கட்டணங்கள்
எடுத்துச் செல்லக்கூடிய நிறை – வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நோக்கிச் செல்லும் / அங்கிருந்து வரும் பயண இலக்குகள் தவிர்ந்தது.
எடுத்துச் செல்லக்கூடிய துண்டங்கள் - வடக்கு , மத்திய மற்றும் தென் அமெரிக்காவை சென்றடையும் / அங்கிருந்து வரும் பயண இலக்குக்கானது.
| பொருள் | அனுமதிக்கப்பட்ட நிறை மற்றும் கட்டணம் | அனுமதிக்கப்பட்ட துண்டங்கள் மற்றும் கட்டணம் | குறிப்புரை |
|---|---|---|---|
| கோல்ப் உபகரணம் | ஆகக்கூடியது 15 கிலோகிராம். கட்டணங்கள் 15 கிலோகிராமிற்கு பதிலாக 6 கிலோகிராமிற்கே அறவிடப்படும். விமானநிலையத்தில் நடைமுறையிலுள்ள கட்டணத்துக்கு அமைவாக இதன் கட்டணங்கள் அமையும். நிறை 15 கிலோகிராமிலும் அதிகரிக்குமாயின் உபகரணத்தின் மொத்த நிறைக்கான கட்டணம் அறவிடப்படும். | ஒரு தொகுதி 250 அ.மெ.டொ. ஆகக்கூடிய நிறை 32 கிலோகிராம் | ஒரு தொகுதியினை இலவச பயணப்பொதி கொடுப்பனவுக்குள் உள்ளடக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகள் கொண்டு செல்லப்படுமாயின் ஏனைய தொகுதிகளுக்கு வழமையான மேலதிக பயணப்பொதிக் கட்டணங்கள் அறவிடப்படும். |
| பனிப்பாறை சறுக்கும் உபகரணம் | ஆகக்கூடியது 11 கிலோகிராம். கட்டணங்கள் 11 கிலோகிராமிற்கு பதிலாக 3 கிலோகிராமிற்கே அறவிடப்படும். நிறை 11 கிலோகிராமிலும் அதிகரிக்குமாயின் உபகரணத்தின் மொத்த நிறைக்கான கட்டணம் அறவிடப்படும். | ஒரு தொகுதி 250 அ.மெ.டொ. ஆகக்கூடிய நிறை 32 கிலோகிராம் | ஒரு தொகுதியினை இலவச பயணப்பொதிக் கொடுப்பனவுக்குள் உள்ளடக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகள் கொண்டு செல்லப்படுமாயின் ஏனைய தொகுதிகளுக்கு வழமையான மேலதிக பயணப்பொதிக் கட்டணங்கள் அறவிடப்படும். |
| நீரில் மூழ்குவதற்கான (டைவிங்) உபகரணங்கள் | இலவச பயணப்பொதிக் கொடுப்பனவிலும் அதிகரிக்கும் ஏனைய அனைத்து நிறைகளும் மேலதிக பயணப்பொதிக் கட்டணத்துக்கமைய அறவிடப்படும். | ஒரு தொகுதி 250 அ.மெ.டொ. ஆகக்கூடிய நிறை 32 கிலோகிராம் | ஒரு தொகுதயினை இலவச பயணப்பொதிக் கொடுப்பனவுக்குள் உள்ளடக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகள் கொண்டு செல்லப்படுமாயின் ஏனைய தொகுதிகளுக்கு வழமையான மேலதிக பயணப்பொதிக் கட்டணங்கள் அறவிடப்படும். குறிப்பு :நீரில் மூழ்குவதற்கான உபகரணங்களுக்குள் அதற்கான ஆடை , காலுறை, சப்பாத்து, காலுக்கான செட்டைகள் , முகமூடி , மூச்சுக் குழாயுடன் கூடிய கண்ணாடி, மின்குமிழுடனான ஒளிவிளக்கு , துண்டிக்கப்பட்ட மின்கலம், ஒட்சிசன் தாங்கி (வெற்று) மற்றும் அதனை ஒழுங்குபடுத்தும் கருவி ஆகியன உள்ளடங்கும். |
| பாய்மர மிதவைச் சறுக்கு உபகரணம் | இலவச பயணப்பொதிக் கொடுப்பனவிலும் அதிகரிக்கும் ஏனைய அனைத்து நிறைகளும் மேலதிக பயணப் பொதிக் கட்டணத்துக்கமைய அறவிடப்படும். | ஒரு தொகுதி 250 அ.மெ.டொ. ஆகக்கூடிய நிறை 32 கிலோகிராம் | ஒரு தொகுதியினை இலவச பயணப்பொதிக் கொடுப்பனவுக்குள் உள்ளடக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகள் கொண்டு செல்லப்படுமாயின் ஏனைய தொகுதிகளுக்கு வழமையான மேலதிக பயணப்பொதிக் கட்டணங்கள் அறவிடப்படும். குறிப்பு : பாய்மர மிதவைச் சறுக்கு உபகரணமானது பலகை , பாயின் அடிப்புறத்தை நீட்டிப் பிடிக்க உதவும் மரச்சட்டம் மற்றும் பாய் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். |
| சைக்கிள்கள் | இலவச பயணப்பொதிக் கொடுப்பனவிலும் அதிகரிக்கும் ஏனைய அனைத்து நிறைகளும் மேலதிக பயணப்பொதிக் கட்டணத்துக்கமைய அறவிடப்படும். | ஒரு தொகுதி 250 அ.மெ.டொ. ஆகக்கூடிய நிறை 32 கிலோகிராம் | ஒன்றை இலவச பயணப்பொதிக் கொடுப்பனவாக உள்ளடக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட சைக்கிள்கள் கொண்டு செல்லப்படுமாயின் ஏனைய சைக்கிள்களுக்கு வழமையான மேலதிக பயணப்பொதிக் கட்டணங்கள் அறவிடப்படும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைவாக இவை ஏற்றுக்கொள்ளப்படும்
|
வீட்டு மிருகங்களான நாய்கள், பூனைகள், பறவைகள், முயல்கள் மற்றும் அலங்கார மீன்கள் ஆகியன பயணப்பொதிகளுக்கூடாக விமானத்தில் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். வழமைக்கு மாறான அளவு அல்லது தன்மை கொண்ட மிருகங்களான குரங்குகள், பாம்புகள் போன்றவை பயணப்பொதிகளுக்கூடாக எடுத்துச் செல்லப்பட முடியாது. இவை ஸ்ரீலங்கனின் சரக்குப் பிரிவுக்கூடாகவே கையாளப்படும். தடைவிதித்தல் / நிபந்தனைகள் அமுலில் இருக்கும்.
ஸ்ரீலங்கன் விமானசேவையின் சில விமானங்களில் உள்ள சரக்குப் பிரிவானது செல்லப்பிராணிகளைக் கொண்டு செல்வதற்கு ஏதுவான தகுந்த வெப்பநிலையைக் கொண்டிருக்காது. எனவே, விமானத்தில் நீங்கள் கொண்டு செல்லவிருக்கும் செல்லப் பிராணி குறித்து உங்களின் பயணச்சீட்டு முகவருக்கு தெரியப்படுத்துவதன் மூலம் செல்லப்பிராணியின் பயணத்திற்கு ஏற்ற வசதியினைக் கொண்ட விமானமொன்றை ஒழுங்கு செய்க. நீங்கள் பயணம் செய்ய விரும்பும் திகதிகளில் உங்கள் செல்லப்பிராணியின் தேவையை ஈடு செய்யக்கூடிய வசதி கொண்ட விமானங்கள் எம்மிடம் இல்லாத சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
பயணப் பொதிகளுக்கூடாக கொண்டு செல்லப்படும் செல்லப்பிராணிகளுக்கு பொதுவாக மேலதிக பயணப்பொதிக் கட்டணம் அறவிடப்படும். எனினும் செல்லப்பிராணி , கொள்கலன் (கூடு), உணவுப் பொருட்கள் என்பன இலவச பயணப்பொதி கொடுப்பனவின் கீழ் செல்லுபடியாகாது.
பயணி அனைத்துப் பயண இலக்குகள் மற்றும் விமானம் மாறிச் செல்லும் இடங்களில் சுங்கத் திணைக்களம் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய தேவைப்பாடுகளுடன் இணங்கி நடப்பதற்கு முழுமையான பொறுப்புடையவராவார். செல்லுபடியாகும் தடுப்பூசிச் சான்றிதழ், இறக்குமதி / ஏற்றுமதி / விமானம் மாறுவதற்கான அனுமதிகள் உள்ளிட்ட அவசியமான ஆவணங்கள் விமான நிலையம்(கள்) மற்றும் இட ஒதுக்கீட்டின்போது சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
வெவ்வேறு விமானங்கள் மூலம் பயணத்தை மேற்கொள்ள இருக்கும் பயணிகள் அடுத்த விமானத்திலும் தனது செல்லப் பிராணி தொடர்ந்து பயணிக்கும் என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கன் விமானசேவையானது தனது விமானங்கள் பயணிக்கும் இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும் செல்லப்பிராணிகளுக்கு மாத்திரமே பொறுப்பு வகிக்கும்.
செல்லப் பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கு ஏற்றுக் கொள்வதென்பது பயணி மிருகத்துக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவே அமையும். ஸ்ரீலங்கன் விமானசேவையானது மிருகம் அல்லது பறவைக்கு ஏற்படக்கூடிய காயம், இழப்பு, சுகயீனம் அல்லது இறப்பு ஆகியவற்றுக்கும் விமானங்கள் மாறிச் செல்லும் இடங்கள் மற்றும் / அல்லது பயண இலக்கில் நாயின் உள்வருகைக்கு மறுப்புத் தெரிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கன் விமானசேவை அதனை பொறுப்பேற்க மாட்டாது. இச்சந்தர்ப்பத்தில் உங்களின் பயணச்சீட்டு முகவரிடம் நடைமுறையிலுள்ள நிபந்தனைகளை அறிந்து கொள்ளுங்கள்.
பார்வைத்திறன் அல்லது செவித்திறனற்ற அவன் / அவள் உண்மையில் நாய் ஒன்றில் தங்கியிருப்பார்களாயின் மாத்திரம் குறித்த பயணியுடன் சேவை வழங்கும் மிருகங்கள் (பார்க்கும் கண்கள் / கேட்கும் நாய்கள்) செல்வதற்கு அனுமதிக்கப்படும். இவ்வாறான நாய் எவ்வித மேலதிக கட்டணமுமின்றி விமானத்தின் பிஸ்னஸ் அல்லது எக்கனமி வகுப்பில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும். எவ்வாறாயினும் சேவை வழங்கும் மிருகங்களை விமானத்தில் கொண்டு செல்லும்போது உயிருள்ள மிருகங்களுக்கான IATA ஒழுங்குவிதி முறைகள் அமுலில் இருக்கும்.
புறப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கன் விமானசேவைக்குத் தெரியப்படுத்தவும்.
புறப்படுவதற்கு ஆகக்குறைந்தது 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமானத்திற்காக செக் - இன் செய்யவும்.
குறித்த மிருகமானது தனது மாற்றுத்திறனுக்கு உதவும் வகையில் சேவை வழங்குவதாக பயணி நம்பகத்தன்மையுடன்கூடிய வாய்மூல உறுதி மொழியை வழங்கும் வகையில் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். விமானப் பயணத்தின்போது தன்னுடன் வரும் மிருகத்தை விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் அதேபோன்று நாயினுடைய கழிவுகளால் விமானத்திற்குள் சுகாதார மற்றும் கழிவகற்றல் பிரச்சினை ஏற்படாத வகையில் சமாளிக்க முடியுமென்றும் பயணி உறுதி செய்ய வேண்டும். அவன் / அவள் இதற்கு தேவைப்படும் உறிஞ்சும் அல்லது ஏனைய அவசியமான துடைப்பான்களை தம்முடன் எடுத்துச் செல்லல் வேண்டும்.
விமானப் பயணத்திற்கு முன்பாக நாய்க்கு அவசியமான உடற்பயிற்சியினை வழங்குவதுடன் உள்ளெடுக்கும் திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தனது நாய் விமானப் பயணத்திற்குத் தயாராக இருப்பதனை பயணி உறுதி செய்ய வேண்டும்.
சேவை வழங்கும் மிருகமானது நடை பாதை அல்லது அவசர வெளியேறுகையினை குறுக்கிடும் வகையில் அல்லது பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கூடிய பயணியின் கால் வசதியைப் பாதிக்கும் வகையில் அமர்த்தப்படுதல் கூடாது. சேவை வழங்கும் மிருகத்தின் செயற்பாடுகளில் குழப்பம் ஏற்படுமாயின் அல்லது பயணியின் காலடியில் அல்லது ஆசனத்தின்கீழ் அவருக்கான இடவசதியில் இடையூறினை ஏற்படுத்தாத வகையில் அமர்த்த முடியாமல் உருவத்தில் பெரியதாக இருப்பின் அல்லது அமரும்போது நடை பாதையை சிறிதளவேனும் தடுக்குமாயின் குறித்த நாய் கூட்டில் ( பயணியினால் வழங்கப்படுவது) விமான சரக்குப் பிரிவினூடாகக் கொண்டு செல்லப்படல் வேண்டும். இம்முறை முற்றிலும் இலவசமாகும். சேவை வழங்கும் மிருகத்தின் பாதுகாப்பிற்காக வெப்பநிலையை மாற்றம் செய்வதனை உறுதி செய்யும் வகையில் நாயின் கூடானது IATA இற்கு அமைய நாய்க்கூட்டின் அமைப்பு முறை மற்றும் அளவினை பூர்த்தி செய்வதாக அமைதல் வேண்டும். ஸ்ரீலங்கன் விமானத்தில் ஒரேயொரு சேவை வழங்கும் மிருகம் மாத்திரமே முற்பதிவு செய்வதற்கும் பயணிப்பதற்கும் அனுமதிக்கப்படும்.
ஸ்ரீலங்கன் விமானசேவையின் சில விமானங்களிலுள்ள சரக்குப் பிரிவில் தகுந்த வெப்பநிலையை ஏற்படுத்த முடியாமை காரணமாக உயிருள்ள மிருகங்களைக் கொண்டு செல்வதற்கு தட்டுப்பாடுகள் ஏற்படலாம். விமானசேவையின் சரக்குப் பிரிவில் சேவை வழங்கும் மிருகத்தைக் கொண்டு செல்ல நேரிடுமாயின் ஏமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக சேவை வழங்கும் மிருகத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முற்பதிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.
பயணியானவர் அனைத்துப் பயண இலக்குகள் மற்றும் விமானம் மாறிச் செல்லும் இடங்களில் சுங்கத் திணைக்களம் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய தேவைப்பாடுகளுடன் இணங்கி நடப்பதற்கு முழுமையான பொறுப்புடையவராவார். செல்லுபடியாகும் தடுப்பூசிச் சான்றிதழ், இறக்குமதி / ஏற்றுமதி / விமானம் மாறுவதற்கான அனுமதிகள் உள்ளிட்ட அவசியமான ஆவணங்கள் விமான நிலையம்(கள்) மற்றும் இட ஒதுக்கீட்டின்போது சமர்பிக்கப்படுதல் வேண்டும்.
வெவ்வேறு விமானங்கள் மூலம் பயணத்தை மேற்கொள்ள இருக்கும் பயணிகள் அடுத்த விமானத்திலும் தனது செல்லப் பிராணி தொடர்ந்து பயணிக்கும் என்பதனை உறுதிசெய்து கொள்ளல் வேண்டும். ஸ்ரீலங்கன் விமானசேவையானது தனது விமானங்கள் பயணிக்கும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் செல்லப்பிராணிகளுக்கு மாத்திரமே பொறுப்பு வகிக்கும்.
பயணி தனது பயணத்திற்கான ஆவணங்களை முறையாகச் சமர்பிக்காமை காரணமாக ஏதேனும் ஒரு நாட்டிற்குள் நாயின் உள்வருகைக்கு மறுப்புத் தெரிவிக்கப்படுமாயின் விமானசேவை அதனைப் பொறுப்பேற்க மாட்டாது.
சேவை வழங்கும் மிருகம் பயணியுடன் விமானத்தில் செல்லும்போது அதன் சுகாதாரம் மற்றும் நலன் குறித்து ஸ்ரீலங்கன் விமானசேவை பொறுப்பு வகிக்க மாட்டாது. விமானப் பயணத்தின்போது, முன்னர், மற்றும் பின்னர் ஏற்படக்கூடிய காயம், சுகயீனம் மற்றும் / அல்லது இறப்புக்கு அதன் உரிமையாளரே பொறுப்பு வகித்தல் வேண்டும்.
உங்களின் சேவை வழங்கும் மிருகம் விமானத்தில் உங்களுடன் பயணிக்கும்போது ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்ப்பதற்காக கீழ்வரும் வழிகாட்டல்களுடன் நீங்கள் ஒழுகுவதனை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
உங்களதும் உங்கள் உடமைகளின் பாதுகாப்பான பயணத்துக்கும் நாம் முன்னுரிமை அளிக்கின்றோம். இடையூறின்றிய பயணப்பொதி விநியோகத்தை உறுதி செய்து கொள்வதற்கு கீழ்வரும் அறிவுறுத்தல்களைக் கவனமாக வாசிக்கவும்.
ஓரே நாட்டிற்குள் காணப்படும் விமான நிலையங்களில் பயணப்பொதிகள் ஒன்றிணைக்கப்பட மாட்டாது.
அபாயகரமான பொருட்கள் மற்றும் ஆபத்தான மூலப்பொருட்கள் அவற்றின் இரசாயன அல்லது பௌதீகத் தன்மை காரணமாக விமானம், அல்லது விமானத்திற்குள் இருக்ககூடிய நபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். இவ்வாறான பொருட்களின் போக்குவரத்தானது சிவில் விமான ஒழுக்க நெறிகளின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. லித்தியம் மின்கலங்களால் மின்னேற்றப்பட்ட அனைத்து சிறிய வாகனங்களையும் பயணப் பொதிகளில் அல்லது கைப்பையில் கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கன் விமானசேவை தடைவிதித்துள்ளது.
உங்களுடன் நீங்கள் எடுத்து வர விரும்பும் பொருட்கள் விமானப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுமா என்பதனை கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்துத் தீர்மானியுங்கள்.
ஆம் - அனுமதிக்கப்பட்டது அல்லது விமானசேவையின் அனுமதி அவசியம் இல்லை - அனுமதி மறுக்கப்பட்டது
| The pilot-in-command must be informed of the location | ||||
| கைப்பை (ஆக / உள்) அனுமதிக்கப்பட்டது. | ||||
| பயணப்பொதி (ஆக / உள்) அனுமதிக்கப்பட்டது | ||||
| விமானத்தின் அனுமதி அவசியம் | ||||
| மதுசாரம் கலந்த குடிவகைகள், சிறிய அளவில் பொதி செய்யும்போது மதுசாரத்தின் அளவு 24 % இற்கு அதிகமாகவும் 70% இற்கு மேற்படாதவாறும், 5 லீற்றருக்கு அதிகரிக்காமல், தனிநபரொருவருக்கு ஆகக் கூடியது 5 லீற்றராக இருத்தல். | NO | YES | YES | NO |
| ரவைகள் (ஆயுதங்களுக்கான கார்டிஜ்கள்) பாதுகாப்பாகப் பொதி செய்யப்பட்டவை (பிரிவு. 1.4 எஸ் , ஐ.நா 0012 அல்லது ஐ.நா 0014 மட்டும்) குறித்த நபரின் தனிப்பட்ட பாவனைக்காக மொத்த நிறை 5 கிலோவிற்கு மேற்படாததுடன் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கான கொடுப்பனவுகள் ஒன்று அல்லது பல பொதிகளாக இணைக்க முடியாது. | YES | YES | NO | NO |
| பனிப்பாறையில் பாதுகாப்பு வழங்கும் முதுகுப்பை, ஒரு நபருக்கு (1) ஒன்றாக பிரிவு 2.2. மற்றும் 1.4எஸ் இல் குறிப்பிடப்பட்டதன் படி பைரோடெக்னிக் பொறிமுறையில் இயங்கக்கூடிய அழுத்த வாயு அடைக்கப்பட்ட கார்டிஜ் 200 மி.கிரா மேற்படாமல் இருத்தல் வேண்டும். முதுகுப்பை தானாக செயற்படுத்தப்படாதவாறு பொதிசெய்யப்படல் வேண்டும். அதிலுள்ள காற்றுப்பைகள் அமுக்கத்தை விடுவிக்கக்கூடிய வால்வுகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். | YES | YES | YES | NO |
| Baggage with installed lithium batteries non-removable batteries exceeding–0.3 g lithium metal or 2.7 Wh. | FORBIDDEN | FORBIDDEN | FORBIDDEN | FORBIDDEN |
Baggage with installed lithium batteries:
|
NO | YES | YES | NO |
| லித்தியம் உலோகம் உள்ளடக்கப்பட்ட மின்கலங்கள், உதிரிப்பாகங்கள், அல்லது லித்தியம் இரும்புக் கலங்கள் அல்லது மின்கலங்கள். எடுத்துச் செல்லக்கூடிய இலத்திரனியல் சாதனங்கள் கைப்பையில் மாத்திரமே கொண்டு செல்லப்படல் வேண்டும். மின்னேற்ற பயன்படுத்தும் பொருட்கள் உ+ம் பவர்பேங்க் என்பன மின்கலங்களின் உதிரிப்பாகங்களாக கருதப்படும் குறுகிய மின் சுற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இவை தனித்தனியாக பாதுகாக்கப்படல் வேண்டும். | NO | NO | YES | NO |
| கூடாரத்திற்குரிய அடுப்பு மற்றும் தீ பரவக்கூடிய திரவ எரிபொருளைக் கொண்டிருக்கும் கொள்கலன், வெற்று எரிபொருள் தாங்கியாக மற்றும் / அல்லது எரிபொருள் கொள்கலன் (மேலதிக தகவல்களுக்கு 2.3.2.5 ஐப் பார்க்க) | YES | YES | NO | NO |
| இரசாயணப் பொருட்களைக் கண்காணிக்கும் உபகரணம் உத்தியோகபூர்வ பயணத்தின்போது தடைசெய்யப்பட்டுள்ள இரசாயண ஆயுதங்களுக்காக அமைப்பின் பணியாளர்களால் எடுத்துச் செல்லும்போது (பார்க்க 2.3.4.4) | YES | YES | YES | NO |
| செயற்பாட்டை முடக்கும் சாதனங்கள் குழம்பு, மிளகு ஸ்ப்ரே போன்ற எரிச்சல் அல்லது முடக்கும் சூழ்நிலையை உருவாக்குபவை பயணப்பொதி மற்றும் கைப்பையில் எடுத்துச் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. | FORBIDDEN | FORBIDDEN | FORBIDDEN | FORBIDDEN |
| உலர்த்திய ஐஸ் (கார்பன் டயொக்சைட்டின் திண்ம வடிவம்) அளவில் ஒரு நபருக்கு 2.5 கிலோவிலும் அதிகரிக்காமல் இருப்பதுடன் ஒழுங்கு விதிகளுக்கு அப்பால் பயணப்பொதி / கைப்பொதியில் கொண்டுசெல்லும் பழுதடையக் கூடியவற்றுடன் சேர்த்து பொதிசெய்கையில் கார்பன் டயொக்சைட் வாயுவின் வெளியேற்றம் குறித்து அதற்குரிய அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடுக. பயணப்பொதியில் ‘உலர் ஐஸ்’ / ‘கார்பன் டயொக்சைட் , திண்மம்’ மொத்த நிறை 2. 5 கிலோ / அதிலும் குறைவு என்றும் குறிப்பிடுக. | YES | YES | YES | NO |
| ஈ- சிகரட்கள் (ஈ - சிகார்ஸ் , ஈ - பைப்கள், ஏனைய தனிப்பட்ட உறிஞ்சிகள்) கொள்கலன் கொண்டவை சுயமாக இயங்குவதை தடுக்கும் வகையில் தனிப்பட்ட முறையில் பாதுகாக்கப்படல் வேண்டும். | NO | NO | YES | NO |
| மின் அதிர்ச்சியளிக்கும் ஆயுதங்கள் (உ + ம் Tasers ) வெடிப்பொருட்கள், அழுத்த வாயு, லித்தியம் மின்கலங்கள் போன்றவை உள்ளடக்கப்பட்ட அபாயகரமான பொருட்கள் தனி நபரிடம் / பயணப்பொதியில் / கைப்பையில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. | FORBIDDEN | FORBIDDEN | FORBIDDEN | FORBIDDEN |
| எரிபொருள் கலங்கள் மற்றும் எரிபொருள் கார்டிஜ் உதிரிப்பாகங்கள் கையில் எடுத்துச் செல்லக் கூடிய இலத்திரனியல் உபகரணங்கள் (புகைப்படக் கருவி, மொபைல் போன், மடிக் கணினி, ஒளிப் பதிவுக் கருவி) மேலதிக தகவல்களுக்கு 2.3.5.10 இனைப் பார்க்க | NO | YES | YES | NO |
| Fuel cell cartridges, spare for portable electronic devices, see 2.3.5.10 for details. | NO | YES | YES | NO |
| தீபற்றாத, சிறிய, வாயு கார்டிஜ்கள் பிரிவு 2.2. இன்படி கார்பன் டயொக்சைட் / ஏனைய பொருந்தக்கூடிய வாயு உள்ளடங்கியவை பாதுகாப்பு அங்கி / உள்ளாடை போன்ற சுய பாதுகாப்புச் சாதனத்தில் ஆகக்கூடியது 2 சிறிய கார்டிஜ்கள் வரை பொருத்தப்படலாம். ஒரு பயணிக்கு ஒன்றுக்கு (1) மேற்படாத சாதனம், ஒரு நபருக்கு 2 வரை சிறிய கார்டிஜ் உதிரிப்பாகங்களுடன், 50 மி.லீ நீர் கொள்ளளவுடைய ஏனைய சாதனங்களுக்கு நான்கிற்கு (4) மேற்படாத கார்டிஜ்கள் (2.3.4. 2 இனைப் பார்க்க) | YES | YES | YES | NO |
| நச்சற்ற தீப்பற்றாத வாயு சிலிண்டர்கள் இயந்திர உதிரிப்பாகங்களை அணிந்திருப்போரின் செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் அதேநேரம் பயணத்தின்போது போதுமான வழங்கலை உறுதி செய்வதற்காக தேவைப்படின் அதே அளவிலான இன்னுமொரு மேலதிக கொல்கலன். | NO | YES | YES | NO |
| ஹைட்ரோ காபன் வாயு உள்ளடக்கிய மயிர்ச் சுருளிகள், வெப்பமாகும் பகுதியின் மீது கவனமாக பொருத்தப்பட்ட பாதுகாப்பு உறையுடன் பயணி / பணியாளருக்கு ஆகக்கூடியது ஒன்று ( 1). இவை எச்சந்தர்ப்பத்திலும் விமானத்திற்குள் வைத்து பயன்படுத்தப்படக்கூடாது. இச்சுருளிகளுக்கான வாயு நிரப்பிகளை பயணப்பொதி / கைப்பையில் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. | NO | YES | YES | NO |
| வெப்பம் பிறப்பிக்கும் உபகரணங்கள் நீருக்கடியில் பயன்படுத்தும் மின் சூள் (ஒளி விளக்கு) இரும்பினை இணைக்க பயன்படுத்தும் கருவி . (தகவல்களுக்கு 2.3.4.6 இனைப் பார்க்க) | YES | YES | YES | NO |
| குளிரூட்டப்பட்ட திரவ நைட்ரஜனை உள்ளடக்கிய காப்பிடப்பட்ட பொதிகள் ஆபத்தில்லாத பொருட்களை மாத்திரம் உள்ளடக்கிய போரஸ் மூலப்பொருளால் முற்றாக உறிஞ்சப்பட்டது. | NO | YES | YES | NO |
| உள்ளே எரியும் அல்லது எரிபொருள் கல இயந்திரங்கள் A70 க்கு அமைய இருத்தல் வேண்டும். (தகவல்களுக்கு 2.3.5.15 இனைப் பார்க்க) | NO | YES | NO | NO |
| சக்தி சேமிப்பு மின் விளக்குகள் தனிநபர் அல்லது வீட்டுப் பாவனைக்காக மாத்திரம் சிறிய அளவில் பொதிசெய்யப் படலாம். | NO | YES | YES | NO |
| லித்தியம் மின்கலங்கள்: லித்தியம் மின்கலங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வகை உபகரணங்கள். (தகவல்களுக்கு 2.3.2.6 பார்க்க) | YES | YES | NO | NO |
| லித்தியம் மின்கலங்கள்: லித்தியம் உலோகம், லித்தியம் இரும்புக் கலங்கள், லித்தியம் மின்கலங்கள் உள்ளடக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லக்கூடிய இலத்திரனியல் உபகரணங்களான புகைப்படக்கருவி, மொபைல், மடிக்கணினி, வரைபட்டிகை கையில் கொண்டு செல்லக் கூடிய ஒக்சிஜன் வழங்கும் கருவி போன்றவற்றை பயணிகள் / பணியாளர்கள் தனிப்பட்ட பாவனைக்காக எடுத்துச் செல்லும்போது (பார்க்க 2.3.5.9). லித்தியம் உலோக மின் கலங்களாயின் மின் கலங்கள் 2 கிராமிற்கும் லித்தியம் இரும்பு மின் கலங்களாயின் 100 வாட்டிலும் மேற்படாமலும் இருத்தல் அவசியம். | NO | YES | YES | NO |
| லித்தியம் மின்கலங்கள் , உதிரிப்பாகங்கள், மணித்தியாலத்திற்கு வாட் என்ற அடிப்படையில் 100 வாட்டுக்கு மேலதிகமாகவும் 160 வாட்டுக்கு மேற்படாதவாறும் பயணிகள் இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் PMED / லித்தியம் உள்ளடக்கமானது 2 கிராமிலும் அதிகமாகவும் PMED 8 கிராமிற்கு மேற்படாமலும் இருப்பதுடன், பயணப்பொதிகளில் ஆகக் கூடியது 2 மின் கலங்களின் உதிரிப் பாகங்கள் மட்டும். குறுகிய மின் சுற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இவை தனித்தனியாகப் பாதுகாக்கப்படல் வேண்டும். | YES | NO | YES | NO |
| லித்தியம் மின்கலங்களால் மின்னேற்றப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் கையில் எடுத்துச் செல்லும் இலத்திரனியல் சாதனங்களுக்கான லித்தியம் இரும்பு மின் கலங்கள் (மருத்துவம் உள்ளிட்டது) 100 வாட்டிலும் அதிகமாகவும் 160 வாட்டிலும் மேற்படாமலும் இருக்க வேண்டும். கையில் எடுத்துச் செல்லக் கூடிய மருத்துவ இலத்திரனியல் சாதனங்களுக்கு மாத்திரம் 2 கிராமிற்கு அதிகமாகவும் 8 கிராமிலும் மேற்படாதவாறும் லித்தியம் உள்ளடக்கிய லித்தியம் இரும்பு மின் கலங்கள். | YES | YES | YES | NO |
|
பாதுகாப்பான சிறிய தீப்பெட்டி, (ஒரு சிறிய பக்கற்) / சிகரட்டுக்கு தீ மூட்டும் ஒரு சிறிய கருவியானது (லைட்டர்) தனிப்பட்ட நபரினால் அவரது பாவனைக்காக எடுத்துச் செல்லும்போது உறிஞ்சும் தன்மையிழந்த திரவ எரிபொருள் மட்டுமன்றி திரவ வாயுக்களை கொண்டிருத்தல் ஆகாது. தனிநபர் / பயணப்பொதி / கைப்பையில் லைட்டருக்கான எரிபொருள் மற்றும் மாற்று நிரப்பிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பு: “ “Strike anywhere” தீப்பெட்டிகள், “Blue flame” / “Cigar” லைட்டர்ஸ் தடைசெய்யப்பட்டுள்ளன. |
NO | ON ONE’SPERSON | ON ONE’S PERSON | NO |
| நடமாடும் சாதனங்கள்: கசிவுத் தன்மையற்ற ஈரலிப்பான மின்கலங்கள் / விசேட பிரிவுடன் A123 or A199 (பார்க்க 2.3.2.2) இணங்கக்கூடிய மின் கலங்களில் இயங்கும் சக்கர வண்டிகள் / அதற்கு ஒப்பான ஏனைய நடமாடும் சாதனங்கள். | YES | YES | NO | YES |
| நடமாடும் சாதனங்கள்: கசிவுத் தன்மையுடைய மின்கலங்கள் அல்லது லித்தியம் மின்கலங்களால் இயங்கும் சக்கரவண்டிகள் அல்லது அதற்கு ஒப்பான ஏனைய நடமாடும் சாதனங்கள். (தகவல்களுக்கு 2.3.2.3 மற்றும் 2.3.2.4 இனைப் பார்க்க) | YES | YES | NO | YES |
| நடமாடும் சாதனங்கள்: லித்தியம் இரும்பு மின் கலத்தால் இயங்கும் (கழற்றக் கூடியது) நடமாடும் சாதனங்களின் லித்தியம் இரும்பு மின் கலமானது கழற்றப்பட்ட பின்னரே விமானத்தில் எடுத்துச் செல்லப்படல் வேண்டும். ( தகவல்களுக்கு 2.3.2.4 (d) இனைப் பார்க்க) | YES | NO | YES | NO |
| ரேடியோ கதிர்வீச்சு இல்லாத மருத்துவ அல்லது மலசலகூட உபகரணங்களான (வாசனைத் திரவியம் உள்ளடக்கப்பட்டது) தலைமயிர் ஸ்ப்ரே, வாசனைத் திரவியம், கொலோன், மதுசாரம் உள்ளடங்கிய மருந்துகள் மற்றும் | NO | YES | YES | NO |
| தீப்பற்றாத, நச்சு அல்லாத வாசனைத் திரவியங்கள் 2.2 பிரிவின்படி, ஆபத்தற்றவை விளையாட்டு மற்றும் வீட்டுப் பாவனைக்காக மேற்படி பொருட்களின் மொத்த அளவானது 2 கிராம் / 2 லீற்றரிலும் அதிகரிக்காத அதேநேரம் அதன் ஒவ்வொன்றும் 0.5 கிராம் / 0.5 லீற்றரிலும் மேற்படக்கூடாது. இதனை வெளியேற்றும் பகுதியானது பாதுகாப்பான மூடி / பொருத்தமான ஒன்றினால் இறுக்கமாக மூடப்பட்டிருத்தல் வேண்டும். | NO | YES | NO | NO |
| ஒக்சிசன் அல்லது வளி / வாயு சிலிண்டர்கள் மருத்துவ பாவனைக்குரியது. சிலிண்டரின் மொத்த நிறையானது 5 கிலோவிலும் அதிகரிக்க முடியாது. குறிப்பு: திரவ ஒக்சிசன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. | YES | YES | YES | NO |
| ஊடுறுவல் சாதனங்கள், A41 இற்கமைய இருத்தல் வேண்டும். (தகவல்களுக்கு 2.3.5.1 6 இனைப் பார்க்க) | NO | YES | NO | NO |
| கசியாத மின்கலங்களுடனான இலத்திரனியல் சாதனங்களில் மின்கலங்கள் A67 இற்கு அமைய இருப்பதுடன் 12 வோல்ட் / அதிலும் குறைவாகவும் 100 வாட் / அதிலும் குறைவாகவும் இருப்பதுடன் மேலதிகமாக ஆகக்கூடியது 2 மின் கலங்களை எடுத்துச் செல்லலாம். (தகவல்களுக்கு 2.3.5.13 இனைப் பார்க்க) | NO | YES | YES | NO |
| ரேடியோ கதிரில் இயங்கும் இருதய பேஸ்மேக்கர் / ஏனைய சாதனங்கள், லித்தியம் மின் கலங்களால் இயங்குபவை தனிநபருள் / வெளியில் பொருத்தப்பட்டிருப்பின் / மருத்துவ சிகிச்சை காரணமாக ஒரு நபருள் பொருத்தப்பட்டிருக்கும் ரேடியோ கதிர் வீச்சுடைய உபகரணங்கள் | NO | NO ONE’SPERSON | NO ONE’SPERSON | NO |
| பாதுகாப்புக் காரணமாக ஒட்டக் கூடிய கேஸ், பணப் பெட்டிகள், பணப் பைகள் ஆகியவற்றில் லித்தியம் மின் கலங்கள், பைரோடெக்னிக் மூலப்பொருள் போன்ற ஆபத்தான பொருட்கள் உள்ளடக்கப்பட்டவை தொடர்பில் 2.3.2.6 இல் குறிப்பிடப்பட்டதற்கு அப்பால் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான பொருட்களின் பட்டியலைப் பார்வையிடவும். | FORBIDDEN | FORBIDDEN | FORBIDDEN | FORBIDDEN |
| பரவும் தன்மையற்ற மாதிரி மூலப்பொருட்கள் தீப்பற்றக் கூடிய திரவத்தன்மை கொண்ட சிறிய அளவில் பொதி செய்யப்பட்டவை A180 உட்பட்டதாக இருத்தல் அவசியம்.( தகவல்களுக்கு 2.3.5.14 பார்க்க) | NO | YES | YES | NO |
| வெப்பமானி மருத்துவ / சிகிச்சைக்கானது பாதரசம் கொண்டது, தனிநபர் பாவனைக்காக ஒருவருக்கு ஒன்று (1 ) என்ற அடிப்படையில் பாதுகாப்பான முறையில் | NO | YES | YES | NO |
| பாதரசம் நிரம்பிய வெப்பமானி / பாரமானி அரசாங்கத்தின் பணியக / ஒப்பான முகவர் நிலையத்தின் பிரதிநிதியொருவரால் எடுத்துச் செல்லப்படும்போது (தகவல்களுக்கு 2.3.3.1 இனைப் பார்க்க) | YES | NO | YES | NO |
*Power Banks are permitted in carry- on baggage only. Passenger who travel with smart bag ( Baggage equipped with a lithium battery) must remove the battery in case the bag has to check-in as hold baggage. If the battery cannot be removed, the bag will not be allowed.
Phones, laptops and tablets larger than 16.0cm x 9.3cm x 1.5cm not allowed in the cabin on flights to the UK from Turkey, Lebanon, Egypt, Saudi Arabia, Jordan and Tunisia.
Passengers are therefore advised to check with their operated airline for further details.
Please see Foreign and Commonwealth Office’s travel advice (https://www.gov.uk/foreign-travel-advice) page and the Department for Transport (https://www.gov.uk/government/organisations/department-for-transport) for more information.
The U.S. Department of Homeland Security (DHS) has issued a security directive requiring passengers on select flights to the United States to place all electronic devices larger than a cell phone or smart phone in their checked luggage with the exception of spare batteries, medical devices and power banks.
This requirement only affects flights departing for the United States from the following 10 specific airports:
There is no impact on domestic flights in the United States or flights departing the United States. Large electronic devices will continue to be allowed in the cabin on all flights originating in the United States.
The new security directive is effective at 8:00 a.m. Eastern Daylight Time on 21 March 2017 and will be in effect indefinitely.
Please refer to the U.S. Department of Homeland Security issued Fact Sheet (https://www.dhs.gov/news/2017/03/21/fact-sheet-aviation-security-enhancements-select-last-point-departure-airports) and FAQ (https://www.dhs.gov/news/2017/03/21/qa-aviation-security-enhancements-select-last-point-departure-airports-commercial) on the new directive.
In accordance with the regulations stipulated by the International Civil Aviation Organisation (ICAO), the following LAGs (liquids, aerosols and gels) restrictions on cabin baggage apply for passengers departing from all airports in Sri Lanka and transiting through other airports.
All liquids, gels and aerosols, pastes, lotions, creams, drinks and other items of similar consistency must be in containers with a capacity no greater than 100ml. Those carried in containers larger than 100ml will not be accepted, even if the container is only part-filled.
These containers must be placed in a transparent re-sealable plastic bag of a maximum capacity not exceeding one liter (20cmx20cm). Larger bags or bags that are non-sealable, such as fold-over sandwich bags, are not allowed. Transparent re-sealable polythene bags will not be provided at the Airport
The containers must fit comfortably within the transparent plastic bag, which is to be completely closed.
The plastic bag is to be presented for visual examination at the screening point. Only one transparent plastic bag per passenger will be permitted.
Exemptions will be made for medications, baby milk / foods and special dietary requirements. Appropriate proof for verifying the nature of such items will be required and must be made available on request at the screening point.
Such plastic bags should be presented apart from other cabin baggage, coats, jackets and laptops to facilitate screening.
LAGs in any volume, purchased at Duty Free outlets at the Airport or on board the aircraft must be carried in the Security Tamper-Evident Bag (STEB) provided by the sales outlet with the purchase receipt included inside the bag. Opened, torn or tampered bags will not be permitted past the screening point.
As per Australian Government regulations, Carriage of LAGS items (liquids, aerosols and gels ) of 100ml or less and permissible number units/items, shall carried in the Tamper proof bag. Any LAGS item above 100ml even if it was purchased from the duty-free, shall not be allowed even if it is carried in the Tamper proof bag. Any such items in possession of passengers on UL direct flights to Australia will be confiscated by AASL Security.
Last updated date – 21st March 2024