விமானக் கட்டமைப்பு

ஸ்ரீலங்கன் விமானசேவை தற்போது நவீன, தனித்துவமான இயல்புகளுடன் கூடிய 21 எயார்பஸ் விமானங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளவை:
பதின்மூன்று எ330 (நீண்ட தூரப் பயணம்)
எட்டு எ320 / எ321 விமானம் (இடைப்பட்ட தூரப் பயணம்)

எயார்பஸ் எ330- 300

எமது புதிய எ330-300 ரக விமானங்கள் இலங்கையின் தனித்துவமான இயல்புகளை பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற வகையில் நவீன அம்சங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதன் உட்பகுதி இலங்கைத் தீவுக்கேயுரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பிரதிபலிக்கும் தொனிப்பொருளினாலான அழகிய சித்திர வேலைப்பாடுகளைக் காணலாம்.

எமது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பிஸ்னஸ் வகுப்பு 35,000 அடி உயரத்திலும் உங்களை வீட்டிலிருப்பதை போலவே உணரச் செய்யும். எமது மேம்படுத்தப்பட்ட பிஸ்னஸ் வகுப்பு கூடுதல் இடவசதி பொழுது போக்கு அம்சங்கள் உங்களுக்கு சொகுசினை அள்ளி வழங்கும் வகையில் கிடையான படுக்ககைகளாக மாற்றியமைக்ககூடிய இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளன. இதில் நீங்கள் முழுமையாக ஓய்வெடுத்தபடி உங்கள் பயணத்தை அனுபவித்து மகிழலாம்.

எமது எக்கனமி வகுப்பும் மிகச்சிறந்த பயண அனுபவத்தை உங்களுக்கு வழங்குகின்றது. ஸ்ரீலங்கன் விமானசேவையின் உபசரிப்பில் சொகுசாக இருந்தபடி நவீன திரைப்படங்களைப் பார்த்து ரசியுங்கள். எமது அனைத்து வகுப்புகளிலும் இலத்திரனியல் உபகரணங்களின் மின்கலங்களை மின்னேற்றுவதற்கான வசதி ஆகியன இருப்பதனால் நீங்கள் விமானத்தில் இருந்தபடியே வை-பை மற்றும் கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பில் இருக்கலாம். ஆகாயத்தில் பறந்தபடி இணையதளத்தில் தேடுங்கள் மின்னஞ்சல் அனுப்புங்கள் நண்பர்களுடன் உரையாடவும் குறுந்தகவல் அனுப்பவும் செய்யுங்கள்.

விமானத் தகவல்


எயார்பஸ் எ330 – 200
ஸ்ரீலங்கன் விமான சேவையினைப் பொறுத்தவரை நீண்ட தூரப்பயணம் என்பது முற்றுமுழுதான ஓய்வினையே குறிக்கிறது. நீங்கள் விமானத்தில் ஏறிய தருணத்திலிருந்து பாதுகாப்பாக தரை இறக்கப்படும் வரை அனைத்து சந்தர்ப்பத்திலும் இது வசதியான பயண அனுபவத்தை உங்களுக்கு வழங்கும். எமது எ 330 விமானம் வசதியான இருக்கை அமைப்பு, பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் அமைதியான சூழலைக் கொண்டிருக்கும். இவை அனைத்தும் மகிழ்ச்சியான பயணத்தை உங்களுக்கு வழங்குவதற்கேயாகும்
விமானத் தகவல்


எயார்பஸ் எ320 / எ321
எமது எ320 விமானங்கள் ஓய்வெடுப்பதற்கு ஏற்ற இருக்கையமைப்பைக் கொண்டவை. இவை குறுகிய மற்றும் இடைப்பட்ட தூரம் பயணம் செய்கின்றன. எமது விமானசேவையில் தற்போது ஆறு எ320 விமானங்களும் இரண்டு எ321 விமானங்களும் குறுகிய மற்றும் இடைப்பட்ட தூரங்களை நோக்கி செயற்படுத்துகின்றன.
விமானத் தகவல்


Airbus A320/A321neo

Step onboard our new A320/A321neo where modernity blends with tradition. With uniquely Sri Lankan motifs adorning the cabin interiors, the all new A320/A321neo cabins are equipped with the modern comforts to provide you a blissful flight.

There will never be a dull moment onboard. With comfortable leather seats and the latest Rave REMIX entertainment system, snuggle up and wind down as you fly. The new A320/A321neo also provide you with mobile connectivity, in-seat power for portable devices and Wifi throughout the flight so that you will never lose touch while on the go.

விமானத் தகவல்
விமானத் தகவல்



Close

flysmiles


More about FlySmiles